சென்னையில் CMDA மாஸ்டர் ஸ்ட்ரோக்… ரூ.100 கோடியில் வேற மாதிரி மாறும் முகம்!

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்ளும் வகையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA) செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மொத்த காய்கறி சந்தை, CMRTS, வெளிவட்ட சாலை, மாதவரம் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்கள் உள்ளிட்டவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஏரி மேம்பாட்டு திட்டம் இதுதவிர புதிதாக சில களப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதில் ஏரி மேம்பாட்டு திட்டம் மிகுந்த முக்கியத்துவம் … Read more

பழநி மலைக்கோயிலில் கும்பாபிஷேக பூர்வாங்க பூஜைகள் நாளை துவக்கம்: பணிகள் விறுவிறுப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி

பழநி: பழநி மலைக்கோயிலில் கும்பாபிஷேக பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நாளை பூர்வாங்க பூஜைகள் துவங்க உள்ளன. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு, அதிக பக்தர்கள் வந்து செல்கின்றனர். மாநிலத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோயிலில் கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். இதன்படி 2018ல் நடைபெற்றிருக்க வேண்டிய கும்பாபிஷேகம் … Read more

தமிழகத்தை கரை சேர்த்த காவியத் தலைவர்.. எடப்பாடி பழனிசாமி புகழாரம்..!

எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவருடைய புகைப்படத்துக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதிமுக நிறுவனரும், மறைந்த முதல்வருமான எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாள் இன்று (ஜன. 17-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதிமுக தலைமை அலுவலகம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எம்ஜிஆரின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கலங்கரை விளக்கமாக இருந்து தமிழகத்தை கரை சேர்த்த காவியத் தலைவர், சத்துணவு திட்டம் தந்த … Read more

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி: அமைச்சர் உதயநிதி தகவல்

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப்படும் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.17) காலை தொடங்கியது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். இதன்பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,”தமிழர்களின் … Read more

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: இந்தப் பொங்கலுக்கு அப்படியென்ன ஸ்பெஷல்!

பொங்கல் பண்டிகை என்றாலே தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை தவிர்க்க இயலாது. அதிலும் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றது. நடப்பாண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிகளை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 8 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார். வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டு போட்டியில் பங்கேற்றனர். முதலில் கோயில் காளைகள் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டன. அலங்காநல்லூர் சிறப்பு கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பின்னர் நடக்கும் ஜல்லிக்கட்டு என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. … Read more

திருமங்கலம் கோபாலபுரம் முனியாண்டி கோயிலில் அசைவ அன்னதான விழா: ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு கறி விருந்து

திருமங்கலம்: திருமங்கலம் அருகேயுள்ள கோபாலபுரம் முனியாண்டி கோயில் அசைவ அன்னதான திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். மதுரைமாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள எஸ்.கோபாலபுரம் கிராமத்தில் புகழ்பெற்ற முனியாண்டி சாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொருஆண்டும் மாட்டுபொங்கல் அன்று பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு பொங்கல் விழாவையொட்டி கடந்த 10ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று கோபாலபுரம் கோயிலில் 60வது ஆண்டு பொங்கல் திருவிழா நடைபெற்றது. முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்தும் … Read more

அமெரிக்காவில் இந்திய மாணவர்கள்; சுமார் 50% பேர் 6 மாநிலங்களில் உயர் கல்வி

அமெரிக்காவில் இந்திய மாணவர்கள்; சுமார் 50% பேர் 6 மாநிலங்களில் உயர் கல்வி Source link

வண்டலூர் பூங்கா இன்று திறந்திருக்கும்!!

காணும் பொங்கலை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை இன்று திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு காரணங்களுக்காக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் வண்டலூர் பூங்காவுக்கு விடுமுறை விடப்படும். செவ்வாய்க்கிழமையான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக சுற்றுலாத் தலங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக கொண்டாடுவர். இதன்காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோன்று கிண்டி சிறுவர் பூங்காவும் செவ்வாய்க்கிழமைகளில் … Read more

8 ஆண்டுகளுக்கு பின்னர் கிராம மக்கள் ஒன்றிணைந்து பொங்கல் கொண்டாட்டம்!

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே 8 ஆண்டுகளுக்கு பின்னர் கிராம மக்கள் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். ரணசிங்கபுரம் கிராமத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் மரியாதை பிரச்சினை காரணமாக பொங்கல் கொண்டாடாமல் இருந்துவந்த நிலையில், நேற்று பொங்கல் விழா நடைபெற்றது. இதில், கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். Source link

திருவள்ளுவர் தின விழாவில் தமிழ் அறிஞர்கள் 10 பேருக்கு விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற திருவள்ளுவர் தின விழாவில் தமிழ் மற்றும் தமிழர் நலனுக்காக தொண்டாற்றிய 10 அறிஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கி கவுரவித்தார். தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருவள்ளுவர் திருநாள் விழா, தமிழ்மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழறிஞர்கள் 10 பேருக்கு தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட் டத்தில் நேற்று நடைபெற்றது. இதில், … Read more