தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது நடந்த சோகம் – மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

குமளி அருகே முருக்கடியில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது இரும்பு ஏணி மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அட்டப்பள்ளம் லட்சம் வீடு காலனியைச் சேர்ந்தவர்கள் சிவதாஸ் மற்றும் சுபாஷ். இவர்கள் இருவரும் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தொட்டியை சுத்தம் செய்ய பயன்படுத்திய இரும்பு ஏணியை நகர்த்தும்போது, அருகில் இருந்த மின்கம்பியில் ஏணி மோதியுள்ளது. இதில் … Read more

திருத்தணி : திருமணமாகி நான்கே மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்.!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி அடுத்த அகூர் காலனியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் மனைவி மாலினி. சில ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் நான்கு மாதங்களுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.  இந்நிலையில் நேற்று இரவு மாலினி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் சுமார் ஒருமணி நேரத்திற்கு பிறகு இதைப்பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.  இந்த தகவல் அறிந்த … Read more

பிரபல பாடகர் ட்விட்டர் கணக்கு முடக்கம்..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!

ஹாலிவுட் ராப் இசை பாடகர் கன்யே வெஸ்ட், பல முறை கிராமி விருதுகளை வென்றவர். அவருக்கு பல்லாயிரக்காணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஹிட்லர் மற்றும் நாசிசவாதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பாடகர் கன்யே வெஸ்ட் தெரிவித்திருந்தார். எலான் மஸ்க் – கன்யே வெஸ்ட் இடையேயான உரையாடல்களையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டதால் அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார். ELON FIX KANYE … Read more

யானைகள் வழித்தடத்தில் செங்கற்சூளைகள்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை மீது ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கற்சூளைகள் குறித்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அடுத்த விசாரணையின்போது முழுமையான அறிக்கையை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. கோவை மாவட்டத்தில் யானைகள் வழித்தடமான தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் செயல்பட்டு வந்த 134 செங்கற்சூளைகள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்டன. இந்த செங்கற்சூளைகள் ஆனைகட்டி, பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட யானைகள் வழித்தடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அரசின் … Read more

மொத்தம் 5 வரப்போகுது… மாஸாகும் கோவை தெற்கு… வானதியின் அடுத்த டார்கெட் இதுதான்!

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் 63வது வார்டில் 18 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டிற்காக பாஜக எம்.எல்.ஏ இன்று தொடங்கி வைத்தார். இதற்காக தொகுதி மேம்பாட்டு நிதி பயன்படுத்தப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த குடிநீரை பயன்படுத்தும் வகையில் 63வது வார்டு மக்களுக்கு நவீன அட்டை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார் இதைக் கொண்டு நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் தண்ணீர் வரை எடுத்துக் கொள்ளலாம். இந்த … Read more

எம்பிசி பட்டியலில் நரிக்குறவர் பெயரிலுள்ள குறவர் என்ற பெயரை நீக்ககோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: எம்பிசி பட்டியலில் நரிக்குறவர் பெயரிலுள்ள குறவர் என்ற பெயரை நீக்ககோரிய வழக்கில் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. முத்துமுருகன் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தை பூர்விகமாக கொண்ட குறவர் சமூகத்தினர் எஸ்சி/எஸ்டி பட்டியலில் உள்ளனர் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  

ஆப்கானிஸ்தானில் பரபரப்பு..!! மசூதிக்குள் நுழைந்து முன்னாள் பிரதமரை கொல்ல முயற்சி!

ஆப்கானிஸ்தானின் ஹெஸ்ப்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவராக குல்புதீன் ஹெக்மத்யார் உள்ளார். ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறிவிட்டாலும், முன்னாள் பிரதமர் குல்புதீன் ஹெக்மத்யார் ஆப்கானிஸ்தானில் தான் உள்ளார். இந்நிலையில், ஹெக்மத்யாரும் அவரது ஆதரவாளர்களும் நேற்று கூடியிருந்த மசூதிக்குள், சந்தேகிப்படும் வகையில் பயங்கரவாதிகள் சிலர், பர்தா அணிந்தபடி நுழைந்து ஹெக்மத்யாரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார், இருவர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதையடுத்து முன்னாள் பிரதமர் குல்புதீன் … Read more

நரிக்குறவர் பெயரில் உள்ள ‘குறவர்’ நீக்கப்படுமா? – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: எம்பிசி பட்டியலில் இடம்பெற்றிருக்கும் நரிக்குறவர் பெயரில் குறவர் என்றிருப்பதை நீக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை விளாங்குடியைச் சேர்ந்த வன வேங்கைகள் கட்சித் தலைவர் இரணியன் (எ) முத்துமுருகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: “தமிழை பூர்விகமாகக் கொண்டு மலைப் பகுதியில் வசிப்பவர்கள் குறவர் சமூகத்தினர். தமிழகத்தில் குறவர்கள் எஸ்சி-எஸ்டி பட்டியலில் உள்ளனர். தற்போது குறவர்கள் மலைப்பகுதியில் இருந்து சமதள பரப்பில் வசிக்கின்றனர். இவர்களுக்கு … Read more

மலேசியாவிலிருந்து 44 ஆயிரம் டன் யூரியா உரம் இறக்குமதி; முடிவுக்கு வந்தது தமிழக விவசாயிகளின் உரத்தட்டுப்பாடு பிரச்சனை!

தமிழகத்தில் உரத்தட்டுபாடு நிலை வந்த நிலையில் விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மலேசியாவில் இருந்து 44 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம் கப்பல் மூலம் காரைக்கால் துறைமுகம் வந்தது. டிசம்பர் மாதத்திற்கு 27140 மெட்ரிக் டன் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், தமிழ்நாட்டில் உள்ள வேளாண் மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப ரயில் மூலமாகவும், சாலை மார்க்கமாகவும் யூரியா உரம் அனுப்பப்பட உள்ளது. மனு கொடுத்த மக்களிடம் தொலைபேசியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் இறக்குமதி செய்யப்பட்டு மலை … Read more