காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி, விவசாயி படுகாயம்.! அச்சத்தில் கிராம மக்கள்.!
கோவை மாவட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்துள்ளார். மேலும் விவசாயி படுகாயம் அடைந்துள்ளார். கோவை மாவட்டம் கோவனூர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள திருமாலூரை சேர்ந்தவர் விவசாயி சவுந்தர்ராஜன்(58). இவர் நேற்று காலை சங்கிரி கருப்பட்டராயன் கோவில் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவ்வழியாக காட்டு யானை ஒன்று குட்டியுடன் குறுக்கே வந்துள்ளது. இதைப் பார்த்து அச்சமடைந்த சவுந்தர்ராஜன், யானைகளிடமிருந்து தப்பிக்க மொபட்டை வந்த வழியாக திருப்பியுள்ளார். ஆனால் காட்டு யானை சவுந்தர்ராஜனை துதிக்கையால் தாக்கியுள்ளது. … Read more