பதான் ஷாருக்கானாக மாறிய வார்னர்… வைரல் வீடியோ!!

பதான் படத்தினல் ஷாருக்கான் முகத்தை எடிட் செய்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் டேவிட் வார்னர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் வெளிவந்த பெரிய ஹீரோக்கள் படங்கள் அனைத்தும் படுதோல்வியை சந்தித்து வந்த நிலையில், தற்போது ஹிந்தி திரைத்துறைக்கு சுவாசம் கொடுத்துள்ளது ஷாருக்கானின் பதான். படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. நேற்று வரை இந்த திரைப்படம் உலக அளவில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து இருப்பதாக தகவல்கள் … Read more

வடக்கம்பட்டி முனியாண்டி கோயிலில் 200 ஆடுகள், 300 சேவல்கள், 2,500 கிலோ அரிசியில் தயாரான பிரியாணி திருவிழா..!

மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி முனியாண்டி கோயிலில் நடைபெற்ற 88வது பிரியாணி திருவிழாவில் 200 ஆடுகள், 300 சேவல்கள் பலியிடப்பட்டு 2 ஆயிரத்து ஐநூறு கிலோ அரிசியில் தயார் செய்யப்பட்ட பிரியாணி, கிராமமக்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் பிரியாணி திருவிழா நேற்று நடைபெற்ற நிலையில் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 25க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கலந்து கொண்டு, சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். விழாவின் நிறைவாக, பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடுகள் மற்றும் … Read more

“உங்கள் வீட்டு செல்லப் பிள்ளையாக இருப்பேன்” – நாமக்கல்லில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

நாமக்கல்: “உங்கள் வீட்டு செல்லப் பிள்ளையாகவும், சகோதரன் ஆகவும் என்றும் இருப்பேன்” என்று நாமகக்கல் நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரூ.23.71 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.351.12 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,03,321 பயனாளிகளுக்கு 303.37 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் … Read more

மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் தள்ளுபடி: அமைச்சர் உதயநிதி அதிரடி!

நாமக்கல் அடுத்துள்ள பொம்மைகுட்டை மேட்டில் 1,03,321 பயனாளிகளுக்கு ரூ.303.37 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குதல், 351.11 கோடி ரூபாய் மதிப்பிலான 315 புதிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, ரூ.23.70 கோடி மதிப்பிலான 60 முடிவற்ற பணிகளை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். மேலும் சுமார் 1 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் உதயநிதி வழங்கினார். … Read more

கேரட், பீட்ரூட்டை சமவெளியில் சாகுபடி செய்து மண் காப்போம் இயக்கம் சாதனை!.. விவசாயிகளுக்கு வழிகாட்டும் ஈஷாவின் மாதிரி பண்ணை

கோவை: ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் விளையும் கேரட் மற்றும் பீட்ரூட்டை சமவெளியில் வெற்றிகரமாக சாகுபடி செய்து ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சாதனை படைத்துள்ளது. இது தொடர்பாக அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா அவர்கள் கூறுகையில்: எங்களுடைய மண் காப்போம் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இயற்கை விவசாய பயிற்சிகளை மாதந்தோறும் நடத்தி வருகிறோம். அதுமட்டுமின்றி கோவை, ஈரோடு, திருவண்ணாமலை, தஞ்சாவூர் ஆகிய 4 இடங்களில் மாதிரி பண்ணைகளை உருவாக்கி பராமரித்து வருகிறோம். மொத்தம் 60 … Read more

சென்னையில் கார் மூலம் மூட்டை மூட்டையாக கடத்தப்படும் குட்கா… வாகன சோதனையில் அம்பலம்!

செங்கல்பட்டு அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் – செங்கல்பட்டு சாலையில், சென்னை சவுகார்பேட்டையில் இருந்து குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை இரண்டு கார்களில் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு தாலுகா போலீசார், சென்னேரி அருகே சம்மந்தப்பட்ட கார்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அதில், தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் … Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து – சிறுவன், சிறுமி உட்பட 3 பேர் பலி.!

செங்கல்பட்டு மாவட்டத்தில் திருமணத்திற்கு சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் சிறுமி, சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருவண்ணாமலை மாவட்டம் படூர் பகுதியை சேர்ந்த 25 பேர் வேனில் வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி அருகே வேன் வந்தபோது திடீரென, பின் டயர் வெடித்துள்ளது. இதனால் நிலைதடுமாறிய வேன் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர … Read more

அரசிடம் தீர்மானங்கள் அளிப்பு: எப்போது அமலுக்கு வருகிறது சென்னை பெருநகர் விரிவாக்கம்?

சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் எல்லையை விரிவாக்கம் செய்வது தொடர்பான உள்ளாட்சி அமைப்பின் தீர்மானங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) நிர்வாக எல்லையானது சென்னை மாவட்டம் தவிர்த்து அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கி 1,189 சதுர கிமீ அளவுக்கு இருந்தது. இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிர்வாக எல்லை விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. … Read more

நூறு நாள் வேலை திட்டத்தில் கூடுதல் வேலை நாட்கள் எப்படி? எப்போது? – அமைச்சர் தகவல்

நூறு நாள் வேலை திட்டத்தினை பொறுத்தவரை கூடுதல் வேலை நாட்களை எந்த வகையில் வழங்குவதற்கான திட்டம் தயார் படுத்தி வருவதால் ஒரே நேரத்தில் 40 ஆயிரம் கிராமங்களில் பணிகள் நடைபெற நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் காணை, வீரமூர், பனமலைப்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் புதிய கட்டிட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் ஆய்வு செய்தனர். … Read more