இடைத்தேர்தல் அதிமுகவிற்கு புதிதல்ல: வெற்றி உறுதி – விஜயபாஸ்கர் நம்பிக்கை

இடைத்தேர்தல் அதிமுகவிற்கு புதிதல்ல, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு ஆளும் கட்சிக்கு வேகத்தடையாக அமையும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவினர் தேர்தல் பிரச்சாரத்திற்கும் பூத் பொறுப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டையிpல் இருந்து செல்லும் அதிமுகவினர் எவ்வாறு தேர்தல் பணியாற்ற வேண்டும் எந்தெந்த பகுதியில் வியூகம் எடுத்து பணியாற்ற வேண்டும் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில் பேசிய … Read more

போதைப் பொருள் ஒழிப்பில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு..!!

தமிழகத்தில் போதைப் பொருட்களை ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு தீவிரமாக எடுத்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டியுள்ளது. தமிழக அரசு போதைப்பொருள் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அப்பொழுது சுற்றறிக்கைகள் வெளியிடுவது குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபரின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் பொழுது தமிழக அரசை நீதிபதி புகழேந்தி பாராட்டியுள்ளார். மேலும் நீதிமன்றம் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் அரசு தரப்பில் … Read more

இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு இது தான்..! செங்கோட்டையன்

ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் இது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவை எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா ஏன் உலகில் உள்ள அனைத்து தமிழ் சொந்தங்களும் இந்த இடைத்தேர்தலை … Read more

தலையில் வெட்டு.. ரத்தம் ஒழுக பேருந்தை மறித்து தம்பதி அலப்பறை..!

சிவகங்கையில் தலையில் வெட்டுக்காயத்துடன் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மருத்துவமனை செல்ல மறுத்து, மனைவியுடன் சாலையில் பேருந்தை மறித்து போராட்டம் நடத்திய நிலையில், மயங்கியதால் மிரண்டு போய் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிவகங்கையில் தலையில் ரத்தக்காயத்துடன் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் சாலையில் செல்லும் பேருந்துகளை மறித்து போராடிக் கொண்டிருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. விரைந்து வந்த போலீசார் அவரை அப்புறப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றும் அவர் எழுந்திருக்க மறுத்தார். விசாரணையில் அவர் சிவகங்கை மேலரத … Read more

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த … Read more

போச்சம்பள்ளி அருகே போதை மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் செலுத்திய வாலிபர்கள்: மயங்கி விழுந்ததால் ஜி.ஹெச்சில் அனுமதி

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே போதை மாத்திரைகளை தண்ணீரில் கலந்து, ஊசி மூலம் நரம்பில் செலுத்திய வாலிபர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே வீரமலை கிராமத்தில் ஒரு கடையின் முன்பு, நேற்று முன்தினம் மாலை, கார் ஒன்று வேகமாக வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 3 வாலிபர்கள், கடைக்காரரிடம் தண்ணீர் கேட்டனர். ஆனால், சிறிது நேரத்திலேயே அவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கடைக்காரர் மற்றும் அங்கிருந்தவர்கள், அவர்களை … Read more

வேலூர்: கர்ப்பிணி மனைவியை கொலை செய்ததாக கணவன் கைது – பரபரப்பு வாக்குமூலம்

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கர்ப்பிணி காதல் மனைவியை அடித்துக் கொலை செய்ததாக கணவன் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த பாலமதி மலையில் பாறை இடுக்கில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில், கடந்த 27 ஆம் தேதி பாகாயம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டனர். இதையடுத்து பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் … Read more

கோயம்பேடு மார்க்கெட்.! (29.01.2023)இன்றைய காய்கறி விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 29/01/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல். மகாராஷ்டிரா வெங்காயம் 20/18/16 ஆந்திரா வெங்காயம் 14/12 நவீன் தக்காளி 20 நாட்டு தக்காளி 15/13 உருளை 23/18/15 சின்ன வெங்காயம் 60/40/30 ஊட்டி கேரட் 30/25 பெங்களூர் கேரட் 15 பீன்ஸ் 25/20 பீட்ரூட். ஊட்டி 30/25 கர்நாடக பீட்ரூட் 18/15 சவ் சவ் 12/10 முள்ளங்கி 15/13 முட்டை கோஸ் 8/6 வெண்டைக்காய் 60/40 … Read more