பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சு… கமலும், திமுக ‘பி’ டீமும்- ஜெயக்குமார் சுளீர்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்த விஷயம் தினசரி தலைப்பு செய்தியாக மாறிவிட்டது. இதில் லேட்டஸ்டாக வந்த செய்தி என்னவென்றால் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது தான். ஏற்கனவே டெல்லியில் நடந்த ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்து கொண்டு கவனம் ஈர்த்தார். தேர்தல் நிலைப்பாடு அப்போதே கமல் ஹாசன் நிச்சயம் திமுக கூட்டணிக்கு … Read more

ஈரோடு மாவட்டத்தில் பனிப்பொழிவு காரணமாக வெற்றிலை சாகுபடி குறைவு: குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கக் கோரிக்கை

ஈரோடு: பனிபொழிவால் வெற்றிலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தியூர் சந்தையில் ஒரு வெற்றிலை ரூ.2.40 காசுகளுக்கு விற்பனையானது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வெற்றிலை சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டுவருகிறது. இந்த வெற்றிலைகள் அந்தியூர் வாரச்சந்தைக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபடுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுவதால் வெற்றிலை சாகுபடி குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரித்து உள்ளது.  100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கட்டு … Read more

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் காணிக்கை எண்ணும் பணி: முதன்முறையாக யூடியூப்பில் நேரலை!

புகழ்பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகிறது. முதல் முறையாக கோயிலின் யூடியூப் பக்கத்தில் காணிக்கைகள் எண்ணுவது நேரலையாக ஒளிபரப்பு ஆகிறது. 108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தமிழக மட்டுமல்லாது, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் என நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோயிலின் உண்டியலில் காணிக்கை செலுத்துவது … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் ; காங்கிரஸுக்கு கமல் ஆதாரவு: இதுதான் காரணமா?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் ; காங்கிரஸுக்கு கமல் ஆதாரவு: இதுதான் காரணமா? Source link

மொழிப்போர் தியாகிகள் தினம்.. முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!

மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க நாளையொட்டி மொழிக் காவலர்கள் உருவப் படங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இந்தி திணிப்பை எதிர்த்து 1938-ம் ஆண்டு முதல் 1965-ம் ஆண்டு வரை நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, தமிழ் மொழிக்காக இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள் நினைவு தினமானது ஜனவரி 25-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. தமிழ் மொழிக்காக தங்களது உயிரை மாய்த்துக் கொண்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் இன்று அவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது. அந்தவகையில் இன்று … Read more

ஆளுநரின் தேநீர் விருந்து – புறக்கணிப்பதாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு

சென்னை: ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெற உள்ள தேநீர் விருந்தை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அறிவித்துள்ளன. நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ள இருக்கிறார். இதையடுத்து, முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு ஆளுநர் மாளிகையில், ஆளுநர் தேநீர் விருந்து கொடுப்பது வழக்கம். கரோனா … Read more

அம்மா சிமெண்ட் முறைகேடு: விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகாவில் உள்ள குந்தடம் பஞ்சாயத்து யூனியனில் அம்மா சிமெண்ட் விநியோக திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க உத்தரவிடக் கோரி பாஜக நிர்வாகியும், கொலுமங்குழி பஞ்சாயத்து வார்டு உறுப்பினருமான யோகேஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அம்மா சிமெண்ட் கிட்டங்கியில் ஆவணங்களின் படி இருக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை விட குறைவான எண்ணிக்கையில் இருப்பதாக புகார் அளித்ததாகவும், அதன் அடிப்படையில் … Read more

குட்கா, பான் மசாலா பொருட்கள் மீதான தடை உத்தரவு ரத்து

கடந்த 2006ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஆண்டுதோறும் இதுசம்பந்தமாக அறிவிப்பாணைகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதனால், அரசின் அறிவிப்பாணையை எதிர்த்தும், குற்ற நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதேபோல, தடையை மீறியதாக ஒரு … Read more

திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் கலக்கும் சாய ஆலையின் கழிவுநீர்..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் சாய ஆலையின் கழிவுநீர் கலக்கிறது. சாய ஆலையின் கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் குழாயை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிவேக பயணத்துக்காக சிக்கிய கல்லூரி மாணவர்கள், செயின் பறிப்பில் ஈடுபட்டதாக வாக்குமூலம்!

பொள்ளாச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகைகளை பறித்துச் சென்றதாக கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு லட்சுமி நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் தனியாக இருந்த வித்யா என்ற பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 5 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளார். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் … Read more