மதுரை | மு.க.அழகிரியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்
மதுரை: மதுரை மாநகரில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை, தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். நாளை அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அதை முன்னிட்டு அவர் தற்போது மதுரையில் உள்ளார். இந்த சூழலில் மதுரை சென்றுள்ள உதயநிதி ஸ்டாலின், மதுரை டிவிஎஸ் நகரில் அமைந்துள்ள அழகிரியின் இல்லத்தில் அவரை சந்தித்தார். அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தனது பெரியப்பாவான அழகிரியை முதல் முறையாக அவர் சந்தித்துள்ளார். … Read more