கூவம் – அடையாற்றை இணைக்கும் பக்கிங்காம் கால்வாயில் தூர்வாரும் பணி – ஆலோசனை செய்த அமைச்சர்கள்!

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, அடையாறு – கூவம் ஆற்றை இணைக்கும் பக்கிங்காம் கால்வாயில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புனரமைத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இன்று (30/01/2023) சென்னை, தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தலைமையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், சென்னை, அடையாறு கூவம் … Read more

கந்துவட்டி கொடுமை : ரூ.20,000 கடனுக்கு வாரந்தோறும் ரூ.2,000 வட்டி வசூல்.. காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் முதியவர் விரக்தி

நெல்லையில், கந்துவட்டி கொடுமை குறித்து காவல்துறையினரிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, முதியவர் ஒருவர், ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். 80 வயதான ஆறுமுகம், ஓராண்டுக்கு முன் மலையப்பன் என்பவரிடம் வட்டிக்கு 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, அதற்கு வாரந்தோறும் 2000 ரூபாய் வட்டி செலுத்தியுள்ளார். கூலித்தொழிலாளியான ஆறுமுகத்தால் 4 மாதங்களாக வட்டி செலுத்த முடியாததால், மலையப்பன் பல முறை வீட்டிற்கு வந்து ஆறுமுகத்தையும், அவரது மனைவியையும் ஆபாசமாகத் திட்டியதாக கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் … Read more

சென்னை மெட்ரோ பணிகள்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாலையில் பிப்.1 முதல் பிப்.7 வரை போக்குவரத்து மாற்றம்

சென்னை: போட் கிளப் மெட்ரோ ரயில் பணிகள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாலையில் மேற்கொள்ள இருப்பதால், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு வார காலத்திற்கு 01.02.2023 முதல் 07.02.2023 வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவல்: போட் கிளப் மெட்ரோ ரயில் பணிகள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாலையில் மேற்கொள்ள இருப்பதால், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு வார காலத்திற்கு 01.02.2023 முதல் 07.02.2023 வரை … Read more

மேட்டூர் அணை – கூடுதல் நீர் திறக்க வி.கே.சசிகலா வேண்டுகோள்!

மேட்டூரில் இருந்து இன்னும் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அஇஅதிமுக பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் உள்ளிட்ட கடைமடை பகுதிகளைச் சேர்ந்த டெல்டா விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள தாளடி நெற்பயிர்கள் வீணாகிவிடாமல் காப்பாற்றுவதற்காக மேட்டூர் அணையிலிருந்து மேலும் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். டெல்டா விவசாயிகள், மேட்டூரில் … Read more

சர்க்கரை நோய் பாதிப்பால் 8 மாத குழந்தை உயிரிழப்பு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி கார்த்திகா. இவர்களுக்கு ரூபி (3), மரியாஆரோனிக்கா (8 மாத குழந்தை) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளது. இதில் மரியாஆரோனிக்காவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர் குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் குழந்தைக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி குழந்தை நேற்று … Read more

"காந்தியும் உலக அமைதியும்" – சிறப்புப் புகைப்படக் கண்காட்சி தொடக்கம்!

உத்தமர் காந்தியடிகள் அவர்களின் 76-ஆவது நினைவு நாள் “காந்தியும் உலக அமைதியும்” என்ற சிறப்புப் புகைப்படக் கண்காட்சி 30.01.2023 முதல் 05.02.2023 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது. உத்தமர் காந்தியடிகள் அவர்களின் 76-ஆவது நினைவு நாளை முன்னிட்டு. தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30.01.2023) சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள உத்தமர் காந்தியடிகளின் சிலைக்கு மலர் தூவி … Read more

ஆள் கடத்தல் விவகாரங்களில், எப்.ஐ.ஆர் பதிவு செய்ய எஸ்.பி அனுமதி தேவையில்லை – சைலேந்திர பாபு

ஆள் கடத்தல் விவகாரங்களில் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய, எஸ்.பி-க்களின் அனுமதியை பெறத்தேவையில்லை என காவல்துறையினருக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். மேலும், இக்கட்டான நேரங்களில், காலம் தாழ்த்தாமல், துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறும் சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார். தென்காசியில், காதல் திருமணம் செய்த குஜராத்தி பெண்ணின் கணவர் பொதுவெளியில் தாக்கப்பட்டு, அந்த பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில், எப்.ஐ.ஆர் பதிய எஸ்.பி-யிடம் 3 முறை அனுமதி கோரியும், வீடியோ வைரலாகும் வரை அனுமதி வழங்காதது காவல்துறைக்கு பெரிய தர்மசங்கடம் என … Read more

பணி நியமன முறைகேடு | சேலம் பெரியார் பல்கலை.யில் அரசு நியமித்த குழு விசாரணை

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் நியமனம், முறைகேடாக பணியில் சேர்ந்தது குறித்து தமிழ்நாடு அரசு நியமித்த விசாரணை குழுவினர் நேற்று முதல்கட்டமாக ஆவணங்களை ஆய்வு செய்தனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் நியமனம் மற்றும் ஊழியர்கள் முறைகேடாக பணியில் சேர்ந்தது குறித்து புகார் எழுந்தது. இதில், உடற்கல்வி இயக்குனர் நியமனத்தில் பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படாதது, பல்கலைக்கழக நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் இட ஒதுக்கீடு ஆணைப்படி நியமிக்காதது, தமிழ் துறை தலைவர் பெரியசாமி … Read more

வண்டியை திருப்பிய சுதீஷ்: ஈரோட்டை விட டெல்லி முக்கியம் – சேலம் பயணம் இல்லையாமே!

எடப்பாடி பழனிசாமியை சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் அதற்கு சுதீஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தேமுதிக கூட்டணியிலிருந்து விலகியது. பின்னர் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது. அந்த கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தேர்தல் தோல்விக்குப் பின்னர் அமமுக கூட்டணியிலிருந்து … Read more