பொங்கல் பண்டிகை: எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

கோவில்பட்டி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூடும் இந்த சந்தைக்கு கிராமப்புறங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் கொண்டுவரப்படும். திருநெல்வேலி, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்கவியாபாரிகள் வருவார்கள். வாரந்தோறும் இங்கு சுமார் ரூ.2 கோடிவரை விற்பனை நடைபெறும். ரம்ஜான், தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண முகூர்த்த காலங்களில்ஆடுகள் விற்பனை களை கட்டும். இதனால் சுமார் … Read more

பள்ளிகளுக்கு புதன்கிழமையும் விடுமுறையா? அமைச்சர் விளக்கம்!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு சனிக்கிழமை தொடங்கி (ஜனவரி 15) செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது சனிக்கிழமை போகிப் பண்டிகையை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை பெரும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இன்று (ஜனவரி 16) மாட்டுப் பொங்கலும், நாளை (ஜனவரி 17) காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் விடுமுறை முடிந்து புதன்கிழமை ( ஜனவரி 18) பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்கள் மீண்டும் வழக்கம் போல் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் … Read more

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் 4-ம் சுற்று முடிவில் 19 பேர் காயம்

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் 4-ம் சுற்று முடிவில் 19 பேர் காயமடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் 4 பேருக்கும், மாட்டின் உரிமையாளர் ஒருவர், காவல் ஆய்வாளர் ஒருவர் உட்பட 19 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

நடுக்கடலில் தத்தளித்த மிளா மான் மீட்பு – வனத்துறையினரிடம் ஒப்படைத்த மீனவர்கள்

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தத்தளித்த மிளா வகை மானை மீட்டு மீனவர்கள் கரைக்கு கொண்டுவந்தனர். கடலில் வந்த மானை ஏராளமான பொதுமக்கள் அதிசயமாக பார்த்துச் சென்றனர். மீட்கப்பட்ட மான் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஜெரோம் இன்று அதிகாலை 5 மணி அளவில் முயல் தீவு கடற்பகுதி அருகே நண்டு வலை மீன்பிடிப்பதற்காக தனது பைபர் படகில் மூன்று மீனவர்களுடன் சென்றுள்ளார். அப்போது அங்கே நடுக்கடலில் மான் ஒன்று கடலில் தத்தளித்தபடி … Read more

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்… தமிழகத்தின் உரிமையை விட்டுத் தர முடியாது… அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி…!!

தென் தமிழகத்தின் நீராதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்ணன் ஜான் பென்னிகுவிக் அவர்களின் 182வது பிறந்தநாள் விழா தேனி மாவட்டம் லோயர்கேம்பில் உள்ள நினைவு மண்டபத்தில் நடைபெற்றது. ஆண்டுதோறும் தேனி மக்கள் பென்னிகுவிக்கை கடவுளாக நினைத்து பொங்கல் வைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் விவசாய சங்கங்கள் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கர்னல் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உட்பட பல … Read more

மரத்தில் கட்டி வைத்து அடியுங்கள்.. பாஜக பெண் எம்பி சர்ச்சை பேச்சு..!

திரிணாமுல் காங்கிரசார் யாரேனும் அறைந்தால், உங்களது குறைகளை கேட்க அவர் விரும்பவில்லை என்றால், அந்நபரை ஒரு மரத்தில் கட்டி வையுங்கள். நான்கைந்து முறை அவரது கன்னத்தில் நன்றாக அறையுங்கள் என பாஜக கூட்டத்தில் பெண் எம்பி பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் தீதிர் சுரக்சா கவச திட்டம் என்ற பெயரிலான நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் … Read more

வள்ளுவர் வழிநின்று சமத்துவச் சமுதாயம் காண உழைப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவர் வழிநின்று சமத்துவச் சமுதாயம் காண உழைப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,” திருவள்ளுவர் நாளில் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் இரணியன் நா.கு. பொன்னுசாமிக்கு அய்யன் திருவள்ளுவர் விருதையும், கவிஞர் கலி. பூங்குன்றனுக்கு தந்தை பெரியார் விருதையும், எஸ்.வி. ராஜதுரைக்கு அண்ணல் … Read more

சசிகலாவுக்கு கிரீன் சிக்னல்.. ஷாக்கில் எடப்பாடி… டெல்லி மேலிடம் மெகா பிளான்..!

பாஜகவிடம் ஓபிஎஸ் காட்டும் இணக்கம் போல ஈபிஎஸ் காட்டாமல் இருப்பதும், சட்டமன்ற தேர்தலோ, பாராளுமன்ற தேர்தலோ அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று ஈபிஎஸ் உறுதிபட சொல்வதால் இங்குள்ள பாஜக நிர்வாகிகளின் முகமே மாறிவிடுகிறது. சட்டசபையில் உரையாற்றிய ஆளுநர் அண்ணாவின் பெயரை வாசிக்காமல் சென்றதற்கு எவ்வித எதிர்வினையையும் ஆற்றாமல் மவுனம் காக்கும் ஈபிஎஸ், கூட்டணி தலைமையை மட்டும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. என்னதான் டெல்லி ஆதரவு வேண்டும் என்றாலும் மாநில உரிமையை எப்படி விட்டுக்கொடுக்க முடியும் என்று எடப்பாடி … Read more

சென்னையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்…முழு விவரம் இதோ

காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுக்குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது., ஜனவரி 17 அன்று காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக மெரினா கடற்கரையை ஒட்டி உள்ள காமராஜர் சாலையில் பெருந்திரளாக மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இது தொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. * காமராஜர் சாலையில் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாகும் … Read more

மாநிலங்கள் அனைத்தும் இவ்விஷயத்தில் ஒன்றுபடாமல் பிடிவாதம்: இழுத்தடிக்கும் கோதாவரி- காவிரி இணைப்புத்திட்டம்.! மக்கள் பாதிக்கப்படுவதாக ஒடிசா, தெலங்கானா எதிர்ப்பு

வேலூர்: தேசிய நதிநீர் இணைப்புத்திட்டத்தில் கோதாவரி- காவிரி இணைப்புத்திட்டம் சில மாநிலங்களின் பிடிவாதத்தால் நிதி ஒதுக்கீட்டை பெற முடியாமல் சிக்கலை சந்தித்து வருவதாக தென்மாநில விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.இந்திய தேசம் ஒருபுறம் வறட்சியும், மறுபுறம் வெள்ளமும் என்ற சமநிலையற்ற இயற்கை தன்மையும் கொண்டது. இதனை சீராக்கி இயற்கை வளத்தை சமமாக பன்முகப்படுத்தி பயன்படுத்தும் நோக்கமில்லாததால் தேசம் பல இழப்புகளை சந்தித்து வருகிறது. மேலும் இந்திய நாட்டில் மாநிலங்கள் இடையே கருத்தொற்றுமை இல்லாததாலும், தலைவர்களிடையே உள்ள பிராந்திய … Read more