தியேட்டருக்குள் விடாததால் அஜித் ரசிகர் தூக்கு போட்டு தற்கொலை..!!

பொங்கலை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த துணிவு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை அடுத்த பிரையண்ட் நகரை சேர்ந்த வீரபாகு என்பவர் தீவிர அஜித் ரசிகராக இருந்து வந்துள்ளார். இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் கோல்டன்புரத்தில் உள்ள கே.எஸ்.பி.எஸ் திரையரங்கிற்கு துணிவு படம் பார்க்க சென்றுள்ளார். அப்பொழுது வீரபாகு மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தியேட்டரில் பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்கள் … Read more

கிராமங்களில் வசிக்கும் மக்கள் குறைகளை போக்கும் விதமாக கிராமங்களுக்கே நீதிபதிகள் தேடி வந்து நீதி வழங்க ஏற்பாடு – மத்திய அமைச்சர்

கிராமங்களில் வசிக்கும் மக்கள் குறைகளை போக்கும் விதமாக கிராமங்களுக்கே நீதிபதிகள் தேடி வந்து நீதி வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் அரியலூர் திருக்கை கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற அவர், ஏழை மக்கள், சாதாரண மக்கள், விவசாய மக்கள் அதிகம் உள்ள கிராமத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை ஆய்வு செய்யவே தாம் தமிழகம் வந்து இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் … Read more

கள்ளக்குறிச்சி | கர்ப்பிணி உயிரிழப்பு; மருத்துவர் இல்லாததால் நேர்ந்ததாக உறவினர்கள் போராட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் பிரசவத்திற்கு அரசு ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட கர்ப்பிணி பணியில் மருத்துவர் இல்லாததால் அலைக்கழிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவருடைய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் சேராப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு நேற்று மாலை பிரசவத்திற்காக பெண் ஒருவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு பிரசவம் பார்க்க மருத்துவர்கள் யாரும் இல்லாமல் செவிலியர் மட்டும் இருந்துள்ளார். அதனால் அந்த பெண்ணிற்கு இரவு பிரசவம் பார்க்க … Read more

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின் சப்பர முகூர்த்தம் 26ம் தேதி தொடக்கம்..!!

மதுரை: மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான சப்பர முகூர்த்தம் 26ம் தேதி தொடங்குகிறது. சப்பர முகூர்த்தம் மற்றும் ஸ்தலாங்கம் பார்க்கும் நிகழ்ச்சி 26ம் தேதி நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மே 5ம் தேதி சித்ரா பௌர்ணமி நாளில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  

உரிமமின்றி நாட்டுத் துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிந்த இளைஞர்… மடக்கி பிடித்த காவல்துறை!

கெங்கவல்லி அருகே உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து இரு நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே இளைஞர் ஒருவர் இரு நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிவதாக கெங்கவல்லி போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் ஆகியோருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது இளைஞர் ஒருவர் இரு நாட்டுத் துப்பாக்கியுடன் இருப்பதைக் … Read more

தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய கண்டெய்னர் லாரி…!

சென்னை துறைமுகத்தில் சரக்குகளை இறக்கிவிட்டு கண்டெய்னர் லாரி ஒன்று வல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி அத்திப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றின் மேம்பாலத்தில் சென்ற போது முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டுள்ளது. இதனால் விபத்தை தவிர்க்க கண்டெய்னர் லாரி டிரைவரின் லாரியை திருப்பி உள்ளார். அப்போது அவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மேம்பாலத்தின் தடுப்புச்சுற்றில் மோதி அந்தரத்தில் தொங்கியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிற வாகன ஓட்டிகள் போலீசார் மற்றும் தீயணைப்பு … Read more

மத்திய அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை தமிழில் எழுதலாம்: பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

சென்னை: மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளிலும் எழுதலாம் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) அறிவித்துள்ளது. மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 11,409 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு எழுதத் தகுதியானவர்கள் https://ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக பிப்ரவரி 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள பிப். 23, 24-ம் தேதிகளில் தேர்வர்களுக்கு … Read more

இடைத் தேர்தல்: ஒதுங்கிக்கொண்ட தமாகா – எடப்பாடிக்கு முதல் வெற்றி!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே. வாசன் சம்மதம் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. ஜி.கே. வாசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அ.இ.அ.தி.மு.க வின் விருப்பத்தை த.மா.கா ஏற்றுக்கொண்டது. கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியின் சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்திற்கு … Read more

'நாம் யாருடைய வாரிசு? நடிகர் விஜயின் வாரிசு என சொல்லிவிடாதீர்கள்’- கலகலத்த செல்லூர் ராஜூ

“சீனியர் அமைச்சர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டார் உதயநிதி ஸ்டாலின்” என்று பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், ”எம்ஜிஆர் 36 ஆண்டுகள் முன்பு மறைந்தாலும் அவர் பெயரை சொல்லாமல் … Read more