சென்னை அண்ணா சாலையில் கட்டடம் அனுமதியின்றி இடிப்பு – இளம்பெண் பலி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த பாண்டி முருகேசன், பாண்டீஸ்வரி தம்பதியினரின் மகளான பத்மப்பிரியா (22), பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு சென்னை பம்மலில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.  அவர், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள யுனைடெட் டெக்னோ என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் தேதி பணியில் சேர்ந்த பிரியா தினமும் சென்னை விமான நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயில் மூலம் தினமும் பணிக்கு வந்துள்ளார்.  இந்நிலையில், இன்று காலை … Read more

குமரி அருகே முள்ளங்கினாவிளை பகுதியில் கல்குவாரியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்..!!

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை பகுதியில் கல்குவாரியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அனுமதி மீறி வெடிகளை வைத்து பாறைகளை உடைப்பதாக கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் – கோவிந்தா கோஷமிட்டு பக்தர்கள் வழிபாடு

ஒழலூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்று முடிந்துள்ளது. கும்பாபிஷேக விழாவில் ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் கிராமத்தில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், கோயில் சிதிலமடைந்து காணப்பட்டதால், மூலவர் விமானம் உள்பட கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து சுவாமிகளின் சன்னதிகளை சீரமைக்கும் பணிகள் சமீபத்தில் நடைபெற்றன. இந்நிலையில், இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை … Read more

ஈரோடு இடைத்தேர்தல்: இவர்தான் வேட்பாளர்.. அறிவித்தார் டி.டி.வி.தினகரன்..!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளரையும், தங்களது நிலைப்பாட்டையும் தெரிவித்து வருகின்றனர். திமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. அதிமுக சார்பில் வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. அதில் ஓபிஎஸ் – இபிஎஸ் என இரு பிரிவுகளாக இருப்பதால் யார் போட்டியிடுவார்கள் என்று இன்னும் தெரியாமல் இருக்கிறது. தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் மூத்த … Read more

பிரபல திரைப்பட ஸ்டண்ட் இயக்குனர் ஜூடோ ரத்தினம் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்!

பிரபல திரைப்பட ஸ்டண்ட் இயக்குனர் ஜூடோ ரத்தினம் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். சென்னை வடபழனி ஸ்டண்ட் யூனியன் அலுவலகத்தில் வைக்கப்பட்ட ஜூடோ ரத்தினத்தின் உடலுக்கு நடிகர்கள் சத்யராஜ், மனோபாலா, கார்த்தி, ராதா ரவி உள்ளிட்ட திரைபிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர் ரஜினிகாந்தும் ஜூடோ ரத்தினத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், 1976ம் ஆண்டு முதல் ஜூடோ ரத்தினத்துடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், … Read more

மோடி – பிபிசி ஆவணப்படத்தை தமிழகம் முழுவதும் திரையிட உள்ளோம்: கே.பாலகிருஷ்ணன் 

சென்னை: “தமிழ்நாடு முழுவதும் வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் இடதுசாரி, ஜனநாயக அமைப்புகள் முன்னின்று பிபிசியின் ஆவணப்பட திரையிடலையும், அதன் மீதான உரையாடலையும் முன்னெடுக்கவுள்ளோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்எஸ்எஸ், பாஜகவின் அரசியல் குறித்தும், மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்த பல்வேறு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியும் பிபிசி நிறுவனம், 2 பாகங்கள் கொண்ட ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு … Read more

மோடி ஆவணப்படத்தை பார்த்த மார்க்.கம்யூ., நிர்வாகிகளை கைது செய்வதா? – சீமான் கண்டனம்!

குஜராத்தில் நரேந்திர மோடி அரசால் நிகழ்த்தப்பட்ட மதவெறிப் படுகொலைகள் குறித்தான ஆவணப்படத்தைப் பார்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளைக் கைது செய்வதா? என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: குஜராத்தில் நரேந்திர மோடி அரசால் நிகழ்த்தப்பட்ட மதவெறிப் படுகொலைகள் குறித்தான, `இந்தியா-மோடிக்கான கேள்விகள்’ எனும் பி.பி.சி. ஊடகத்தின் ஆவணப்படத்தை சென்னை, அண்ணா நகர், அம்பேத்கர் சிலையின் கீழ் அமர்ந்துப் பார்த்த … Read more

திருத்தணியில் பட்டாசு திரி தயாரித்தபோது தீப்பிடித்ததில் 2 குழந்தைகள், தாய் படுகாயம்

திருவள்ளூர்: திருத்தணியில் பட்டாசு திரி தயாரித்தபோது தீப்பிடித்ததில் 2 குழந்தைகள், தாய் படுகாயம். படுகாயமடைந்த குழந்தைகள் அஸ்வின் (3), அனுபல்லவி(1), தாய் நக்மா ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

'எங்களை பாதுகாக்க அரசா அல்லது NLC-ஐ பாதுகாக்க அரசா?' – போர்க்கொடி தூக்கும் கிராம மக்கள்

“ஏழு தலைமுறையாக பாதுகாத்த நிலத்தை எதற்கு நாங்கள் என்எல்சிக்கு தர வேண்டும்?” என கேள்வியெழுப்புகின்றனர் வானதிராயபுரம் கிராம மக்கள். என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்காக நிலங்களை கையகப்படுத்தப்படும் பணியை கடலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதற்கு அப்பகுதியையொட்டிய பல்வேறு கிராம மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார்கள். நேற்றைய தினம் குடியரசு தினத்தை புறக்கணித்து, அதை கருப்பு நாளாக கடலூரில் என்எல்சி சுரங்க விரிவாக்க பணி நடக்கும் பகுதியை ஒட்டியுள்ள பல கிராம மக்கள் அனுசரித்தனர். இதில் என்.எல்.சி … Read more