'ஆன்லைன் ரம்மி உயிர் பலிக்கு ஆளுநர் பொறுப்பேற்கணும்' – கி.வீரமணி

“ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் போன உயிருக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும்,” என திராவிட கழகத் தலைவர் வீரமணி தெரிவித்து உள்ளார். ஆன்லைன் சூதாட்ட ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் தர மறுக்கும் தமிழக ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டார். இதன் பின்னர், திராவிட கழகத் தலைவர் வீரமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆன்லைன் விளையாட்டு … Read more

சனிக்கிழமை ஸ்கூல் உண்டு – பள்ளி மாணவர்களுக்கான அறிவிப்பு

தமிழ்நாட்டில் கடந்த மாதம் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. இதனால் பல ஏரிகளும், குளங்களும் நிரம்பியுள்ளன. மேலும் தீவிரமாக மழை பெய்ததால் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதற்கு கடினமான சூழல் ஏற்பட்டது. எனவே அவர்களுக்கு வசதியாக மழையின்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அந்தவகையில் சென்னை மாவட்டத்தில் கனமழை பெய்ததால் அங்கு பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் அதனை ஈடு செய்யும் விதமாக ஏதேனும் சனிக்கிழமை வேலை நாளாக எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வரும் சனிக்கிழமை … Read more

குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை வெளிநாடுகளுக்கு பதிவேற்றம் செய்த திருச்சி வியாபாரி வீட்டில் சிபிஐ சோதனை: கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தது அம்பலம்

திருச்சி: பெண் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை வெளிநாடுகளுக்கு பதிவேற்றம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்த மணப்பாறை வியாபாரி ராஜா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பூமாலைப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(60). ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை அலுவலர். இவரது மகன் ராஜா(44). விவசாயியான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் தனியார் நிறுவனத்தில் கணக்காளர் பிரிவில் ஓராண்டு வேலை பார்த்து வந்தார். இதைதொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய அவர், திருப்பூரில் துணி … Read more

வணிகநோக்கில் ரிசார்ட்டுகள் செயற்கை நீர் வீழ்ச்சிகளை உருவாக்குவதா?-நீதிமன்றம் புதிய உத்தரவு

தனியார் ரிசார்ட்டுகளில் செயற்கை அருவிகள் குறித்து ஆய்வுசெய்ய சுற்றுலாத்துறை இயக்குனர் தலைமையில், நில நிர்வாக ஆணையர், தலைமை வனக்காப்பாளர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த வினோத் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில், “நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் அருவி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து உருவாகிறது. கடந்த 2019 தென்காசி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் … Read more

கோவை | ரேஷன் கடை பெண் ஊழியரை கிண்டல் செய்த வாலிபர் கைது.!

கோவை மாவட்டத்தில் பாட்டு பாடி ரேஷன் கடை பெண் ஊழியரை கிண்டல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய இளம் பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். அப்பொழுது காந்திநகர் பகுதியை சேர்ந்த முருகசாமி (34) என்பவர் எடை போடும் வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில் முருகசாமி மது அருந்திவிட்டு வந்து வேலைக்கு வந்ததால் இளம்பெண் அவரை வேலைக்கு வரவேண்டாம் என்று கூறியுள்ளார். … Read more

பிரபல தயாரிப்பாளர் திடீர் மரணம்: சோகத்தில் தமிழ்த் திரையுலகம்..!

தமிழ்த் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் கே.முரளிதரன் மாரடைப்பு காரணமாக இன்று மதியம் கும்பகோணத்தில் காலமானார். அவருக்கு வயது (65). பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், ‘லட்சுமி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவருமானவர் கே.முரளிதரன். இவர், ‘லட்சுமி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனத்தின் தலைவர்கள் வாமிநாதன் மற்றும் வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து ‘அரண்மனை காவலன்’, ‘மிஸ்டர் மெட்ராஸ்’, ‘கோகுலத்தில் சீதை’, ‘தர்மச் சக்கரம்’, ‘பிரியமுடன்’, ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’, ‘உன்னைத் தேடி’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘கண்ணன் வருவான்’, … Read more

மழை விடுமுறையை ஈடுகட்ட சென்னையில் சனிக்கிழமை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு வேலைநாள்

சென்னை: பெருமழையின் காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட வரும் சனிக்கிழமை சென்னையில் உள்ள அனைத்து வகை உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செய்லபடும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள தகவல்: தொடர் பெருமழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையில் 03.12.2022 அன்று சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு … Read more

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சிக்கல்; தமிழ்நாடு அரசு பரபரப்பு உத்தரவு!

தமிழகத்தில் டாஸ்மாக் மது கடைகளை அரசே நடத்தி வருகிறது. இந்த கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் பெரும்பாலும் வெளியில் சென்று விடுவதாகவும் அவர்களுக்கு பதிலாக வெளியாட்கள் வேலை செய்து வருவதாகவும் தமிழ்நாடு அரசுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் தொடர்ந்து அதிகளவிலான புகார்கள் சென்றன. இந்நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: டாஸ்மாக் கடை பணியாளர்கள் சமீப காலமாக தலைமை அலுவலகத்தில் உள்ள அலுவலர்களை சந்திக்க அடிக்கடி தலைமை அலுவலகம் வருவது, ஒரு மாவட்டத்தில் … Read more

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துகள் முடக்கம்: வருமானவரித்துறை விளக்கம்

கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 2011-12-ம் ஆண்டு முதல் 2018-19ம் ஆண்டு வரைக்குமான 206 கோடியே 42 லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கியை வசூலிக்கும் வகையில், புதுக்கோட்டையில் உள்ள அவரது நிலங்களை முடக்கியும், மூன்று வங்கிக் கணக்குகளை முடக்கியும் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் … Read more