காஞ்சிபுரத்தில் 49 பேர் குண்டர் சட்டத்தில் சிறை!

கடந்த ஓராண்டில் மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 49 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை, போலீசார் அதிரடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில், இன்று காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளின் நிலுவையில் உள்ள வழக்குகளை துரிதமான விசாரணை மூலம் முடித்து, … Read more

அப்பள தகராறில் கணவன்மீது எண்ணெய் ஊற்றிய வழக்கு!!

உணவுக்கு அப்பளம் பொறித்து தருவதில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வழக்கில் மனைவிக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கிருஷ்ணகிரியை சேர்ந்த அப்துல் ரசித் என்பருவக்கும் அவரது மனைவி ஆயிஷாவிற்க்கும் அடிக்கடி சண்டை நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு உணவின்போது, கணவர் அப்துல் ரசித், மனைவியிடம் அப்பளம் பொறித்து தருமாறு கேட்டுள்ளார். அது தாமதமாகவே, அப்துல் ரசித் … Read more

செம்பட்டி அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து:  இடிபாடுகளிடையே சிக்கிய தம்பதியை மீட்க தீயணைப்புத் துறையினர் போராட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியைச் சேர்ந்த ஜெயராம் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில், மேல் தளத்தில் இருந்த கட்டிடம் சரிந்தது. இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ள ஜெயராம் மற்றும் அவரது மனைவியை மீட்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்த இந்துமுன்னணி திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயராம்(42). இவர் செம்பட்டி அருகே பட்டாசு கடை நடத்திவருகிறார். பட்டாசு கடை கீழ்தளத்தில் உள்ள நிலையில் முதல் மாடியில் … Read more

அகத்தியர் சேட்டிலைட்.. திருவள்ளூர் மாணவிகள் அசத்தல்!

தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு செயற்கைகோள் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் பல்வேறு கட்டமாக தேர்வு செய்யப்பட்டனர். இந்த திட்டத்தின் கீழ், மூன்று கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 75 மாணவ மாணவிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்படுவதை பார்வையிட சமீபத்தில் அனுமதிக்கப்பட்டனர். இக்குழுவில் திருவள்ளூர் மாவட்டம், சிறுவானூர் கிராமத்தை சேர்ந்த பூபாலன்-சரஸ்வதி தம்பதியின் மகள் இவாஞ்சலின் மற்றும் கை வண்டூர் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் … Read more

காணும் பொங்கல் உற்சாக கொண்டாட்டம் மேட்டூர், ஏற்காடு, குரும்பப்பட்டி பூங்காவில் மக்கள் குவிந்தனர்

சேலம்: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மக்கள் ஒருவார காலத்திற்கு கொண்டாடும் வகையில் போகி பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், உழவர்திருநாள், காணும்பொங்கல் என அடுத்தடுத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில், பொங்கல் முடிந்த 3வது நாளான இன்று காணும் பொங்கல் விழா, உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர் கலாச்சாரத்தில் உறவுகளை காணும் நிகழ்வாக இவ்விழாவை பண்டைய காலம் முதல் கொண்டாடி வருகிறோம். உறவினர்களின் வீடுகளுக்கு செல்வது, கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் ஒன்று திரண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது என … Read more

‘ரோகிணியில் அதிகாலை 4 மணிக்கு என் கூட போட்டோ எடுத்தாங்களே… அவர்களுக்கான படம் இது’

‘ரோகிணியில் அதிகாலை 4 மணிக்கு என் கூட போட்டோ எடுத்தாங்களே… அவர்களுக்கான படம் இது’ Source link

குடியரசு தின விழாவுக்காக ஆளுநருக்கு சமாதான கொடி.. திமுக தரப்பு தீவிரம்..!!

தமிழக ஆளுநராக கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்றுக்கொண்ட ஆர்.என் ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே அரசியல் ரீதியில் பல முரண்பாடுகள் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக அவர் பாஜகவின் கருத்துக்களை பொதுவெளியில் பேசி வருவது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்த நிலையில் கடந்த ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப் பேரவை கூட்டத் தொடரில் தமிழக அரசால் வழங்கப்பட்ட உரையை வாசிக்காமல் சில பகுதிகளை சேர்த்தும் நீக்கியும் … Read more

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் நாய் உயிரிழப்பு – சகோதரி பதிவிட்ட உருக்கமான ட்விட்..!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இவரின் மரணம் பாலிவுட் திரையுலகம் மட்டுமின்றி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நடிகர் சுஷாந்த் ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடரில் நடித்து இருந்தார். பின்னர் தொலைக்காட்சி டான்சராகவும், சிறு சிறு கதாபாத்திரத்திலும் நடித்து சினிமாவில் கால் தடம் பதித்தார். 2010 ஆம் ஆண்டு வெளியான Kai Po Che என்ற படம் மூலம் தான் இந்தி சினிமாவில் அறிமுகமானவர் சுஷாந்த் … Read more

“மக்கள் மனதில் இன்றளவும் நாயகனாக நிலைத்து நிற்பவர் எம்ஜிஆர்” – கமல்ஹாசன்

சென்னை: “இன்றளவும் மக்கள் மனதில் நாயகனாக நிலைத்து நிற்பவருமான மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் என் வாழ்த்து” என்று அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர் பிறந்தாளை முன்னிட்டு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”தமிழ்த் திரையுலகம் கண்டதிலேயே அதிக அளவு கேளிக்கையை ரசிகர்களுக்குக் கொடுத்து பெரும் நட்சத்திரமாகத் திகழ்ந்தவரும், இன்றளவும் மக்கள் மனதில் நாயகனாக நிலைத்து நிற்பவருமான மக்கள் … Read more

ஓபிஎஸ், டிடிவி மற்றும் சசிகலா தனிக்கட்சி.. ஜெயக்குமார் போட்டுக்கொடுக்கும் ரூட்…

ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் தமிழ்நாட்டு அரசியல் சூழல் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. ஆளுநர் ரவி அரசியல் செய்து வருவதாகவும், சட்டசபையில் அவரது உரை குறித்தும் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித் சசிகலா, ஆளுநர் உரை குறித்து ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் நான் பார்த்து இருக்கிறேன். அரசு தயாரித்த உரையின் நகலை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அதில் ஏதாவது திருத்தம் இருந்தால் ஆளுநர் செய்து அனுப்புவார். அதற்கு பிறகு இரண்டாவது … Read more