கோயம்பேடு சந்தை: (25.01.2023)இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 25/01/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல். மகாராஷ்டிரா வெங்காயம் 22/20/18 ஆந்திரா வெங்காயம் 16/14 நவீன் தக்காளி 20 நாட்டு தக்காளி 17/15 உருளை 25/20/17 சின்ன வெங்காயம் 70/50/40 ஊட்டி கேரட் 30/25/20 பெங்களூர் கேரட் 15 பீன்ஸ் 25/20 பீட்ரூட். ஊட்டி 30/28 கர்நாடக பீட்ரூட் 20/17 சவ் சவ் 12/12 முள்ளங்கி 20/15 முட்டை கோஸ் 8/6 வெண்டைக்காய் 70/50 … Read more

வரும் ஜனவரி 29 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.பி.க்கள் கூட்டம்..!!

2023-24 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து விவாதிக்க, ஜனவரி 29-ம் தேதி திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கட்சியின் மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் 29.01.2023 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட … Read more

ரூ.30 லட்சம் கேட்டு கணவன்-மனைவி காரில் கடத்தல்… 6பேர் கொண்ட கூலிப் படையினரை பிடிக்கும் பணி தீவிரம்

மணப்பாறை அருகே தம்பதியைக் கடத்தி 30 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். ஆபிசர்ஸ் டவுனில் வசித்து வரும் பழனியப்பன்- சந்திரா ஆகியோர் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் சென்னைக்கு காரில் வந்தபோது சமயபுரம் அருகே 6பேர் கொண்ட கும்பல் வழிமறித்து   கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் 30 லட்சம் ரூபாய் பணம் கேட்டு அவர்களின் மகன் கலைச்செல்வனிடம் கடத்தல் கும்பல் மிரட்டியுள்ளது.  இதுதொடர்பாக  புகாரின் பேரில் போலீசார் … Read more

நாளை குடியரசு தின விழாவையொட்டி ட்ரோன்கள் பறக்க தடை – சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு, நாளை சென்னை உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசியக் கொடியைஏற்றி வைத்து, முப்படையினர், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் மற்றும் விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். விழாவை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் 74-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா காமராஜர் சாலையில் சேப்பாக்கம் பகுதியில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெறும் விழாவில் … Read more

ஈரோடு கிழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த இந்து அமைப்பு!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில் பிற கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்காமலேயே பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அதிமுகவை பொறுத்தவரை பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் இரு தரப்பும் தங்கள் சார்பில் வேட்பாளரை அறிவிப்போம் என்று கூறிவருகின்றனர். அத்துடன் கூட்டணிக் கட்சியினரை நேரடியாக சென்று சந்தித்து இரு தரப்புமே ஆதரவு கோரி வருகின்றனர். இந்த சூழலில் … Read more

சேலம் அருகே பரிதாபம்.! ரூ.40 லட்சம் கந்து வட்டி கேட்டு மிரட்டியதால் கணவன்-மனைவி தற்கொலை.!

சேலம் மாவட்டத்தில் ரூபாய் 40 லட்சம் கந்து வட்டி கேட்டு மிரட்டியதால் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் அழகாபுரம் பெரிய புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (65). இவரது மனைவி சாந்தி (55). இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை ராஜேந்திரன் மற்றும் சாந்தி தனித்தனி கட்டலில் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்துள்ளனர். இதையடுத்து இந்த … Read more

வைரல் வீடியோ!!கார் கூரையின் மீது அமர்ந்து காதலர்கள் அட்டூழியம்..!!

லக்னோவில் ஒரு ஜோடி ஸ்கூட்டரில் ஒருவரையொருவர் காதலிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ விவாதப் பொருளாக மாறியதுடன், அந்த ஜோடியும் தண்டிக்கப்பட்டனர். இப்போது, ​​லக்னோவில் இருந்து மற்றொரு வீடியோ வைரலாகி வருகிறது, அதில் காதலர்கள் தங்கள் காதலை காரின் உச்சிக்கு எடுத்துச் செல்வதைக் காணலாம். வீடியோவில், ஹூண்டாய் வெர்னா போன்று நகரும் செடானில் ஒரு ஜோடி, சன்ரூப்பில் இருந்து வெளியே வந்து, வாகனம் ஓடிக்கொண்டிருக்கும்போது ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதைக் காணலாம். கிளிப் மேலும் நகரும்போது, ​​ஓட்டுநர் … Read more

பொதுமக்கள் தாமாக முன்வந்து மானியத்தை விட்டுக்கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் – மின்வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: மின்சார மானியத்தை பொதுமக்கள் தாமாக முன்வந்து விட்டுக்கொடுக்கும் திட்டத்தை அமல்படுத்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ள நிலையில், விரைவில் இத்திட்டத்தை மின்வாரியம் செயல்படுத்த உள்ளது. தமிழகத்தில் உள்ள 2.34 கோடி வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் வரைஇலவசமாகவும், 500 யூனிட் வரை மானியவிலையிலும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர, 9.75 லட்சம் குடிசைவீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதால், மின்வாரியத்துக்கு ரூ.450 கோடி செலவாகிறது. … Read more