செய்யாறு பஸ் நிலையத்தில் உள்ள விநாயகர் கோயில் நள்ளிரவு இடிப்பு: 4 பேரிடம் விசாரணை

செய்யாறு: செய்யாறு பஸ் நிலையம் அருகே இருந்த விநாயகர் கோயில் நள்ளிரவு  இடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அருகே பழமையான விநாயகர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலின் அருகே டூவீலர்கள் நிறுத்துவது வழக்கம். இந்நிலையில் நேற்று நள்ளிரவு காரில் வந்த 4 மர்ம நபர்கள் இக்கோயிலை இடித்துள்ளனர். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக இந்து … Read more

மயிலாடுதுறை: புனித அந்தோணியார் ஆலயத்தில் பொங்கல் படையல் வழிபாடு!

மயிலாடுதுறை மாவட்டம் கஞ்சாநகரத்தில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் படையல் வழிபாடு நடைபெற்றது. தங்களது பிரார்த்தனை நிறைவேறியவர்கள் பொங்கல் வைத்து படையல் இட்டு, குலவையிட்டு கும்மி அடித்தும், கொண்டாடினர். குழந்தை வரம் வேண்டிய தம்பதியினர் பிரார்த்தனை செய்து ஒரே வாழை இலையில் பொங்கல் உண்டும் தங்களது கோரிக்கைகளை வைத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் மேலையூரை அடுத்த கஞ்சாநகரத்தில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு புத்திர பாக்கியம் வேண்டியும், நோய் தீர வேண்டியும், … Read more

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பள்ளி மாணவியின் காளை வெற்றி.! 

பொங்கல் பண்டிகை என்றாலே ஜல்லிக்கட்டு தான். அதிலும் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அவனா புறம் மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மிகவும் பிரபலமானது. இதில் பல ஊர்களில் இருந்து பல மாடு பிடி வீரர்கள் மற்றும் காளைகள் பங்கேற்று வருகின்றனர். அந்தவகையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மதுரை ஐராவதநல்லூரை சேர்ந்த யோக தர்ஷினி என்ற பள்ளி மாணவியின் காளை வெற்றி பெற்றுள்ளது.  இவர் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து … Read more

இவ்வளவு பெரிய நிறுவனம் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதால் ஊழியர்கள் அதிர்ச்சி..!!

உலகம் முழுவதும் பணவீக்கம் என்ற மாய அரக்கன் அனைத்தையும் அசைத்து கொண்டிருக்கிறான். சிறு நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அண்மையில் பல்வேறு நிறுவனங்கள் செலவுகளை குறைப்பதற்காக ஊழியர்களை வெளியேற்றி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது மைக்ரோசாப்ட், ட்விட்டர் ஆகிய நிறுவனங்களும் இணைந்துள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பொறுத்த அளவில் ஏற்கெனவே கடந்த அக்டோபர் மற்றும் ஜூலை மாதங்களில் ஆட்குறைப்பை அறிவித்தது. இந்நிலையில் இதனையடுத்து மீண்டும் ஆட்குறைப்பை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் … Read more

சிறுவன் கோகுல் ஸ்ரீ மரணம் | கூர்நோக்கு இல்லங்களை ஆய்வு செய்ய ஆணையம் அமைக்க வைகோ வலியுறுத்தல்

சென்னை: “தமிழ்நாடு முழுவதும் உள்ள கூர்நோக்கு இல்லங்களை கள ஆய்வு செய்ய ஆணையம் அமைத்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாம்பரம் கன்னடபாளையம் குப்பை மேடு பகுதியில் வசித்து வரும் கணவனை இழந்த கைம்பெண் பிரியாவிற்கு ஆறு குழந்தைகள் உள்ளனர். உறவுகள் இல்லாத ஆதரவற்ற நிலையில் மூத்த மகன் கோகுல் ஸ்ரீ (17) பத்தாம் வகுப்பு வரை … Read more

ஜி.கே.வாசனுக்கு அல்வா..பாஜகவுக்கு கல்தா; எடப்பாடி பழனிச்சாமி..வேற லெவல் வியூகம்!

அதிமுக பொன் விழா ஆண்டான கடந்த 2022 டிசம்பர் 5ம் தேதி, ஜெயலலிதா நினைவு நாளில் எடப்பாடி பழனிசாமி , ஒ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தலைமையில் 4 அணிகளாக பிரிந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த பிறகு ஓபிஎஸ் -இபிஎஸ் இடையே மனக்கசப்பை அதிகரிக்கும் விதமாக கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆங்காங்கே சர்ச்சைகள் தலைகாட்டின. குறிப்பாக, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் … Read more

பாரதியார் பல்கலை வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் இல்லை: வனத்துறை அதிகாரிகள் விளக்கம்

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சமூகவலைதளங்களில் பரவி வரும் வீடியோ தவறானது என வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கோவை மருதமலை அடுத்த பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் வைரலானது. பலர் சிறுத்தை நடமாட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் இருப்பது உண்மை எனவும், பலர் இது போன்ற … Read more

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தூக்க மருந்துக்கு கொடுக்கக் கூடாது! எச்சரிக்கை!

மருத்துவர் பரிந்துரையின்றி தூக்க மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள், மனநோய் மற்றும் தூக்க மருந்துகளின் தவறான பயன்பாட்டைத் தடுக்க மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை ரசீதுகளுடன் விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுவதாக மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மனநோய் மற்றும் தூக்க மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க சென்னை மற்றும் … Read more

புத்தகங்களை மொழிபெயர்த்தால் 3 கோடி ரூபாய்… முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு…!!

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த ஜனவரி 6ஆம் தேதி சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கியது. இந்த புத்தக கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வந்த சர்வதேச புத்தகக் கண்காட்சியின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பேருரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர் “இலக்கியச் செழுமை மிக்க நமது தமிழ்ப் புத்தகப் படைப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கவும், … Read more