Aadhaar – TNEB Link: கோவையில் நடக்கும் சிறப்பு முகாம்… எந்தெந்த இடங்களில் தெரியுமா?

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மின் நுகர்வோரின் செல்போன் எண்களுக்கு மின்வாரியம் எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இந்நிலையில் தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில், பலரும் மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து வருகின்றனர். எந்தெந்த இடங்களில்? இதையொட்டி டிசம்பர் 31ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, … Read more

ஏலகிரி மலையில் விரைவில் சாகச சுற்றுலா தளம்!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரிமலை சுற்றுலா தளத்தில் படகு இல்லம் மற்றும் இயற்கை பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சுற்றுலா தளத்திற்கு வந்திருந்த ஆந்திரா மாநிலம் மற்றும் சென்னையில் இருந்து வந்துள்ள நபர்களிடம் பேசினார். அதனைத் தொடர்ந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரமுள்ள மலைப்பாதைக்கு நடந்தே ஏறிச்சென்று அத்தனாவூரில் ரூ மூன்று கோடி மதிப்பீட்டில் 7.09 ஏக்கர் பரப்பளவில் சாகச … Read more

பழவேற்காடு அருகே கூனங்குப்பத்தில் 1500-க்கு மேற்பட்ட மீனவ மக்கள் போராட்டம்: மீனவர்களுடன் சார்-ஆட்சியர் பேச்சுவார்த்தை

திருவள்ளூர்: பழவேற்காடு அருகே கூனங்குப்பம் மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பலவேற்கடை சுற்றி 30-க்கு மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. மீனவ கிராம மக்கள் இரண்டு பிரிவுகளாக உள்ளன. ஒரு தரப்பினர் கடலில் மீன் பிடித்தொழிலும், மற்றொரு தரப்பினர் பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்தொழிலும் செய்து வருகின்றனர். கூனங்குப்பம் மீனவ கிராம மக்கள் கடலில் மீன் பிடித்தொழிலை செய்து வந்தாலும், வாரத்திற்கு 2 நாள் அவர்கள் பழவேற்காடு ஏரியில் காலம் … Read more

“தமிழகம் அமைதியாக இருக்கிறதே என்று அவர்களுக்கெல்லாம் வயிறு எரிகிறது!”- முதல்வர் ஸ்டாலின்

“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க சிலர் சதி செய்கின்றனர்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று அரியலூரில் நடைபெற்ற விழாவில் 32 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 78 கோடி ரூபாய் மதிப்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “கலிங்க சிற்பங்கள், மாளிகை மேடு என எங்கு திரும்பினாலும் தொல்லியல் பொக்கிஷங்கள் மற்றும் கனிம வளங்களும் அரியலூரில் நிறைந்துள்ளது. அரியலூர் போன்றே … Read more

திருக்குறளை மற்ற மாநிலங்களின் பாடத்திட்டத்திலும் இணைக்க வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.!

நேற்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.  இந்த விழாவுக்கு தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி, 406 மாணவ, மாணவியருக்கு பட்டங்களும், 49 பேருக்கு தங்கப் பதக்கங்களும் வழங்கியா பின்னர் இவ்விழாவில் பேசிய அவர் தெரிவித்ததாவது,  “புத்தக கல்வியால் பெறப்படும் அறிவு மட்டும் இன்றைய சமூகத்தில் போதாதது. அதையும் தாண்டி திறன் சார்ந்த கல்வியும் தேவைப்படுகிறது. நீங்கள் இன்னும் தொடர்ந்து … Read more

உதயநிதி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து சவுக்கு சங்கர் போட்டி..!!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் வெளியே வந்திருக்கிறார் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் தினமும் ஆஜராகி நிபந்தனையின்படி கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில் தனது செல்போன் உரையாடலை ஒட்டு கேட்பதாக பகிரங்க குற்றச்சாட்டு முன் வைத்திருக்கிறார். இனி அரசியல் களத்திலும் குதிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வரும் சவுக்கு சங்கர் வரும் சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி … Read more

138 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க வல்லுநர் குழு ஒப்புதல்

சென்னை: தொன்மையான திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான 46-வது வல்லுநர் குழு கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டம், கெங்கராம்பாளையம் – கங்கை முத்து மாரியம்மன், சங்கராபுரம் – ராஜநாராயண பெருமாள், திருவண்ணாமலை மாவட்டம் – சந்திரலிங்கம், கடலூர் மாவட்டம், உடையார்குடி – அனந்தீஸ்வரர், சிவகங்கை மாவட்டம், நரியனேந்தல் – முத்தையாசுவாமி, மானாமதுரை – சங்குபிள்ளையார், கோவை மாவட்டம், கோவில்பாளையம் – விநாயகர், செட்டிப்பாளையம் – … Read more

கிருஷ்ணா நதி நீர்வரத்து இன்று 529 கனஅடியாக அதிகரிப்பு!

ஊத்துக்கோட்டை: தமிழ்நாடு எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு, நேற்று 505 கனஅடியாக இருந்த கிருஷ்ணா நீர்வரத்து இன்று 529 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக 2100கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு சட்டவிரோத மணல் கடத்தல்- 'புதிய தலைமுறை' கள ஆய்வில் அம்பலம்

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு சட்டவிரோதமாக மணல் கடத்தி வரப்படுவது புதிய தலைமுறையின் கள ஆய்வில் அம்பலமாகியிருக்கிறது. ஆந்திராவின் சூளுர்பேட்டையில் இருந்து மணல் ஏற்றிவரும்  லாரிகளை அதிகாலை நேரத்தில் சென்னையில் அதிகம் காண முடிகிறது. திருப்பதி, நெல்லூர், நகரி, சூளுர்பேட்டை போன்ற இடங்களில்  குவாரிகளில் இருந்து அதிகாலை நேரத்தில் சென்னைக்கு லாரிகள் மூலம் மணல் கொண்டுவரப்படுகிறது. ஆந்திர மாநிலத்திற்குள் உள்ள ஒரு ஊருக்கு மணல் கொண்டு செல்வதாக ரசீது பெற்று தமிழகத்திற்குள் கொண்டு வந்து சென்னை, திருவள்ளூர், … Read more