“தமிழக அரசுக்கு ஈரோடு இடைத்தேர்தல் தாக்கத்தை ஏற்படுத்தும்” – சசிகலா கருத்து

தஞ்சாவூர்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தமிழக அரசுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு சசிகலா இன்று (புதன்கிழமை) அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் சசிகலா கூறியது: “வீரவணக்கம் நாள் நிகழ்ச்சி இங்கு நடப்பது தமிழினம், நாடு என்பது இல்லாமல் தமிழரின் ஒற்றுமையைக் குறிக்கும். இங்கு உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட்டணி அமைப்பது குறித்து உங்களிடம் நிச்சயமாகச் சொல்வோம். ஈரோடு … Read more

பிரதமர் மோடி குறித்த BBC ஆவணப்படம் தமிழில் மொழி பெயர்ப்பு – திருமாவளவன் அதிரடி!

பிபிசி ஆவணப்படம் இணையதளத்தில் பார்க்க முடியாத சூழல் உள்ளதால் பிபிசியின் ஆவணப்படத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்து உள்ளார். மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை மூலகொத்தாலத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் விசிக தலைவரும், எம்பியுமான தொல்.திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழ் மொழி மட்டும் அல்லாமல் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து தேசிய மொழிகளையும் … Read more

Tamil Nadu Weather Update: அதிகரிக்கும் காற்றின் வேகம், இன்றைய வானிலை முன்னெச்சரிக்கை

பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 27 ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகக்கூடும். இது அதற்கடுத்த மூன்று தினங்களில் மேற்கு- வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட … Read more

விழுப்புரம் அருகே சொத்துத் தகராறில் அரசு பள்ளி முன்பு ஆசிரியர், மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் சொத்துத் தகராறில் அரசு பள்ளி முன்பு ஆசிரியர் நடராஜனுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது. ஆங்கில ஆசிரியர் நடராஜனை வெட்டுவதை தடுக்க முயன்ற 3 மாணவர்களும் படுகாயமடைந்தனர்.

”மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு எதிராக நிற்கணும்” – காங்கிரஸூக்கு மநீம ஆதரவு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் – காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்,விஜய் வசந்த் எம்.பி,சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா உள்ளிட்டோர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார். இதுகுறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் … Read more

ஒருநாள் போட்டியில் ரோகித் – கில்: ‘டெட்லி ஓப்பனிங்’ கம்போ இனி இவங்க தான்!

ஒருநாள் போட்டியில் ரோகித் – கில்: ‘டெட்லி ஓப்பனிங்’ கம்போ இனி இவங்க தான்! Source link

நீண்ட நாள்களுக்கு பிறகு பருத்தி வரத்து அதிகம்.! மகிழ்ச்சியுடன் நூல் கொள்முதல் பணி.!

கடந்த ஆண்டு பஞ்சு விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வை சந்தித்தது. அதாவது, 65 ஆயிரம் ரூபாயாக இருந்த ஒரு கேண்டி பஞ்சு, சில மாதங்களில் 1.05 லட்சம் ரூபாய் வரை உயர்ந்தது. அதுமட்டுமல்லாமல், பருத்தி மற்றும் பஞ்சு வர்த்தகம் வெளிப்படையாகவும், ‘ஆன்லைன்’ மூலமாகவும் நடப்பதால் யார் வேண்டுமானாலும் பருத்தி கொள்முதல் செய்து கொள்கின்றனர்.  இந்தாண்டும் பஞ்சு விலை உயரும் என்று விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால், அக்டோபர் மாதம் முதல், மூன்று மாதங்களாக பஞ்சு வரத்து குறைவாகவே … Read more

கட்டிடம் இடிந்து 3 பேர் பலி.. எம்எல்ஏ மகன் கைது..!

உத்தரப் பிரதேசத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சமாஜ்வாடி எம்எல்ஏவின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் லக்னோ நகரில் ஹஜ்ரத்கஞ்ச் பகுதியில் 4 மாடி கட்டிடம் ஒன்று நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இந்த கட்டிடம், சமாஜ்வாடி கட்சியின் எம்எல்ஏ ஷாகித் மன்சூர் என்பவரின் மகன் நவாஷிஷ் ஷாகித் மற்றும் மன்சூரின் மருமகனான முகமது … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சமக போட்டியில்லை; யாருக்கும் ஆதரவு இல்லை: சரத்குமார் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். இது குறித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து நேற்று (ஜன.24) காலை சென்னை தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனைக்கூட்டம் நடந்ததை அறிவீர்கள். மேலும், நேற்று மாலை உயர்மட்டக்குழு … Read more

ஈரோட்டில் வெற்றி நிச்சயம்…. திமுக மூத்த அமைச்சர் அபார நம்பிக்கை!

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் வளாகத்தில் 1,519 பயனாளிகளுக்கு 937 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் வழங்கினர் – இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என் நேரு, “ஈரோடு தேர்தல் பணிகள் குறித்து முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார் – திமுக நிச்சயம் வெற்றி பெறும். … Read more