கோவை: தாயின் இழப்பை தாங்க முடியாமல் கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு!

கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம், கல்லூரி மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகா, முக்கூடலை அடுத்த அமர்நாத் காலனியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் வில்லியம். இவரது மகன் பென்னிஸ்குமார்(24). இவர், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் விடுதியில் தங்கி வகுப்புக்குச் சென்று வந்துள்ளார் பென்னிஸ்குமார். இந்நிலையில், மாணவர் பென்னிஸ்குமார் உடல்நிலை சரியில்லை எனக்கூறி நேற்று மதியம் வகுப்புக்கு செல்லாமல் … Read more

தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்கள் மதுக்கடைகள் மூடல்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!

தமிழத்தில் சிறப்பு வாய்ந்த கோவிலாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் பௌர்ணமி கிரிவலம் என பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத் திருவிழா மிகவும் பிரபலமானதாகும்.  கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் 24ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தீபத் திருவிழாவின் … Read more

முத்தத்தால் நின்ற திருமணம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் திருமண மேடையில் மணமகன் முத்தம் கொடுத்ததால் திருமணத்தை மணமகள் நிறுத்தி உள்ளார். சம்பால் மாவட்டத்தில் கடந்த 27-ந்தேதி இரவு விவேக் அக்னிகோத்ரி என்ற இளைஞருக்கும், அதே பகுதியை சேர்ந்த 23 வயதான பட்டதாரி இளம்பெண்ணிற்க்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.மணமக்கள் மாலைகளை மாற்றிக்கொண்டபோது, திடீரென மணமகன் விவேக் அக்னிகோத்ரி, மணமகளை முத்தமிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள், அனைவரது முன்னிலையிலும் முத்தமிட்டது தனக்கு அவமானமாக கருதி திருமணத்தை நிறுத்தினார். அனைவரும் சமாதானப்படுத்த முயன்றும் மணப்பெண்ணின் முடிவை … Read more

தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் 90 ஆயிரம் டன் யூரியா இறக்குமதி: அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

சென்னை: தமிழக விவசாயிகளின் உரத்தேவையை பூர்த்தி செய்ய தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் 90 ஆயிரம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக விவசாயிகளின் தேவைக்கேற்ப தரமான விதைகள், ரசாயன உரங்களை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உரிய காலத்தில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு விநியோகிக்க வேளாண் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நடப்பாண்டில் பெய்த சாதகமான பருவமழையைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்கு காலத்தே ரசாயன உரங்களை … Read more

தரமணி சாலை விபத்து : 114 கி.மீ., வேகத்தில் பாய்ந்த பைக்; குறுக்கே வந்த லோடு வேன் – 2 மாணவர்கள் பலி!

சென்னை தரமணி, தந்தை பெரியார் நகர், கருணாநிதி 3ஆவது தெருவை சேர்ந்தவர் பிரவீன் (19). இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதேபகுதியை பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (17). இவர் வேளச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் +2 படித்து வந்தார்.  இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை (நவ. 29) அன்று கல்லூரி மாணவன் பிரவீன், மோட்டார் சைக்கிளை ஓட்ட அரி பின்னால் உட்கார்ந்திருந்து பயணித்துள்ளார். அவர்கள், சென்னை தரமணி 100 … Read more

ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தில் ஸ்பிக் நிறுவனத்தில் ‘பாரத் யூரியா’ உரம் விநியோகம் தொடங்கியது

தூத்துக்குடி: ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தில் முதல்முறையாக தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் பாரத் யூரியா உரம் விநியோகம் தொடங்கியது. இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும்  உரமான யூரியாவின் விலை ஒன்றிய அரசால் கட்டுப்படுத்தப்படுகிறது. அரசு  நிர்ணயம் செய்யும் விலையில் அதை நிறுவனங்கள் விற்கின்றன. உரங்களின்  உற்பத்திச் செலவில் 80-90 சதவீதத்தை உற்பத்தியாளர்களுக்கு அரசு மானியமாக  வழங்குகிறது. யூரியா தவிர, டிஏபி, எம்ஓபி போன்ற உரங்களின்  விலையை அதிகாரப்பூர்வமாக அரசு கட்டுப்படுத்துவதில்லை. ஆனாலும் அதற்கும்  மானியம் தரவேண்டியுள்ளது. ஒரே … Read more

டிசம்பர் 8 அன்று தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் தகவல்

டிசம்பர் 8 அன்று தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் தகவல் Source link

குடிபோதை தகராறு: அண்ணனை குத்தி கொலை செய்த தம்பி.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்ணனை கத்தியால் குத்தி தம்பி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை ஜோசப் காலனி பகுதியை சேர்ந்தவர் கொத்தனார் ஜார்ஜ் எடிசன்(42). இவரது சகோதரர் மார்ட்டின் ஜெயராஜ் (40). இந்நிலையில் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த ஜார்ஜ் எடிசனுக்கு அவரது தம்பிக்கும் இடையே குடிபோதையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த தம்பி, அண்ணனின் நெஞ்சில் சரமாரியாக … Read more