அனைத்து மீறல்களிலும் ஈடுபடுகிறது தெலங்கானா அரசு: தமிழிசை காட்டம்
புதுச்சேரி: தெலங்கானா அரசு மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்று முடிவு செய்து, அதற்காக ஆளுநரை எதிர்க்கிறது. இது எனக்கு புளித்துவிட்டது. மரபு மீறல், அரசியலமைப்பு சட்டமீறல் என அனைத்து மீறல்களிலும் தெலங்கானா அரசு ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளேன் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். கடந்த ஆண்டு தெலங்கானா மற்றும் புதுவையில் குடியரசு நாளில் தேசியக்கொடி ஏற்றினார். அதேபோல இந்த ஆண்டும் தெலங்கானா, புதுவை மாநிலத்தில் ஆளுநர் தமிழிசை தேசியக்கொடி ஏற்றினார். … Read more