உலகின் வயதான பெண்மணி 118 வயதில் காலமானார்..!!

உலகின் வயதான நபராக அறியப்பட்டுவந்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி லூசில் ராண்டன் காலமானார். அவருக்கு வயது 118. அவரது மறைவை அவருடைய செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.இது குறித்து செய்தித் தொடர்பாளர் டேவிட் டவெலா, லூசில் ராண்டனின் மறைவு நிச்சயமாக பெருந்துயர் தான். ஆனால் அவர் இயற்கை எய்தவே விரும்பினார். லூசில் ராண்டான் 1904 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் பிறந்தார். பின்னாளில் கன்னியாஸ்திரியான அவரை அனைவரும் … Read more

காணும் பொங்கல்: மெரினாவில் காணாமல் போன 17 குழந்தைகள் மீட்பு

சென்னை: காணும் பொங்கல் கொண்டாட்டத்தின்போது மெரினா கடற்கரையில் கூட்டத்தில் காணாமல் போன 17 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு, பெற்றோர் மற்றும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது தொடர்பாக சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காணும் பொங்கலை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் பொதுமக்கள் குடும்பத்துடன் அதிகளவு வருவார்கள் என்பதால், மெரினா கடற்கரை, அண்ணாசதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரையிலான சர்வீஸ் சாலை மற்றும் கடற்கரை மணற்பரப்பில் திருவல்லிக்கேணி மற்றும் மயிலாப்பூர் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தேதி அறிவிச்சதும் அதிரடி ஆக்ஷனில் இறங்கிய அண்ணாமலை!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலானது வருகின்ற பிப்ரவரி 27 ம் தேதி அன்று நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளை முழுமையாக கவனிக்கவும், ஒருங்கிணைக்கவும் மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது. தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்” என்ற அண்ணாமலை தெரிவித்துள்ளார். 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவில், பாஜக எம்எல்ஏவும், அக்கட்சியின் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினருமான … Read more

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலாவை போலீசார் பறிமுதல் செய்தனர். வெங்கடேசன் என்பவர் வீட்டில் இருந்து 80 பண்டல் புகையிலை, 60 பண்டல் பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை: வீட்டின் முன்பு நின்றவரை முட்டித்தள்ளிய காளை; சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழப்பு

மேலூர் அருகே மாடு முட்டியதில் சிகிச்சை பெற்றுவந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை மாவட்டம் அ.வல்லாளபட்டியை சேர்ந்தவர் பெரியபுலியன் (80). இவர் தனது வீட்டின் முன்பு நின்றிருந்த போது காளை ஒன்று திடீரென அவரை முட்டிவிட்டு சென்றது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார். … Read more

பணிக் காலத்தில் உயிரிழந்த நெடுஞ்சாலைத் துறை ஊழியரின் மகளுக்கு பணி: தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்

சென்னை: பணிக் காலத்தில் உயிரிழந்த நெடுஞ்சாலைத் துறை ஊழியரின் விவாகரத்தான மகளுக்கு, வயது வரம்பை தளர்த்தி கருணை அடிப்படையில் பணி வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் சேலம் மண்டல பொறியாளர் அலுவலகத்தில் காவலராக பணியாற்றிய கோவிந்த முரளி என்பவர், உடல் நலக் குறைவு காரணமாக 2015-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். அவருடன் வசித்து வந்த விவாகரத்தான அவரது மகள் தேன்மொழி, … Read more

முந்திக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் – சைலன்ட் மோடில் எடப்பாடி பழனிசாமி!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 23 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா, உடல்நலக் குறைவால் அண்மையில் உயிரிழந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தல் தேதி எந்த நேரமும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், தேர்தல் … Read more

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தவர்கள் மீண்டும் சென்னைக்கு படையெடுப்பு: சுங்கச்சாவடிகள் ஸ்தம்பித்தது

செங்கல்பட்டு: பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தவர்கள் இன்று முதல் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். இதனால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்தது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் வசித்துவருகின்றவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு கிளம்பி சென்று விட்டனர். அங்கு பொங்கல் பண்டிகை கொண்டாடிவிட்டு விடுமுறை முடிந்ததும் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்தமாக மக்கள் அனைவரும் கார், … Read more

ஜவான் முதல் நாள் ஷூட்டிங்கில் பதட்டமாக இருந்த விஜய் சேதுபதி; கூல் செய்த ஷாருக்கான்

ஜவான் முதல் நாள் ஷூட்டிங்கில் பதட்டமாக இருந்த விஜய் சேதுபதி; கூல் செய்த ஷாருக்கான் Source link

திருவள்ளுவர் : கிரிக்கெட் விளையாட சென்ற இளைஞர் திடீர் சாவு.!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அருகே ஆரணி பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சக நண்பர்களுடன் பெரும்பேடு பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாட சென்றார்.  அங்கு, விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென மூச்சுவிட சிரமமாக உள்ளது என்று நண்பர்களிடம் தெரிவித்த மனோஜ்குமார், சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே அவரது நண்பர்கள் மனோஜ்குமாரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.  அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மனோஜ்குமார் … Read more