சிறுவன் கோகுல் ஸ்ரீ மரணம் | கூர்நோக்கு இல்லங்களை ஆய்வு செய்ய ஆணையம் அமைக்க வைகோ வலியுறுத்தல்
சென்னை: “தமிழ்நாடு முழுவதும் உள்ள கூர்நோக்கு இல்லங்களை கள ஆய்வு செய்ய ஆணையம் அமைத்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாம்பரம் கன்னடபாளையம் குப்பை மேடு பகுதியில் வசித்து வரும் கணவனை இழந்த கைம்பெண் பிரியாவிற்கு ஆறு குழந்தைகள் உள்ளனர். உறவுகள் இல்லாத ஆதரவற்ற நிலையில் மூத்த மகன் கோகுல் ஸ்ரீ (17) பத்தாம் வகுப்பு வரை … Read more