”10 ஆண்டுகள் கணவர் போல் வாழ்ந்துவிட்டு இப்போது ஏமாற்றுகிறார்” – மதபோதகர் மீது பெண் புகார்!

திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறி பத்தாண்டுகள் நட்பாய் பழகிவிட்டு ஏமாற்றியதாக மதபோதகர் மீது மதுரையை சேர்ந்த பெண் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம். மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியைச் சேர்ந்த வர்ணிகா என்பவர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பத்தாண்டுகளுக்கு மேலாக நட்பாய் பழகி மனைவி போல் வாழ்ந்துவிட்டு மத போதகர் ஒருவர் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். மேலும் மத … Read more

மத்திய அரசுப் பணிக்கு தமிழக இளைஞர்கள் அதிகம் வர வேண்டும்: எல். முருகன்

மத்திய அரசுப் பணிக்கு தமிழக இளைஞர்கள் அதிகம் வர வேண்டும்: எல். முருகன் Source link

மதுரை ஆட்சியர் அதிரடி… துணிவு, வாரிசு பட மிட்நைட் காட்சிகளை அனுமதியின்றி ஓட்டிய 34 தியேட்டர்களுக்கு நோட்டீஸ்…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த துணிவு மற்றும் நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படங்கள் வெளியானது. இந்த திரைப்படங்களின் சிறப்பு காட்சிகளுக்காக தமிழக அரசு 11, 12, 13 மற்றும் 18 ஆகிய 4 நாட்களில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது. ஆனால் அதனையும் மீறி நள்ளிரவு 1:00 மணி மற்றும் அதிகாலை 4:00 மணி அளவில் துணிவு மற்றும் வாரிசு திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் … Read more

‘வாரிசு’, ‘துணிவு’ படங்களை வெளியிட்ட 34 தியேட்டர்களுக்கு நோட்டீஸ்..!

அனுமதியின்றி நள்ளிரவில் ‘வாரிசு’, ‘துணிவு’ படங்களை வெளியிட்ட 34 திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அஜித் நடித்த ‘துணிவு’ மற்றும் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய படங்கள் ஜனவரி 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களுக்காக, பல்வேறு திரையரங்குகளில் நள்ளிரவு ஒரு மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது. இந்த சிறப்பு காட்சிகளை பயன்படுத்தி தியேட்டர் உரிமையாளர்கள் அதிக கட்டணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், … Read more

இத்துப்போன காதலுக்கு செத்து போன கணவனின் எலும்புக்கூடு சாட்சியானது..! மண்டை ஓட்டால் விலகிய மர்மம்

காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்து ஏரிக்கரையில் புதைத்த நிலையில் வெளியே வந்த எலும்புக்கூடால் மனைவி, காதலனுடன் போலீசில் சிக்கிய சம்பவம் திருப்போரூர் அருகே  நடந்துள்ளது செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த வெள்ளப்பந்தல் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை புதர் பகுதியில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடுகள் சிதறி கிடப்பதாக அப்பகுதி விவசாயிகள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோர் தலைமையில் போலீசார் … Read more

விக்கிரவாண்டி வேல்ஸ் உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல தடை: அமைச்சர் சிவசங்கர் உத்தரவு

சென்னை: “விக்கிரவாண்டி அருகே சாலைகள் இருபுறமும் உள்ள வேல்ஸ் உணவகம் பயணிகளுக்கு சுகாதாரமற்ற முறையில் தரமற்ற உணவு மற்றும் கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் வழங்கியது கண்டறியப்பட்டதன் அடிப்படையில், வேல்ஸ் உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லும் உரிமம் ரத்து செய்யப்படுகிறது” என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சமீப காலமாக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நிறுத்தம் செய்யும் பயண வழி உணவகங்கள் மற்றும் கடைகளில் தரமற்ற உணவுகள் … Read more

சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் கஸ்டடி மரணம்… சிறுவன் கொலை..? சீமான் ஆவேசம்

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் கொல்லப்பட்ட சிறுவன் கோகுல்ஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான காவலர்களுக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் கோகுல்ஸ்ரீ என்ற சிறுவன் அங்கிருந்த காவலர்களால் அடித்துச் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு காவல்நிலையத்தில் கைதிகள் கொல்லப்படுவது வழக்கமாகிவிட்டதைத் தொடர்ந்து, தற்போது சீர்திருத்தப் … Read more

21, 22 தேதிகளில் நடக்கிறது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பதற்கான சிறப்பு முகாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: இந்திய தேர்தல் ஆணையம், சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் முதன்மை அரசு செயலாளர் அறிவுறுத்தலின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களிடம் இருந்து தன் விருப்ப அடிப்படையில் ஆதார் எண்ணை பெற்று வாக்காளர் பட்டியலில் பதிவுகள் மேற்கொள்ளும் பணி கடந்த 1.8.2022 முதல் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்டத்தில் … Read more

திண்டுக்கல்: திடீரென நிறுத்தப்பட்ட கொசவபட்டி ஜல்லிக்கட்டு.. காரணம் இதுதான்!

திண்டுக்கல் அருகே கொசவபட்டியில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் பதிவு செய்யப்படாத காளைகளையும் பங்கேற்க மொத்தமாக கொண்டு வந்ததால் பாதுகாப்பு கருதி மாவட்ட எஸ்பி ஜல்லிக்கட்டு போட்டிகளை நிறுத்தினார். திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டி புனித உத்திரிய மாதா கோவில் திருவிழாவையொட்டி வருடந்தோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் பிரேம்குமார் … Read more

உலகக் கோப்பை ஹாக்கி: தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய ஆஸி.!..

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலியா அணி தென் ஆப்ரிக்காவை 9-2 என்ற கோல் கணக்கில் அதிரடியாக வீழ்த்தியது. 15-வது உலகக் கோப்பை ஹாக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடக்கிறது. போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா, ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான், ‘சி’ பிரிவில் நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, … Read more