இது ஆன்மிக புரட்சிக்கு வித்திடும் ஆட்சி… அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்!

கோவை பேரூர் பட்டீஸ்வர் திருக்கோவிலில் சிவராத்திரி விழாவின் முன்னேற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அவர்களிடம் கூறியது: வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ள பழனி தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகளுக்கு வருகின்ற பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள், வாகனங்கள் நிறுத்தும் இடம், பக்தர்களுக்கான இடம், மருத்துவ வசதி,குடிநீர் வசதி கழிப்பிட வசதி உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்யவும் முருகக்கடவுளுக்காக ஓம குண்டங்களையும் ஆய்வு செய்துள்ளதாக தெரிவித்தார். … Read more

"திராவிட மாடல் ஆட்சி எஜமானிஸ்வாஹா" உதயநிதிக்காக வித்தியாசமாக ஓதிய புரோகிதர்

நாமக்கல் மாவட்டத்திற்கு வரும் 28-ம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செல்ல உள்ளார். அன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதற்காக நாமக்கல் அடுத்த பொம்மைக்குட்டை மேட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு விழா பந்தல் அமைப்பதற்கான‌ பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம் … Read more

12 நாட்களாக தண்ணீர் இன்றி தெங்கம்புதூர் கடைவரம்பு நெற்பயிர்கள் கருகும் அவலம்

நாகர்கோவில்: தெங்கம்புதூர் கடைவரம்பு பகுதிக்கு 12 நாட்களாக தண்ணீர் கிடைக்காததால் நெற்பயிர்கள் கருகும் நிலை உருவாகியுள்ளது. குமரி மாவட்டத்தில் தற்போது கும்பபூ சாகுபடி நடந்துள்ளது. தெங்கம்புதூர் கடைவரம்பு பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கும்பபூ நெற்பயிர்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காததால், நெற்பயிர்கள் வாடும் நிலை உருவாகியுள்ளது. இது குறித்து அந்த பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கடைவரம்பு பகுதிக்கு தண்ணீர் சீராக செல்லாமல் … Read more

இயக்குனர் லீனா மணிமேகலை கைதுக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

இயக்குனர் லீனா மணிமேகலை கைதுக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு Source link

நாமக்கல் : அதிரடியாக குறைந்த முட்டை விலை.!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.  அந்த வகையில் வரலாறு காணாத வகையில் முட்டை விலை உயர்வால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். அதன்காரணமாக உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து ரூ.5.65-லிருந்து ரூ.5.45ஆக குறைந்துள்ளது. கடந்த … Read more

இந்திய கிரிக்கெட் அணிக்கு அபராதம்..ஏன் தெரியுமா?

மெதுவாக பந்துவீசியதால், இந்திய கிரிக்கெட் அணிக்கு 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், முதல் போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக இந்திய அணிக்கு போட்டி சம்பளத்தில் 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கள நடுவர்களின் குற்றச்சாட்டை தொடர்ந்து போட்டிக்கான நேரம் குறித்து ஆய்வு செய்ததில், மூன்று ஓவர்களை … Read more

திருச்செங்கோடு தினசரி அங்காடியில் பட்டாணியை பச்சை நிற சாயத்தில் ஊறவைத்து விற்பனை செய்தது அம்பலம்.!

திருச்செங்கோடு தினசரி அங்காடியில், பச்சை நிற சாயத்தில் ஊற வைத்து விற்கப்பட்ட பட்டாணிகளை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அங்கு ஆய்வு மேற்கொண்ட போது கடைகளில், காய்ந்த பட்டாணியை தண்ணீரில் ஊறவைத்து, அதை பச்சை நிற சாயத்தில் போட்டு, பச்சை பட்டாணி போன்று விற்கப்படுவது தெரியவந்தது. ஒரு கிலோ பச்சை பட்டாணி 50 முதல் 80 ரூபாய் வரை தோலுடன் விற்கப்படுவதால், பச்சை வண்ணம் பூசப்பட்ட இந்த … Read more

டாஸ்மாக் கடைகள் அரை மணி நேரம் முன்பாக அடைக்கப்படுமா? – அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே அடைப்பது குறித்து விளக்கம் அளிக்க அரசுத் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூரை சேர்ந்த மோகன், கோபிநாத் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில், “டாஸ்மாக் மதுபானக் கடை மற்றும் பார் ஆகியவை தினமும் இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. இந்நிலையில், கடை மூடப்படும் நேரத்தில் மதுபானம் வாங்குபவர்கள், மதுபானக் கடைகளின் முன்பும், சாலையோரத்திலும், அருகில் உள்ள பொது இடங்களிலும் … Read more

10 லட்சம் பேருக்கு கவர்மென்ட் ஜாப்… சத்தியம் செய்யாத குறையாக சொன்ன அமைச்சர்!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இந்தியா முழுவதும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் கடந்த ஆண்டு தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற்று அதன் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு இன்று பணி ஆணை வழங்கும் விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள விடுதியில் நடைபெற்றது. அதில் இந்தியா முழுவதிலும் ரயில்வே, சுங்க வரி, வணிக வரி, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மொத்தம் 71 ஆயிரம் … Read more

ஈரோடு இடைத்தேர்தல்; தேர்தல் அலுவலர் வெளியிட்டிருக்கும் முக்கிய அறிவிப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் Feb 27 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று முன்தினம் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ள நிலையில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் தேர்தல்   அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இடைதேர்தலுக்கான தேர்தல் அலுவலகமாக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப் பாட்டு அறை இன்று திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வகையில் இலவச அழைப்பு எண் 180042594890 கொடுக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த … Read more