காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் ரதசப்தமி விழா: பக்தர்கள் தரிசனம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் நடந்த ரதசப்தமி விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை வழிப்பட்டனர். காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில், தை அமாவாசை நாளை அடுத்து 7வது நாளில் ரத சப்தமி கொண்டாடப்படுவது வழக்கம். சூரிய தேவன் 7 குதிரைகள் பூட்டிய ரதத்தை வடகிழக்கு திசையில் திருப்பி பயணிப்பதாக கருதப்படுகிறது. இந்த நாள் சூரிய கடவுளின் பிறந்த நாளாகவும் கருத்தப்படுகிறது. சூரியன் தெற்கு நோக்கிய தட்சிணாயனம் பயணத்தை முடித்துக்கொண்டு ரத சப்தமியன்று வடக்கு நோக்கி உத்தராயணம் பயணப்படும் … Read more