தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.. அதிமுகவிற்கு வழி பிறந்துவிட்டது – இபிஎஸ்

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில், தலைவாசல் அருகே சிறுவாச்சூரில் மாட்டுப் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கால்நடைகளுக்கு உணவுகளை வழங்கி வழிபட்டார். தொடர்ந்து விழாவில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, ஒரு விவசாயியாக, விவசாயிகளுடன் சேர்ந்து மாட்டுப்பொங்கலை கொண்டாடுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.. அது போல அதிமுகவிற்கும் வழி பிறந்துவிட்டதாகவும் அவர் கூறினார். திமுக அரசு விவசாயிகளை புறக்கணிப்பதாக குற்றஞ்சாட்டிய … Read more

பாலமேடு ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜன் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேட்டில் திங்கள்கிழமை நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில், 9 காளைகளை அடக்கிய பாலமேடு கிழக்கு தெருவைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜன் காளை முட்டியதில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றதாகும். அதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் தினமான நேற்று நடைபெற்றது.பாலமேட்டில் இன்றும், அலங்காநல்லூரில் வரும் 17-ம் தேதியும் நடக்கிறது. உலகப் புகழ்பெற்ற மதுரை பாலமேடு … Read more

திருக்குறளுடன் ஜி20யை ஒப்பிட்ட தமிழ்நாடு ஆளுநர் ரவி!

உலகப் புகழ்பெற்ற தமிழ் புலவர் திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் ஒரு நிகழ்வாக தை மாதத்தின் இரண்டாவது நாளான மாட்டுப் பொங்கல் திருநாளன்று, திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், திருவள்ளுவர் தினம் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தமிழறிஞர்கள் திருவள்ளுவரை நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், … Read more

சூரியூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது: ஆட்சியர்

திருச்சி: சூரியூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். பிற்பகல் 2 மணி வரை மட்டுமே அனுமதி இருந்த நிலையில் தற்போது ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. சூரியூரில் தற்போது வரை 420 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளதாக விழா குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டு.. காளை முட்டியதில் வீரர் அரவிந்த் ராஜ் உயிரிழப்பு. பெரும் சோகம்!

பாலமேடு ஜல்லிக்கட்டு.. காளை முட்டியதில் வீரர் அரவிந்த் ராஜ் உயிரிழப்பு. பெரும் சோகம்! Source link

பாலமேடு ஜல்லிக்கட்டு : ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட 14 வீரர்கள் தகுதி நீக்கம்.!

ஒவ்வொரு வருடமும் தைத்திங்கள் முதல் நாள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் தை முதல் நாளான நேற்று உலகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதேபோல், ஜல்லிக்கட்டும் ஒரு புறம் காலை கட்டி வருகிறது.  தமிழகத்தில் நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கி சிறப்பாக நடைபெற்ற நிலையில், இன்று பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில்  ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியை முன்னிட்டு மருத்துவ குழு, போலீஸ் பாதுகாப்பு தீயணைப்புத்துறை என்று … Read more

இந்தியில் படித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்.. மபி முதல்வர் பேச்சு..!

மத்திய பிரதேசத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் இந்தியில் கற்பிக்கப்படும். இந்தியில் படித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற எண்ணம் சாத்தியப்படுவதற்கு இது ஒரு படி என, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசியுள்ளார்.மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தார் நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “அறிவுக்கும், ஆங்கிலத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அதனால், மாநிலத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை இந்தியில் கற்பிக்க முடிவு செய்துள்ளேன். இதனால், … Read more

ரூ.20 கோடியில் “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்“ திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார் 

சென்னை: தெருவில் சுற்றித்திரியும் பிராணிகள் பராமரிப்புக்கு ரூ.20 கோடியில் “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்“ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆதரவற்ற, கைவிடப்பட்ட மற்றும் காயமடைந்து தெருவில் சுற்றித்திரியும் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், பிராணிகள் துயர் துடைப்பு சங்கங்கள், பிராணிகள் சேவை நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கு ரூ.20 கோடியில் “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்“ திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை,”கால்நடைகள், … Read more

பாமர மக்களின் வழிகாட்டி.. அண்ணாவின் இதயக் கனி… அதிமுக தொண்டர்களுக்கு ஈபிஎஸ் மடல்..!

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று கட்சி தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பது; எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள்… அதுவே நமக்கு சிறந்த நாள், அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் பொன்னாள் மற்றும் அதுவே நமக்கு நன்னாள். “தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” தோன்றலின் தோன்றாமை நன்று” என்ற வள்ளுவப் பேராசானின் சொல்லுக்கேற்றவாறு, மனிதனாகப் பிறந்தவன் புகழுடன் இருக்க வேண்டும். புகழ் பெற முடியாவிட்டால் பிறந்த பயனை … Read more

Palamedu Jallikattu 2023: சோகத்தில் வாடிவாசல்… காளை தாக்கியதில் பலியான நட்சத்திர வீரர்

Palamedu Jallikattu: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்து பெற்றது.  தைப்பொங்கலான நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்ற நிலையில், மாட்டு பொங்கலான இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய இப்போட்டி 45 நிமிடங்களுக்கு ஒரு சுற்று என்ற வகையில் நடத்தப்பட்டது. ஒரு சுற்றில் தலா 25 மாடு பிடி வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.  அந்த வகையில், … Read more