“40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்” – திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் திமுக கைப்பற்ற வேண்டும் என்று சென்னையில் நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுகவின் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்குப் பின் முதன் முறையாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், டிபிஐ வளாகம் இனி பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று அழைக்கப்படும் என்று … Read more

எடப்பாடி கோட்டையில் ஓபிஎஸ்; சேலம் அரசியலில் செம சடுகுடு!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள ஓபிஎஸ் பண்ணை வீட்டில் இன்று அவரை சந்திப்பதற்காக சேலம் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் நகர அகத்தலைவர் சிவசுப்பிரமணியம், மீனவர் பிரிவு மாநில துணைத்தலைவர் குமாரராஜா, எடப்பாடி நகர பிரதிநிதி முத்து மணி மற்றும் தென்காசி மாவட்டம் மாவட்ட செயலாளர் மூர்த்தி பாண்டியன், மாவட்ட பாசறை செயலாளர் சரவணன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து … Read more

குற்றாலம் மெயின் அருவியில் ஐயப்ப பக்தர்கள் ஆனந்த குளியல்

தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் அதிக தண்ணீர் வரத்து காரணமாக குளிக்க விதிக்கப்பட்ட தடை நேற்று இரவு முதல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குற்றாலத்தில் அவ்வப்போது பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதுகாப்பு கருதி நேற்று பகல் முழுவதும் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இரவில் … Read more

ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் கோடிகளில் குவிந்த காணிக்கை! புதிய உச்சத்தில் காணிக்கை!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டதில் 2 கோடியே 6 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் கோவிலுக்கு வருவாய் கிடைத்துள்ளது. உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கம், வெள்ளி குறித்த எடை விபரத்தை திருக்கோவில் நிர்வாகம் ஏன் வெளியிடவில்லை என பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். உலக புகழ்பெற்ற ராமேஸ்வரம் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் வார விடுமுறை, சர்வ அமாவாசை, ஐயப்ப பக்தர்கள் வருகை என … Read more

ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் குறைவுக்கு இதுதான் அர்த்தம்; காங்கிரஸ் தலைவர்கள் கருத்து

ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் குறைவுக்கு இதுதான் அர்த்தம்; காங்கிரஸ் தலைவர்கள் கருத்து Source link

#தமிழகம் | நாடக காதல் கோஷ்ட்டிக்கு தர்ம அடி | ஊரே சேர்ந்து கும்மாங் குத்து!

தனது காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியின் வீட்டுக்கே சென்று, நாடக காதலன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரகளை ஈடுபட்ட சம்பவம் கிருஷ்ணகிரி அருகே அரங்கேறியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியை, அதே பகுதியில் வசிக்கக்கூடிய விஜய் என்ற நாடக காதலன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மேலும், மாணவி கல்லூரிக்கு சென்று வரும்போது வழிமறித்து தனது காதலை ஏற்க வேண்டும் என்று, தொந்தரவு கொடுத்து வந்துள்ளான் நாடக காதலன் விஜய். இந்நிலையில், சம்பவம் … Read more

மகனை காப்பாற்றுவதற்காக கணவனை மர்மநபர்கள் கொன்றதாக நாடகமாடிய மனைவி..!!

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள ஜி.உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி (55). கூலித்தொழிலாளியான இவருக்கு முருகேஸ்வரி (48) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு பூங்கொடி, ஜோதிலட்சுமி என்ற 2 மகள்களும், காளிதாஸ் (29) என்ற மகனும் உள்ளனர். இரண்டு மகள்களும் திருமணம் முடிந்து, வெளியூர்களில் வசித்து வருகின்றனர். காளிதாஸ் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மது போதைக்கு அடிமையான முனியாண்டி குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு … Read more

செயற்கை அருவிகளை உருவாக்கியோர் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

மதுரை: மேற்கு தொடர்ச்சி மலையில் செயற்கை அருவிகள் உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுற்றுலாத் துறை இயக்குநர் தலைமையில் 10 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையில் நீர் வழித்தடத்தை மாற்றியமைத்து குற்றாலம் உள்பட பல்வேறு இடங்களில் செயற்கையான அருவிகளை உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு … Read more

#GetOutRavi: 'கெட் அவுட் ரவி'.. ட்விட்டரில் தேசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ள ஹாஷ்டேக்..!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசுக்கு எதிராக செயல்படுவதாக திமுகவும் அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளும் தொடர் குற்றசாட்டுகளை பதிவு செய்து வருகின்றன. குறிப்பாக சட்டசபையில் கொண்டு வரப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமலும் சில சட்டத்துக்கு காலம் தாழ்த்தி ஒப்புதல் அளிப்பதுமாக ஆளுநரின் செயல்பாடு இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. மேலும், திமுகவுக்கு எதிர்க்கட்சி போல செயல்பட்டு போக்கு காட்டி வருவதாக ஆளுநர் மீது புகார் வைக்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை மசோதாவுக்கு கையெழுத்திடாமல் … Read more

40க்கு 40 என்று வெற்றி பெற வேண்டும் – மா.செ கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சு

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுகவின் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்குப் பின் முதன் முறையாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், டிபிஐ வளாகம் இனி பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று அழைக்கப்படும் என்று அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, டிசம்பர் 15ஆம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்றும் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. … Read more