#Breaking :: அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணியிட அறிவிப்பாணையை ரத்து..!!

கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்வதற்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் ரத்து செய்துள்ளது. தமிழக அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப 2019 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக அரசு 4,000 உதவி பேராசிரியர் காலி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள … Read more

தஞ்சையில் ஜாதிய பாகுபாடு.. முடி வெட்ட மறுத்து கடையை மூடிச் சென்றவர் கைது..!

ஒரத்தநாடு அருகே, பட்டியல் இன மக்களுக்கு முடி திருத்தம் செய்ய மறுத்து கடையை மூடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் கிளாமங்கலம் கிராமத்தில், டீக்கடைகளில் இரட்டை குவளை முறையும், முடி திருத்தும் கடையில் ஒரு தரப்பு மக்களுக்கு முடித் திருத்தம் செய்யாமலும் பல ஆண்டுகளாக தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக பாப்பாநாடு காவல்துறையினர் கிளாமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆறு பேரிடம் … Read more

தி.மலை தீபத் திருவிழா | முதலில் வரும் 2,500 பக்தர்களுக்கு முன்னுரிமை: டிச.6 காலை 6 மணி முதல் அனுமதிச் சீட்டு வழங்கல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி, தீபம் ஏற்றப்படும் அண்ணாமலை பகுதி மீது ஏறி செல்ல 2,500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வரும் 6-ம் தேதி காலை 6 மணிக்கு வழங்கப்படும் என ஆட்சியர் பா.முருகேஷ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி, கார்த்திகைத் தீபத் திருநாளில், அண்ணாமலை மீது ஏறுவதற்கு 2,500 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலையில் உள்ள … Read more

கோயில்களில் செல்போனுக்கு தடை; ஆடைகளுக்கும் அதிரடி கட்டுப்பாடு!

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்படுத்த உடனடியாக தடை விதிக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அர்ச்சகர் சீதாராமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் கடந்த மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், ‘திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய வருகின்ற பக்தர்களுக்கு இடையூறாக சில அர்ச்சகர்களும், செக்யூரிட்டிகளும் செல்போன்கள் மூலம் சாமிக்கு செய்யப்படும் அபிஷேகம், பூஜைகளை புகைப்படம் … Read more

வலுத்த எதிர்ப்பு – பாடப்புத்தகத்திலிருந்து ரம்மி பாடப்பகுதி நீக்கம்

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமிழ்நாட்டில் பலர் உயிரிழந்துவருகின்றனர். உயிரிழப்பு மட்டுமின்றி தங்களது சேமிப்பு பணத்தை இழந்து செய்வதறியாது திகைத்துவருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு மகளிர் குழு மூலம் வழங்கப்படும் பணத்தையும் சில ஆண்கள் ஆன்லைன் ரம்மியில் போட்டு இழந்துவருகின்றனர். இதனால் ஆன்லைன் ரம்மி மோசமான விளைவுகளை ஏற்படுத்திவருகிறது. இதனையடுத்து ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழ்நாடு அரசு கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவசர சட்டத்தை பிறப்பித்தது. அந்த அவசர சட்டத்துக்கு ஏற்கனவே ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, … Read more

தாமிரபரணி ஆற்றின் பெயரை, பொருநை ஆறு என மாற்றக் கோரி வழக்கு: உரிய முடிவெடுக்க அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தாமிரபரணி ஆற்றின் பெயரை பொருநை நதி என பெயர் மாற்றம் செய்யக்கோரிய வழக்கில் 12 வாரங்களுக்குள் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி புதுக்கோட்டையைச் சேர்ந்த காந்திமதிநாதன், உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். பொதிகை மலையில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக மன்னார் வளைகுடா கடலில் கலக்கிறது. தாமிரபரணி வற்றாத ஜீவ நதியாகும். தாமிரபரணி என்பது வடமொழிச் சொல். இதன் தமிழ் பெயர் பொருநை நதியாகும். … Read more

ஆண் நண்பர்களுடன் வந்த முன்னாள் காதலி.. காட்டேஜில் காத்திருந்த இளைஞர் மர்ம மரணம்!

கொடைக்கானலில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை, கொலை வழக்காகப் பதிவு செய்தால் மட்டுமே உடலை பெற்றுக் கொள்வோம் என்று இளைஞரின் தந்தை தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் அய்யாதுரை. இவரது மகன் சூர்யா (வயது 30) வீடியோ எடிட்டிங் படித்துள்ளார். இவர், சென்னையில் 2021 -ம் ஆண்டு தங்கி பணிபுரிந்த காலகட்டத்தில் கர்லின் ஸ்வேதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருவரும் நண்பர்களாக பழகிய நிலையில் அதுவே காதலாக மாறியதாக தெரிகிறது. இருவரும் காதலித்து … Read more

எல்லா தவறுகளையும் செய்துவிட்டு கவர்னர் மீது பழி போட்டு தி.மு.க. தப்பிக்க பார்க்கிறது – அண்ணாமலை

எல்லா தவறுகளையும் செய்துவிட்டு கவர்னர் மீது பழி போட்டு தி.மு.க. தப்பிக்க பார்க்கிறது – அண்ணாமலை Source link

டிச.6ல் பாபரி மஸ்ஜித் உரிமை மீட்பு போராட்டம்! இந்திய தவ்ஹித் ஜமாஅத் அமைப்பு அறிவிப்பு!!

பாபர் மசூதி இடிப்பு நாள் ஆன டிசம்பர் 6ஆம் தேதி உரிமை மீட்பு போராட்டம் நடத்தப்படும் என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் “அயோத்தி பாபரி மஸ்ஜித் – ராம ஜென்ம பூமி நில உரிமை தொடர்பான வழக்கில் கடந்த 09/11/2019 அன்று உச்ச நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பு நாட்டிலுள்ள முஸ்லிம்கள் மாத்திரமல்லாமல், சட்டத்தின் … Read more

மக்களே.. நெல்லை, தென்காசியில் நாளை இங்கெல்லாம் கரன்ட் இருக்காது..!

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவர் வடகரை, ஒ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், மணிமுத்தாறு, கடையம், ஆலங்குளம், ஊத்துமலை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், கீழ்க்காணும் இப்பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி: தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, … Read more