இன்று நிறைவு பெற இருந்த சேலம் புத்தகக் காட்சி வரும் டிச.4ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சேலம்: இன்று நிறைவு பெற இருந்த சேலம் புத்தகக் காட்சி வரும் டிச.4ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வாசகர்கள் கோரிக்கையை ஏற்று புத்தகக் காட்சி மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார்.

"வெறும் 66 ரூபாயை வெச்சி முதல்வரால குடும்பம் நடத்த முடியுமா?" சத்துணவு ஊழியர்கள் கேள்வி

குறைந்தபட்ச ஊதியம், காலிப்பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்ப வேண்டும் உட்பட மொத்தம் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சென்னையில் நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றைய தினம் சென்னை சைதாப்பேட்டையில், `சத்துணவு திட்டத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமும், ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம், சமையல் செய்ய வழங்கப்படும் சமையல் எரிவாயு தொகை ரூ.460 ஐ உயர்த்தி வழங்க வேண்டும், பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்தில் … Read more

தென்காசி : குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு.. ஐய்யப்பன் பக்தர்கள் ஏமாற்றம்.!

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.      குற்றாலம் மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் கொட்டியது. மேலும் ஐந்தருவியில் அனைத்து கிளைகளும் ஒன்றாக தோன்றியபடி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் நேற்று இரவு முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்று காலையிலும் அருவிகளில் தண்ணீர் தொடர்ந்து ஆர்ப்பரித்து … Read more

வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த தாமதமானதால் பெண்ணை கடத்திய கந்துவட்டி கும்பல்..!!

ஈரோடு வில்லரசம்பட்டியை சேர்ந்தவர் ரோஹினி. அப்பகுதியில் சிறு உணவகம் நடத்தி வருகிறார். தனது அவசர தேவைக்காக பள்ளிபாளையத்தை சேர்த்த பைனான்ஸ் நிறுவனத்தில் 10 ஆயிரம் ரூபாய் தினசரி கந்து வட்டி முறையில் கடன் பெற்றுள்ளார். இதற்காக வட்டித்தொகை 2500 ரூபாயை பிடித்துக்கொண்டு 7500 ரூபாய் வழங்கிய அவர்கள், தினமும் 100 ரூபாய் வீதம் 100 நாட்களுக்கு பணம் செலுத்த கூறி உள்ளனர். இதன்படி 25 நாட்கள் பணம் செலுத்திய நிலையில், உடல்நல குறைவால் கடந்த ஒருமாதமாக ரோஹிணி … Read more

தமிழக வாக்காளர்களில் 3.62 கோடி பேரின் ஆதார் விவரம் சேகரிப்பு: சத்யபிரத சாஹு தகவல்

சென்னை: தமிழகத்தில் 3.62 கோடி வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், மார்ச் மாதம் பணிகள் முடிந்ததும், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் பெற்று, அவை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில், இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது, இரட்டைப் பதிவு குழப்பங்களை சரி செய்வது, போலி வாக்காளர்களை நீக்குவது உள்ளிட்டவற்றுக்காக, வாக்காளர் பட்டியலுடன், ஒவ்வொரு வாக்காளரின் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் … Read more

அடடே வேற லெவலில் உருவான ரேஷன் கடை: உங்கள் ஊருக்கும் இந்த திட்டம் வருகிறதா?

ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நியாய விலைக் கடைகளை பொலிவுறச் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் முன்மாதிரியான புது பொலிவுடன் புதிய நியாயவிலை கடை திறக்கப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகளை பொலிவுறச் செய்யும் திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாநகராட்சியில் சிசிடிவி கேமரா, பொதுமக்கள் அறிந்து கொள்ள புராதான சின்னங்கள் ஓவியம் வரைந்து, திருவள்ளுவரின் ஓவியம் என அனைத்த அடிப்படை வசதியுடன் முன்மாதிரியான புது பொலிவுடன் புதிய நியாய விலைக்கடை காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 48-வது … Read more

போலி ஆவணங்களை சமர்ப்பித்தாரா தனுஷ்? விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து விசாரிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மேலூர் கதிரேசன் தரப்பில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சீராய்வு மனு தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. வழக்கில் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திலுள்ள ஆவணங்களை சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.  மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் குற்றவியல் சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.  அதில், “கடந்த 2017ஆம் ஆண்டு … Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சியம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று ஆஜராகிறார் சுவாதி

மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சியம் அளிக்க சுவாதி இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆஜராகிறார். நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே கடந்த 25ம் தேதி ஐகோர்ட்டில் ஆஜரான சுவாதி நீதிபதிகள் கேட்ட கேள்விக்கு ஒரே பதிலை அளித்தார்.

“திமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுக்கிறார்”-வேலூர் ஆட்சியரிடம் மண்டியிட்டு விவசாயி புகார்

பேர்ணாம்பட்டில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க மனு கொடுத்தால் திமுகவினர் கொலை மிரட்டல் விடுவதாகவும், எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியரிடம்  விவசாயி ஒருவர் மனு அளித்துள்ளார்.    மாதந்தோறும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் டிஆர்ஓ தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று குறைகளை தெரிவித்தனர். அனைத்து துறை அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர். … Read more