பழநி தைப்பூசத் திருவிழா: பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் வந்த பக்தர்கள்

பழநி: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு பொள்ளச்சி பணிக்கம்பட்டியை சேர்ந்த பக்தர்கள் மாட்டு வண்டியில் வந்து தரிசனம் செய்தனர். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் ஜன.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடங்கியது. இதை முன்னிட்டு விரதம் இருந்து மாலை அணிந்த பக்தர்கள் பாயாத்திரையாக வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக உள்ளூர் மட்டுமன்றி வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவ்வாறு வரும் பக்தர்கள் சண்முக … Read more

கலைஞரின் பேனா சின்னம்… கருத்து கேட்பு கூட்டத்தில் சீமான் பங்கேற்பு..!

சென்னை மெரினாவில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் எழுத்துகளை குறிக்கும் வகையில் கடலுக்குள் பேனா வடிவ தூண் எழுப்ப திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வந்ததில் இருந்தே இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்தும், கண்டித்தும் வருகிறார். மேலும், என்னை மீட்டி அவர்கள் பேனா தூணை அமைக்க முடியாது என்றும் அவர் கூறியிருந்தார். 81 கோடியில் கட்டப்படவுள்ள இந்த பேனா நினைவுச்சின்னம் மெரினா கடற்கரையில் இருந்து கடலுக்குள் சுமார் 360 மீட்டர் … Read more

வாக்குக்கு பணம்… அமைச்சர்கள் – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உரையாடல் வீடியோ… அண்ணாமலை குற்றசாட்டு

வாக்குக்கு பணம்… அமைச்சர்கள் – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உரையாடல் வீடியோ… அண்ணாமலை குற்றசாட்டு Source link

10ம் வகுப்பு மாணவியை மிரட்டி வன்கொடுமை செய்த பீகார் இளைஞர்.. 10 ஆண்டுகள் சிறை தண்டனை.!

10ம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பீஹார் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகாரில் இருந்து வேலை தேடி வந்த தாய் ஒருவர் தனது மகள் ஒருவருடன் மயிலாப்பூர் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் முக்கிய நிகழ்வு ஒன்றிற்காக பீகார் செல்ல இருந்ததால் தனது மகளை பீகாரை சேர்ந்த ஒருவரின் வீட்டில் விட்டு சென்றுள்ளார். அந்த வீட்டில் பாதுகாவலராக இருந்த பீகாரை சேர்ந்த … Read more

மது அருந்திவிட்டு ஒருபோதும் வாகனம் ஓட்டக்கூடாது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்..!!

தமிழ்நாட்டில் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அரசு பல நடவடிக்கைகளை எடுத்தாலும் கொடூர விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். 26 வயதான இவருக்குச் சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த ஷோபனா என்பவருடன் சமீபத்தில் திருமணம் ஆகி உள்ளது.புதுமண தம்பதிகளான இவர்கள், சோபனாவின் தாயார் வீட்டுக்கு விருந்துக்குச் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் மாமியார் வீட்டுக்குச் சென்ற மணிகண்டன். அங்கே … Read more

ஈரோடு மேடையில் அமைச்சர்கள் பேசிய வீடியோவை எடிட் செய்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் – அண்ணாமலை

ஈரோட்டில் தேர்தல் தொடர்பான கூட்டத்தில் அமைச்சர்கள் பேசிய வீடியோவை தான் எடிட் செய்து வெளியிட்டதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் இருந்து பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பழனிக்கு பாதயாத்திரை மேற்கொண்டார். அதனை தொடங்கி வைத்தபின் பேட்டியளித்த அண்ணாமலை, கோவிலை இடிப்பது தொடர்பாக டி.ஆர்.பாலு பேசிய வீடியோவை அப்படியே வெளியிட்டுள்ளதாகவும், அவை வெட்டி ஒட்டப்படவில்லை என்றும் விளக்கமளித்தார். இன்னும் 10 ஆண்டுகளில் … Read more

தமிழகத்தில் 30+ ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், திருநெல்வேலி ஆட்சியராக கே.பி.கார்த்திகேயன், தென்காசி ஆட்சியராக டி. ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியராக வி.பி.ஜெயசீலன் நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக தீபக் ஜேக்கப், விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக சி.பழனி நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக பி.என்.ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக கே.கற்பகம் நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ஆர்.வி.ஷஜீவனா நியமிக்கப்பட்டுள்னர். கோவை … Read more

“கட் அண்ட் பேஸ்ட் அண்ணாமலை” – வீடியோ விவாகரத்துக்கு திமுக பதிலடி..!

தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை மலிவான பிரசாரத்தில் ஈடுபடுவதாக திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; பொதுவாக மக்களுக்குப் பயன் தரும் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும்போது இருக்கும் சிக்கல்கள் பற்றித் திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு பேசிய கருத்துகளை வெட்டியும், ஒட்டியும் திரித்து, உண்மைக்குப் புறம்பான கருத்தை வெளியிட்டு அரசியல் அநாகரிகத்தின் உச்சத்திற்கே சென்று அசிங்கமான அரசியல் நடத்தும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் … Read more

தண்ணீர் தொட்டி இருந்தும் இரு பஸ்நிலையங்களில் குடிநீர் இல்லாமல் தவிக்கும் பயணிகள்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மத்திய பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் பயணிகள் நிற்க இடம்இல்லாமல் சிரமப்படுகின்றனர். மேலும் குடிநீர் வசதியில்லாததால் பயணிகள் தவிக்கின்றனர்.பொள்ளாச்சி நகரில் பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் ஆகியவை அடுத்தடுத்து அமைந்துள்ளது. இங்கு சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் பஸ் ஏற வருகின்றனர். வாரத்தில் அனைத்து நாட்களும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இதில் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, பழனி, உடுமலை, திருப்பூர், கிணத்துக்கடவு, நெகமம் வழித்தட பஸ்கள் நின்று … Read more