ஓடும் ரயிலிலிருந்து விழுந்த வாலிபர் பலி.! செல்போன் பறிப்பை தடுக்க முயன்றபோது நேர்ந்த பரிதாபம்.!

செல்போன் பறிப்பை தடுக்க முயன்றபோது ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ரோணிசேட்(24) என்ற வாலிபர் நேற்று முன்தினம் சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது ரோணிசேட் ரயிலில் படிக்கட்டுக்கு அருகே அமர்ந்து செல்போன் பார்த்தபடி வந்துள்ளார். இந்நிலையில் கொருக்குப்பேட்டை-சீனிவாசபுரம் ரயில் தண்டவாளங்களுக்கு இடையே மெதுவாக ரயில் சென்ற போது, அங்கு நின்றிருந்த வாலிபர்களில் ஒருவர் ரோணிசேட் செல்போனை பறிக்க முயன்றுள்ளார். அப்பொழுது செல்போன் … Read more

ஈரோடு இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி.. வேட்பாளரை அறிவித்து தேமுதிக அதிரடி..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், வேட்பாளரையும் அறிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்.27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணி சார்பாக மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மேலும், இடைத்தேர்தலின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுபோன்று அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. இந்த நிலையில், ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக … Read more

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல்?…

தமிழ்நாட்டில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஊதிய கேட்பு விபரங்களை, நிதித்துறை இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி திடீரென நிறுத்தப்பட்டதால் ஜனவரி மாத சம்பளம் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. IFHRMS என்ற டிஜிட்டல் இணைய தளத்தில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி முதல் 28ஆம் தேதிக்குள் பணி நாட்கள், விடுப்பு உள்ளிட்ட விபரங்கள் பதிவு செய்யப்பட்டு மேலதிகாரிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பின்பே கருவூலத்தில் இருந்து சம்பளம் விடுவிக்கப்படும். ஜனவரி மாதமும் ஆன்லைன் தளத்தில் … Read more

மக்களுக்கு எது நல்லது பயக்கும் என்பது குறித்து பேசி முடிவெடுப்போம்: ஈவிகேஎஸ் சந்திப்புக்குப் பின்னர் கமல்ஹாசன் பேட்டி

சென்னை: “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்த விஷயத்தில் நான் மட்டும் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது. எனவே, நாங்கள் கலந்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். லாபத்தைப் பற்றி நினைக்காமல் மக்களுக்கு எது நல்லது பயக்கும் என்பது குறித்து பேசி முடிவெடுப்போம்” என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திங்கள்கிழமை மக்கள் நீதி மய்யத்தின் … Read more

வரி செலுத்தாத ’டாப் 100’ பேரின் பட்டியல்: கோவை மாநகராட்சியில் அதிரடி சம்பவம்!

கோவை மாநகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி என பல்வேறு வரிகள் மூலம் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது, வளர்ச்சி திட்டப் பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தம் 100 வார்டுகள் இருக்கின்றன. அதில் 5 லட்சத்து 46 ஆயிரத்து 611 சொத்து வரிதாரர்கள் இருக்கின்றனர். நிதியாண்டு நிறைவு நடப்பு 2022 – 23ஆம் நிதியாண்டு வரும் மார்ச் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அதற்குள் சொத்து வரியாக 344 … Read more

தமிழ்நாடு என்று குறிப்பிடுவது அரசுக்கு கிடைத்த வெற்றி: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: நீட் விலக்கு தொடர்பாக ஒன்றிய அரசிடமிருந்து மீண்டும் விளக்கம் கேட்டு கடிதம் வந்துள்ளது. அதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பரிசீலித்து உரிய விளக்கங்களை தயார் செய்து தருவார். பின்னர் சட்டத்துறை ஒப்புதல் தரும். அதன்பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறை, அதன் விளக்கத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்பும். இதுகுறித்து ஒரு வாரத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விளக்கம் தருவதாக தெரிவித்துள்ளார். தன்னார்வலர்கள், ஆசிரியர்களை கொண்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிகளில் இருக்கக்கூடிய சிறுவர், சிறுமியர்கள் திருந்தி வாழ்வதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு … Read more

`இபிஎஸ் – ஓபிஎஸ் போல வாழாதீங்க; சுயமரியாதையோட இருங்க’- மணமக்களை வாழ்த்திய அமைச்சர் உதயநிதி

“கலைஞரும் தமிழும் போல; ஸ்டாலினும் உழைப்பும் போல வாழ வேண்டுமென்று எல்லோரும் என்று எல்லோரும் மணமக்களை வாழ்த்துவார்கள். நான் இங்கே, எப்படி வாழக் கூடாது என்று மணமக்களுக்கு அறிவுரை தெரிவிக்க உள்ளேன்” எனக்கூறி அமைச்சர் உதயநிதி வித்தியாசமாக மணமக்களை வாழ்த்தியுள்ளார். சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலம் 6, வார்டு 78-ல் அமைந்துள்ள அறிஞர் அண்ணா மாளிகை திறப்பு விழா மற்றும் 9 இணைகளுக்கு கட்டணம் இல்லா திருமணத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் … Read more

உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலப் பணிகள்: கேரளா செல்லும் பேருந்துகள் நிற்கும் இடம் மாற்றம்

உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலப் பணிகள்: கேரளா செல்லும் பேருந்துகள் நிற்கும் இடம் மாற்றம் Source link

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்றுனர்களின் பணி நிலைப்பு | தமிழக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் எடுத்துரைப்பு!

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் உள்ளடக்கிய கல்வித்திட்டத்தில் பணியாற்றிவரும் 1660 சிறப்பு பயிற்றுனர்கள்  பணி நிலைப்பு கோரி சென்னையில் இன்று காலை முதல் தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நியாயமான கோரிக்கையை பா.ம.க. ஆதரிக்கிறது! மாற்றுத்திறன் மாணவர்கள் 1.30 லட்சம் பேருக்கு பயிற்றுவிப்பது தான் இவர்களின் பணியாகும். மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சேவை … Read more

அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும்.. தமிழ்நாடு அரசு விரைவில் முக்கிய உத்தரவு..!

தென் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரங்களை வைக்கக்கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (ஜன. 23-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகள், பள்ளிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்கலாமே என தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனால், இது தொடர்பாக அரசு விரைவில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Source link