திடீரென ஏற்பட்ட மரணம்… அவசரமாக கிளம்பிய எடப்பாடி பழனிச்சாமி…!!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த ஊரான எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்திற்கு சென்று இருந்தார். தனது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாரான நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினரான பழனிச்சாமி என்பவர் உயிரிழந்ததாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து பொங்கல் விழா கொண்டாட்டத்தை நிறுத்திய எடப்பாடி பழனிச்சாமி அங்கிருந்த செய்தியாளர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்றார். … Read more

உகாண்டா எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 5 பேர் பலி!….

உகாண்டாவின் எல்லையில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். உகாண்டாவின் எல்லையில் கிழக்கு காங்கோ நகரமான காசிண்டியில் உள்ள தேவாலயத்தில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் என்றும், 15 பேர் காயமடைந்தனர் என்றும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் அந்தோணி முஅலுஷாய் கூறுகையில், “இந்த சம்பவம் நேச நாட்டு ஜனநாயக படைகளால் (ADF) நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம். ஏடிஎப் என்பது உகாண்டா … Read more

உலக புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேரலை..!

பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது மதுரை மாவட்டம் பாலமேட்டில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் உறுதி மொழியை வீரர்கள் முன்னிலையில் படித்தார் மாவட்ட ஆட்சியர் உறுதிமொழியை படிக்க மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்பு ஜல்லிக்கட்டை அமைச்சர் மூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைப்பு  அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்ததும் வாடிவாசல் வழியாக முதல் காளை பாய்ந்து வந்தது பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்காக 1,000 காளைகளின் பெயர் பதிவு ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க 300க்கும் … Read more

மதுரை பாலமேடு, திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது: இளைஞர்கள் உற்சாகம்

மதுரை: பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரை பாலமேடு, திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கின. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதிமொழியேற்பை நடத்தி வைக்க போட்டிகள் தொடங்கின. பாலமேட்டில் பங்கேற்கும் 800 காளைகள்: உலகப் புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் களத்தில் இன்று 800 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. காளைகளை அடக்க 355 இளைஞர்கள் முறைப்படி பதிவு செய்துள்ளனர். போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார். முதலில் ஐய்யனார் கோயில் காலை உள்பட கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதனைத் … Read more

உலகப் புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு உறுதிமொழியுடன் கோலாகலமாக தொடங்கியது.! 1000 காளைகள், 335 மாடு பிடிவீரர்கள் பங்கேற்பு

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி, வீரர்கள் உறுதிமொழியுடன் தொடங்கியது. பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கியது . இந்த  ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகள்,  335 மாடு பிடிவீரர்கள் பங்கேற்றுள்ளனர். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  100 கால்நடை மருத்துவப் பணியாளர்கள் 15 குழுவாக பிரிந்து மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைகள் மற்றும்  மாடுபிடி வீரர்களுக்கு கார்,  மொபட்,  பீரோ , கட்டில், … Read more

திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த புதிய ரூ.100 நோட்டு… உடன்பிறப்புகள் உற்சாகம்…!!

ஆண்டுதோறும் பொங்கல் திருநாளின் பொழுது திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து அக்கட்சியின் தொண்டர்கள் வாழ்த்து பெறுவது வழக்கம். அந்த வகையில் வழக்கம் போல் இந்த ஆண்டும் பொங்கல் திருநாள் வாழ்த்து தெரிவிக்க திமுக தொண்டர்கள் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு வந்திருந்தனர். கட்சித் தொண்டர்களிடம் வாழ்த்து பெற்ற திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அனைவருக்கும் புதிய 100 ரூபாய் நோட்டுகளை பரிசாக வழங்கினார். திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி இருந்த பொழுதே இது போன்ற தொண்டர்கள் … Read more