பாடம் நடத்தாமல் கழிவறையை சுத்தம் செய்ய சொன்ன ஆசிரியர்கள்: அரசு பள்ளியில் அவலம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிளவிப்பட்டியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய சொல்வதாகவும், பாடம் நடத்தமால் செல்போனில் ஆசிரியர்கள் கேம் விளையாடி வருவதாகவும், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் பள்ளியை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ளது கிளவிபட்டி கிராமம். இங்கு அரசு ஊராட்சி … Read more

மாமியார் வீட்டில் இருந்து நைசாக பேசி அழைத்து வந்து கொடூரம்; இரும்பு கம்பியால் அடித்து மனைவி கொலை: சடலத்தை வீட்டில் பூட்டி விட்டு போலீசில் சரணடைந்த கணவன்

ஸ்ரீகாளஹஸ்தி: நடத்தை சந்தேகத்தால் மாமியார் வீட்டில் இருந்த மனைவியை நைசாக பேசி அழைத்து வந்து இரும்பு கம்பியால் அடித்து கொன்று சடலத்தை வீட்டிலேயே வைத்து பூட்டிவிட்டு கணவர் போலீசில் சரணடைந்தார். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி அடுத்த சூளூர்பேட்டையை சேர்ந்தவர் செங்கையா (30), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி உமாமகேஸ்வரி (25). இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கிருத்திகா என்ற மகளும் விக்னேஷ்வர் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் என்டிஆர் நகரில் வாடகை வீட்டில் … Read more

ஹெலிகாப்டர் விழுந்து விபத்து.. உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் பலி..!

உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் இன்னும் சில வாரங்களில் ஓர் ஆண்டை நெருங்கவுள்ளது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் உருக்குலைந்து போயின. அதேவேளையில், இந்த போரில் ரஷ்யாவும் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. போரில் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் போரில் இருந்து பின்வாங்காத ரஷ்யா தொடர்ந்து வீரர்களை அணிதிரட்டி போர் முனைக்கு அனுப்பிவருகிறது. இந்த நிலையில், … Read more

அரசுப்பள்ளி மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய சொன்னதாக புகார்.. பள்ளியை மூடி மாணவர்கள் பெற்றோர்கள் போராட்டம்..!

கோவில்பட்டி அருகே கிளவிப்பட்டி கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில், மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்யச் சொல்வதாக கூறி பள்ளிக்கு பூட்டுப்போட்டு மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். இப்பள்ளியில் 33 மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தலைமையாசிரியரும் மற்றும் சில ஆசிரியர்களும், மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய சொல்வதோடு, ஆசிரியர்கள் கழிவறையை பயன்படுத்த தண்ணீர் எடுத்து வர சொல்வதாகவும், மாணவர்களை அவதூறான வார்த்தைகளால் திட்டுவதாகவும் கூறி, ஆசிரியர்களை … Read more

ஜீவனாம்ச வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க குடும்ப நல நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பராமரிப்புத் தொகை மற்றும் ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை குறித்த காலத்துக்குள் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டுமென குடும்ப நல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களது மகனிடம் இருந்து பராமரிப்புத் தொகை கோரி கடந்த 2014-ம் ஆண்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நிலுவையில் உள்ள நிலையில் தாய் – தந்தைக்கு இடைக்கால நிவாரணமாக மாதம் 20 ஆயிரம் … Read more

சென்னை – போடி ரயில் வந்தது; பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் – மதுரை இடையே மீட்டர் கேஜ் பாதை கடந்த டிசம்பர் 31, 2010ம் ஆண்டு நிறுத்தப்பட்டு, அகல ரயில் பாதை திட்ட பணிகள் தொடங்கியது. 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இருப்புப் பாதை அமைக்கும் பணிகள் தேனி வரை முடிவடைந்த நிலையில், கடந்த வருடம் (2022) மே மாதம் 26ம் தேதி முதல் தேனியில் இருந்து மதுரை வரை பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதையடுத்து தேனி-போடி இடையே பணிகள் துரிதமாக நடந்தது. … Read more

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது!

Erode East Bypolls: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி அடுத்த மாதம் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி நடைபெறும். முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவா் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா. வெறும் 46 வயதே ஆன இவர், கடந்த ஜனவரி 4 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை … Read more

தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

வத்திராயிருப்பு: தை அமாவாசை, பிரதோஷத்தை முன்னிட்டு நாளை முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு, நாளை முதல் வரும் 22ம் தேதி வரை 4 நாட்களுக்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நாளை தை பிரதோஷத்தையொட்டி சுந்தரமகாலிங்கம் சாமிக்கு பால், பழம், இளநீர் அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. இதையடுத்து … Read more

தென்காசி: பன்றிகளுக்கு பயந்து தான் அமைத்த மின்வேலியிலேயே சிக்கி உயிரிழந்த விவசாயி!

தென்காசி மாவட்டம் புளியங்குடி மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள கோட்ட மலையாற்றுப் பகுதியில் தனது நிலத்தில் நெற்பயிர்களை பன்றிகள் சேதப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக மின்வேலி அமைத்திருந்தவரே அதை அறியாமல் மிதித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே புன்னையாபுரத்தைச் சேர்ந்தவர் பலவேசம் மகன் அனுஞ்சி(50). இவருக்கு மேற்குத்தொடர்ச்சி மலையில்  கோட்டை மலையாற்றுப் பகுதியில் 4 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தென்னை மற்றும் நெல் பயிரிட்டு விவசாயம் செய்து வந்தார் அனுஞ்சி. நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி … Read more

ரெட் ஜெயன்ட் பிரச்னை: ஸ்டாலின்- உதயநிதி மீது விஜிலன்ஸில் சவுக்கு சங்கர் புகார்

ரெட் ஜெயன்ட் பிரச்னை: ஸ்டாலின்- உதயநிதி மீது விஜிலன்ஸில் சவுக்கு சங்கர் புகார் Source link