தனியார் நிறுவன பால் லிட்டருக்கு ரூ.2 உயர்வு

சென்னை: தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி அறிவித்துள்ளன. பால், தயிர் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் நிறுவன பாலுக்கும், தனியார் பாலுக்கும் லிட்டருக்கு ரூ.20 வரை வித்தியாசம் இருந்து வருவதால், கடைகளில் ஆவின் பாலுக்கு தேவை அதிகமாக உள்ளது. ஆனாலும், தனியார் நிறுவன பால் விலை கடந்த ஆண்டு 4 முறை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், சில தனியார்பால் நிறுவனங்கள் பால், தயிர் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. ஒரு … Read more

Mrs South India 2023: கோவைக்கு கிடைச்ச பெருமை… யார் இந்த ஷாலுராஜ்?

கேரள மாநிலம் கொச்சியில் தென்னிந்திய திருமதி அழகி (Mrs South India) போட்டி 2023 சமீபத்தில் நடைபெற்றது. இது திருமணமான பெண்களுக்காக பிரத்யேகமாக நடத்தப்படும் அழகி போட்டி ஆகும். இதில் தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த 14 பெண்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இதற்கான இறுதி போட்டி கடந்த ஜனவரி 16ஆம் தேதி கொச்சியில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் நடைபெற்றது. பட்டம் வென்ற மெரின் ஜான் அவர்களில் மெரின் ஜான் என்ற பெண் அதிக மதிப்பெண்களை பெற்று … Read more

பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் : அமைச்சர் சேகர்பாபு பேட்டி

பழனி: பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். ஆகம விதிகளுக்கு உட்பட்டு குடமுழுக்கில் தமிழில் மந்திரங்கள் ஓத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சேகர் பாபு பேட்டியளித்துள்ளார். பழனி கோயிலில் இருந்து இடும்பன் வரை ரோப்கார் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி கோவிலில், பெரும் பொருட்செலவில் பல்வேறு சீரமைப்பு பணிகள் … Read more

'முத்தமிழ் வளர்க்கும் ஆட்சியாக திமுக ஆட்சி செயல்படுகிறது' – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு 

“கலை ஆர்வம் உள்ள நபர்கள், கலை திறமை உள்ள நபர்கள், நல்ல ஆசிரியர்களிடம் இருந்து கலைகளை கற்று கொண்டு கலைகளை காலம் எல்லாம் வளர்க்க துணை புரிய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை மைலாப்பூர் பாரதிய வித்யா பவனில் 43வது வழுவூரார் நடனம் மற்றும் இசை விழாவில் கலந்து கொண்டு விருதுகள் வழங்கிய பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார் அப்போது பேசிய அவர், ”நாட்டிய கலையை அரசு மட்டும் இல்லாமல் தனி நபர்களும் வளர்க்க … Read more

தியேட்டருக்குள் விடாததால் அஜித் ரசிகர் தூக்கு போட்டு தற்கொலை..!!

பொங்கலை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த துணிவு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை அடுத்த பிரையண்ட் நகரை சேர்ந்த வீரபாகு என்பவர் தீவிர அஜித் ரசிகராக இருந்து வந்துள்ளார். இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் கோல்டன்புரத்தில் உள்ள கே.எஸ்.பி.எஸ் திரையரங்கிற்கு துணிவு படம் பார்க்க சென்றுள்ளார். அப்பொழுது வீரபாகு மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தியேட்டரில் பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்கள் … Read more

கிராமங்களில் வசிக்கும் மக்கள் குறைகளை போக்கும் விதமாக கிராமங்களுக்கே நீதிபதிகள் தேடி வந்து நீதி வழங்க ஏற்பாடு – மத்திய அமைச்சர்

கிராமங்களில் வசிக்கும் மக்கள் குறைகளை போக்கும் விதமாக கிராமங்களுக்கே நீதிபதிகள் தேடி வந்து நீதி வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் அரியலூர் திருக்கை கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற அவர், ஏழை மக்கள், சாதாரண மக்கள், விவசாய மக்கள் அதிகம் உள்ள கிராமத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை ஆய்வு செய்யவே தாம் தமிழகம் வந்து இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் … Read more

கள்ளக்குறிச்சி | கர்ப்பிணி உயிரிழப்பு; மருத்துவர் இல்லாததால் நேர்ந்ததாக உறவினர்கள் போராட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் பிரசவத்திற்கு அரசு ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட கர்ப்பிணி பணியில் மருத்துவர் இல்லாததால் அலைக்கழிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவருடைய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் சேராப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு நேற்று மாலை பிரசவத்திற்காக பெண் ஒருவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு பிரசவம் பார்க்க மருத்துவர்கள் யாரும் இல்லாமல் செவிலியர் மட்டும் இருந்துள்ளார். அதனால் அந்த பெண்ணிற்கு இரவு பிரசவம் பார்க்க … Read more

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின் சப்பர முகூர்த்தம் 26ம் தேதி தொடக்கம்..!!

மதுரை: மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான சப்பர முகூர்த்தம் 26ம் தேதி தொடங்குகிறது. சப்பர முகூர்த்தம் மற்றும் ஸ்தலாங்கம் பார்க்கும் நிகழ்ச்சி 26ம் தேதி நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மே 5ம் தேதி சித்ரா பௌர்ணமி நாளில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  

உரிமமின்றி நாட்டுத் துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிந்த இளைஞர்… மடக்கி பிடித்த காவல்துறை!

கெங்கவல்லி அருகே உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து இரு நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே இளைஞர் ஒருவர் இரு நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிவதாக கெங்கவல்லி போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் ஆகியோருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது இளைஞர் ஒருவர் இரு நாட்டுத் துப்பாக்கியுடன் இருப்பதைக் … Read more