சிவகிரி அருகே பரபரப்பு.! முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை.!

சிவகிரி அருகே முன் துரோகத்தில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவி பட்டணம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (25). இவர் டிப்ளமோ படித்து முடித்து விட்டு சென்னையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த சிவக்குமார், நேற்று இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு இரவு 8 மணி அளவில் நண்பர்கள் கூப்பிடுவதாக … Read more

மக்களே குட் நியூஸ்..!! இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது

சென்னையில் மின் இணைப்பு ஆதார் எண்ணுடன் இணைக்கும் சிறப்பு முகாமை ஆய்வு செய்த, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “இதுவரை 15 லட்சம் மின் இணைப்புதாரர்கள், ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துள்ளனர். இன்னும் விரிவாக பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் செயல்பட்டு வருகின்றது. இன்று முதல் வருகின்ற டிசம்பர் 31-ம் தேதி வரை, மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் … Read more

சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு; மத்திய அரசிடம் கேட்டு நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: “கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை கோவை, திருச்சி ஆகிய சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளில் 2% பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து மத்திய அரசிடம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, சென்னை, சைதாப்பேட்டை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில், கடந்த இரண்டு நாட்களாக பிறந்த 13 … Read more

எடப்பாடி பழனிசாமி பின்னால் அணி திரள்வது ஏன்? புகழேந்தி சொன்ன காரணம்!

கரூர் மாவட்ட அதிமுக அணியின் மாவட்ட அலுவலகத்திற்கு அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி வந்திருந்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் மட்டும்தான் வெற்றி பெற்றார். தோல்வியடைந்த ஜெயக்குமார் பேசக்கூடாது என்றும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்றும் கூறினார். பொதுக்குழுவில் ஓபிஎஸ் மீது வீசப்பட்ட பாட்டிலில் ஆசிட் அடித்திருந்தால் என்ன ஆவது என கேள்வி எழுப்பிட அவர், அந்த பொதுக்குழுவில் பாதுகாப்பு இல்லை என்றார். … Read more

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கா? வானிலை மையம் வெளியிட்ட தகவல்

கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  அதேபோல் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் டிசம்பர் 2 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் … Read more

அரசுப் பள்ளி மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அறிவியல் மற்றும் கணித ஆய்வக வாகனங்களைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

திருச்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் “வானவில் மன்றம்’ தொடங்கி வைத்து, 100 நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வக வாகனங்களைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளிக்கல்வித் துறையின் 2022-23ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவியல், கணித ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நடமாடும் அறிவியல் மற்றும் கணித … Read more

தேசிய அளவிலான மூத்தோர் விளையாட்டுப்போட்டி – 5 பதக்கங்களை வென்ற பெண் தலைமை காவலர்

தேசிய அளவிலான மூத்தோர் விளையாட்டுப் போட்டியில் 5 பதக்கங்களை வென்ற போலீஸ் பெண் தலைமை காவலர் தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள காவல் கரங்கள் மையத்தில் பணியாற்றி வருபவர் லீலா ஸ்ரீ. இவர், காவல் துறையில் வைக்கப்படும் மாவட்ட மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களையும், கோப்பைகளை வென்று சாதனை புரிந்துள்ளார். இந்நிலையில் தேசிய அளவிலான இரண்டாவது மூத்தோர் விளையாட்டு போட்டிகள் மஹாராஷ்டிரா … Read more

தமிழகத்தில் 2ஆம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த மாதம் 2ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 29/11/2022 முதல் 01/12/2022: தமிழ்நாடு. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது … Read more

நாடு முழுவதும் நாளை பந்த்..!

உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதைக் கண்டித்து, நாடு முழுவதும் நாளை பந்த் நடத்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ம் தேதி, 103-வது அரசியல் சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் … Read more