ஒரே நாளில் ரணகளம் ஆகும் அதிமுக… MGRஐ வச்சு ஸ்டாலின் போடும் அரசியல் கணக்கு!

மக்கள் மத்தியில் எவ்வளவு தான் நற்பெயர் பெற்று வைத்திருந்தாலும், கடைசியில் வாங்கு வங்கி அரசியல் தான் கட்சிகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன. அந்த வகையில் தமிழ்நாடு அரசியல் களம் திமுக , அதிமுக என இருபெரும் திராவிட கட்சிகளின் மோதலாகவே 46 ஆண்டுகளை கடந்து வந்துள்ளது. இதில் தனக்கான வாக்கு வங்கியை தக்க வைப்பதுடன், எதிர்க்கட்சியின் வாக்கு வங்கியை கைப்பற்றுவதும் சுவாரஸியமூட்டும் வியூகம். முதல் பெரிய தேர்தல் தற்போது முதல்வராக பதவி வகித்து வரும் மு.க.ஸ்டாலின் , அடுத்தகட்டமாக … Read more

335 மாடுபிடி வீரர்கள், 800க்கும் அதிகமான காளைகள் – களைகட்டும் பாலமேடு ஜல்லிக்கட்டு

பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் தமிழர்களின் பாரம்பரிய போட்டியான ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக மதுரையின் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை. நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்துமுடிந்த நிலையில், இன்று மாட்டுப் பொங்கலையொட்டி பாலமேட்டில் போட்டி நடைபெறவிருக்கிறது. தமிழகத்தின் அனைத்து சமூகத்தினரும் இணைந்து நடத்துவதே பாலமேடு ஜல்லிக்கட்டின் சிறப்பு. காலை 8 மணிமுதல் தொடங்வுள்ள இந்த போட்டியில் 335 மாடுபிடி வீரர்களும், 800க்கும் அதிகமான காளைகளும் … Read more

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு… 49 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை. உலகப் புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் தினமான இன்று நடைபெற்றது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தென்காள் பாசன விவசாயிகளுக்கும் அவனியாபுரம் கிராம மக்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்..!! பள்ளிகளுக்கு ஜனவரி 18-ம் தேதி விடுமுறை அறிவிப்பு..!!

அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான நேற்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வண்ண கோலமிட்டு, பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மஞ்சள் கொம்பு செடியை கட்டி, மங்களகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இன்று (ஜன. 16) மாட்டுப் பொங்கல் ,17-ம் தேதி காணும் பொங்கல். … Read more

நள்ளிரவில் ரூ.50,000 மதிப்பிலான 160 குடிநீர் குழாய்களைத் திருடி சென்ற திருடன் கைது …!

விழுப்புரம் மாவட்டம் தேவனூரில் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் போடப்பட்ட குடிநீர் குழாய்களை திருடிச்சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். அண்மையில் அங்கு ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான 160 குடிநீர் குழாய்கள் திருடுபோயின. சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்தபோது, நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், ஒவ்வொரு வீடாக சென்று குழாயை திருடியது தெரியவந்தது. இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து பல்வேறு திருட்டு வழக்குகளில் தேடப்பட்டுவந்த அன்பரசன் என்பவனை கைதுசெய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவனது … Read more

கடலூர் மாவட்டத்தில் வயலிலேயே விற்றுத் தீர்ந்த பன்னீர் கரும்புகள்: விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர்: பன்னீர் கரும்புகள் வயலிலேயே விற்று தீர்ந்ததால் கடலூர் விவசா யிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் சுமார் 700 ஏக்கர் அளவில் பன்னீர் கரும்புகளை விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர். இந்த ஆண்டு இப்பகுதிகளில் 742 ஏக்கர் பன்னீர் கரும்பு பயிரிட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனாவால் பன்னீர் கரும்புகள் விலை போகவில்லை. விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்தாண்டு பன்னீர் கரும்பு … Read more

சென்னையில் காணும் பொங்கல் விழா! பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!

சென்னையில் காணும் பொங்கல் நாள் அன்று, பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை விடுத்துள்ள அறிவிப்பில், “ஜனவரி 17 அன்று காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக மெரினா கடற்கரையை ஒட்டி உள்ள காமராஜர் சாலையில் பெருந்திரளாக மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. * காமராஜர் சாலையில் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாகும் … Read more