வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!

திறன்மிகு விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகையை பெற நாளை முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம் குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிறப்பு உதவித்தொகை பெற விரும்பும் விளையாட்டு வீரர்கள் நாளை முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. அடுத்த 2 ஆண்டுக்கு போட்டிகளில் … Read more

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்: ஆளுநர் அணுகுமுறைக்கு ஆதரவாக அண்ணாமலை விளக்கம்

சென்னை: “ஒரு சட்டம் என்பது சரியாக இருக்கிறதா? அரசியலைமைப்புச் சட்டத்தை சார்ந்திருக்கிறதா? மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமான அதிகாரங்களை சரியான அளவில் கையாண்டுள்ளனரா? – இதைப் பார்க்க வேண்டிய கடமை ஆளுநருக்கு இருக்கிறது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் மெட்டல் டிடெக்டர் சரியான வேலை செய்யவில்லை என்று … Read more

தஞ்சாவூரில் தலைவிரித்தாடும் தீண்டாமைக் கொடுமை: ரவிக்குமார் எம்.பி., புகார்!

தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். மேலும், தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியில் தலைவிரித்தாடும் தீண்டாமைக் கொடுமை தொடர்பாக மாநில எஸ்சி, எஸ்டி ஆணையத்துக்கும் முதலமைச்சர் அலுவலகத்துக்கும் ரவிக்குமார் எம்.பி., புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: “தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், கிளாமங்கலம் தெற்கு என்ற கிராமத்தில் உள்ள டீ கடைகளில் இரட்டை குவளை முறையும், முடித்திருத்தும் கடையில் ஆதி … Read more

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பன்றிகளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தது வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை: தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பன்றிகளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தது வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு ஒவ்வொரு வாரமும் 3 டன் அளவிற்கு கேரளாவிற்கு பன்றிகள் அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லக்கூடிய பன்றி வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கேரள அரசால் வரும் ஜனவரி 14-ம் தேதி வரை தற்காலிகமாக தமிழகத்தில் இருந்து பன்றிகள் கொண்டுவரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் … Read more

”Law & Order கெடாமல் தமிழகம் அமைதியா இருக்கேனு வயிறு எரிகிறார்கள்” -மு.க.ஸ்டாலின் பேச்சு!

அரியலூர் அருகே கொல்லாபுரம் கிராமத்தில் அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களின் புதிய திட்டப்பணிகள் அடிக்கல்நாட்டு விழா, முடிவுற்ற பணிகள் தொடக்கவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்விழா நடைபெற்றது. இதில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் முடிவுற்ற 74 பணிகளை 252 கோடியே 6 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பில் தொடங்கி வைத்தும், 32 கோடியே 94 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பில் 57 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 36 ஆயிரத்து 691 பயணாளிகளுக்கு 78 கோடியே … Read more

மதுகுடித்த மனைவி.! கணவருக்குத் தெரியாமல் இருக்க பெட்ரோலை குடித்த விபரீதம்.!

கோவை மாவட்டத்தில் மது குடித்தது கணவருக்கு தெரியாமல் இருக்க பெட்ரோலை குடித்த மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோவை மாவட்டம் காரமடை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளம் பெண் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம் பெண் பீர் வாங்கி குடித்துள்ளார். அப்பொழுது இளம் பெண்ணிடம் இருந்து மது வாசனை வந்துள்ளது. இந்நிலையில் இளம் பெண் மது குடித்தது கணவருக்கு தெரியாமல் இருப்பதற்காக, … Read more

திருவண்ணாமலைக்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை..!

கார்த்திகை கார்த்திகை தீபத் திருவிழாவினை ஒட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு டிசம்பர் 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்நிலையில், திருக் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 6-ம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். அதேபோல, கார்த்திகை தீபத் திருவிழாவினை ஒட்டி திருவண்ணாமலைக்கு டிசம்பர் 6, 7, 8 … Read more

கு.க.செல்வம், பத்மபிரியாவுக்கு கட்சிப் பொறுப்பு – ‘அதிருப்தி’ பதிவுகளுக்கு திமுகவினர் ‘லைக்’ மழை!

மதுரை: திமுகவில் வேறு கட்சிகளுக்கு போய்விட்டு வந்தவர்கள், வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு மாநிலப் பொறுப்பு வழங்கியதை சமூக வலைதளங்களில் திமுகவினர் சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திமுகவின் 15-வது உட்கட்சி தேர்தல் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, அக்டோபர் மாதம் பொதுக்குழுவும் நடத்தி முடிக்கப்பட்டது. திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி உட்பட பல்வேறு அணிகள் உள்ளன. இந்த அணிகளின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களை … Read more

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?; பீதி கிளப்பும்..ஷாக் நியூஸ்! பாகம்-1

ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்தது முதல் நாட்டு மக்களுக்கு பல்வேறு வழிகளில் குடைச்சல் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஆதார் கட்டாய ஆவணம் இல்லை என்று அறிவிக்கப்பட்டாலும், நாளடைவில் அனைத்துக்குமான ஆவணமாகவே ஆதார் அட்டை மாறியது. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களின் அனைத்து விதமான அடையாள ஆவணங்களையும் ஆதார் எண்ணுடன் இணைக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில்தான் சமீபத்தில் மத்திய அரசு அனைவருடைய ஆதார் எண்களுடன் TANGEDCO ன் மின் … Read more