கிணற்றில் மிதந்த பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தையின் சடலம் – தாய் சொன்ன அதிர்ச்சி தகவல்

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே கட்டார்குளத்தில் பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தை கிணற்றில் வீசி படுகொலை செய்யப்பட்டது. குழந்தையை பெற்ற தாயே கொலை செய்தாரா என்ற சந்தேகத்தின் பேரில் களக்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கட்டார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். ஆட்டோ டிரைவரான இவரது மனைவியின் பெயர் இசக்கியம்மாள் (வயது 28). கொஞ்சம் மனநலம் சரியில்லாமல் இருந்து வந்த இசக்கியம்மாளுக்கு கடந்த 13ஆம் தேதி பெண் … Read more

இனி ஒவ்வொரு மாதமும் மின்கட்டண உயர்வு? மின்சார சட்டத் திருத்தத்திற்கு டாக்டர் இராமதாஸ் கடும் கண்டனம்!

மின்சாரக் கட்டணத்தை ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்க வழிவகுப்பதா? மின்சார சட்டத் திருத்த விதிகளை செயல்படுத்தக் கூடாது என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “மத்திய அரசு அறிவிக்கை செய்துள்ள மின்சார சட்டத் திருத்த விதிகள் 2022 நடைமுறைப்படுத்தப்பட்டால், மின்சாரக் கட்டணம் அதன் உற்பத்திச் செலவு மற்றும் கொள்முதல் விலைகளுக்கு ஏற்ற வகையில்  ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்! மின்சாரத்தை உற்பத்தி … Read more

குட் நியூஸ்.. தட்டச்சு தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்..!

பிப்ரவரி மாதத்தில் நடக்கும் வணிகவியல் தட்டச்சு தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி மாதம் 20-ம் தேதி கடைசி நாள் என முன்பு கூறப்பட்டிருந்தது. இதற்கிடையில், தனித் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கூடுதல் அவகாசம் வழங்க கோரிக்கை வந்துள்ளது. அதன்படி, இணையத்தில் பதிவுசெய்த தனித் தேர்வர்கள் வருகிற 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் செய்து தங்களுக்கான தேர்வு அணிகளை தேர்வு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களை https://dte.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம் என தமிழக … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக நிர்வாகக் குழுவை பாஜக அமைத்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

திருநெல்வேலி: “ஈரோடு இடைத்தேர்தல் வேலைக்காகவே 14 நிர்வாகிகள் கொண்ட குழுவை பாஜக தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்” என்று அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். திருநெல்வேலியில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக போட்டியிடுகிறதா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியைப் பொறுத்தமட்டிலும், அது ஏற்கெனவே தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதி. … Read more

உலகப் பொருளாதார மன்றம் 2023: கவனம் ஈர்த்த தமிழ்நாடு அரங்கு!

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum – WEF) வருடாந்திரக் கூட்டம் 2022இல் தமிழ்நாடு முதன் முறையாக பங்கேற்று, உலகின் முன்னணி முதலீட்டாளர்கள், தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் அரசாங்கப் பிரதிநிதிகளை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்திடுவது குறித்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அது போலவே, இந்த ஆண்டும், டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டம் 2023 ல் … Read more

தமிழகத்தில் மீண்டும் மழை: சென்னை வானிலை மையம் தகவல்

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. மேலும் நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 22, 23 தேதிகளில் … Read more

வரலாற்று சிறப்புமிக்க காலிங்கராயன் வாய்க்கால் 740 ஆண்டுகளாக பாசனம் அளித்து வரும் அதிசயம்: மாசுபாட்டில் இருந்து கால்வாயை பாதுகாக்கக் கோரிக்கை..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் பாசனமாக விளங்கிவரும் காலிங்கராயன் வாய்க்கால். பாண்டிய மன்னனின் தளபதியாக விளங்கிய காலிங்கராயனரால் கி.பி 1282ம் ஆண்டில் வெட்டப்பட்டதாகும். அதிகப்படியான பவாணியாற்று வெல்ல நீரை அணைகட்டி மேடான பகுதிக்கு தண்ணீரை திருப்பி நொய்யல் ஆற்றுடன் இணைக்க காலிங்கராயன் வாய்க்கால் வெட்டப்பட்டு பாசனத்திற்காகவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் திறக்கப்பட்ட தினம் இன்று. காலப்போக்கில் தொழில் வளர்ச்சி, நகர மயமாதல் போன்ற காலத்தின் சூழல் காலிங்கராயன் கால்வாயையும் விட்டுவைக்கவில்லை. பவானி நதியிலிருந்து தூய்மையான தண்ணீர் காலிங்கராயன் … Read more

தமிழக அரசின் முக்கிய புள்ளியாக உதயசந்திரன் ஐஏஎஸ்… அனுஜ் ஜார்ஜ்.,க்கு வழங்கப்பட்ட துறைகள் பறிப்பு..!!..!!

தமிழக அரசின் முக்கிய செயலாளர்களில் முதன்மையாக இருப்பவர் முதல்வர் மு.க ஸ்டாலினின் தனிச்செயலாளராக இருக்கும் உதயசந்திரன் ஆவார். இவருக்கு தற்பொழுது சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று முதல்வர் மு க ஸ்டாலின் மற்றொரு துணைச் செயலாளராக உள்ள உமாநாத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறு குறு நடுத்தர தொழில் துறை, ஆதிதிராவிடர் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மற்றொரு செயலாளரான சண்முகத்திற்கு கால்நடை … Read more

மாணவி தற்கொலை.. கைதான பாஜக பிரமுகர் மீது மற்றொரு இளம்பெண் புகார்..!

கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் கைதான பாஜக பிரமுகர் மீது மற்றொரு இளம்பெண் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகா குதிரைமுகா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பி.யூ. கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டார். அதுதொடர்பாக அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் … Read more