முட்புதரில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு! கூடுவாஞ்சேரி போலீசார் தீவிர விசாரணை!

கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே ஏரிக்கரை பகுதியில் உள்ள முட்புதரில் மனித எலும்புக்கூடு ஒன்று இரண்டு துண்டுகளாக கிடந்தது. இதனை  அவ்வழியாக சென்ற ஒருவர் பார்த்ததாக கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து எலும்புக்கூட்டை கைப்பற்றி விசாரணை நடத்தினர். போலீசார் கைப்பற்றிய எலும்புக்கூட்டுடன் கருப்பு நிற டி-ஷர்ட் மற்றும் கால் சட்டை அப்படியே இருந்தது. அதன் அருகே ஒரு ஜோடி … Read more

கார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று(27-ம் தேதி) காலை கொடியேற்றம் நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 24ம் தேதி இரவு தொடங்கியது. பின்னர், 25ம் தேதி இரவு பிடாரி அம்மன் மற்றும் 26ம் தேதி இரவு விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து, அண்ணாமலையார் கோயிலில் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் இன்று(27-ம் தேதி) காலை … Read more

அதிமுகவை ஓபிஎஸ் – ஈபிஎஸ் பலவீனப்படுத்திவிட்டார்கள் – டிடிவி டமால்

சென்னை, ராயப்பேட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் 2024 பாராளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு சாதகமாக இருக்குமா அல்லது காங்கிரசுக்கு சாதகமாக இருக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தினகரன், ஒரு நாட்டை பொறுத்தவரை இரு பலமான கட்சிகள் இருக்க வேண்டும். யாருக்கு சாதகமான சூழல் இருக்கிறது என்பது தேர்தல் வருவதற்கு சில மாதங்கள் முன்பு தெரிந்து விடும். ஆகையால், அடுத்த நவம்பரில் அதை கணிக்க முடியும். தேர்தல் வரட்டும் பார்க்கலாம் என்று … Read more

செத்து செத்து விளையாடும் விளையாட்டு… காதலி பிறந்தநாளுக்கு காதலன் தற்கொலை!

சென்னை முகப்பேர் மேற்கு முதல் பிளாக் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (47).  இவரது மனைவி செல்வராணி (45). இவர்களுடைய மகன் மோகன்(19). இவர் ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த சூழலில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் மோகன் தற்கொலை செய்து கொண்டார். கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த பெற்றோர்கள் தனது மகன் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். … Read more

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சுற்றுப்புற கிராமங்களில் கனமழை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சானார்பட்டி சுற்றுப்புற கிராமங்களில் கனமழை பெய்தது. கோபால்பட்டி, வேலாம்பட்டி, கணவாய்பட்டி, செடிப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் அரை மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.

“ஆன்லைன் விளையாட்டு விஷயத்தில் திமுக முறையான நடவடிக்கை எடுக்கவில்லை”- ஜெயக்குமார்

“தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் சாதாரண மருந்துகள் கூட இல்லாமல் மக்கள் அவதியுறுகிறார்கள். ஏராளமான மருத்துவப் பிரச்சனைகள் உள்ளன” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தின நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வாங்குவதற்காக, இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகம் சென்றிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவுநாளன்று அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் நடைபெறும். நினைவு அஞ்சலி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு … Read more

ரத்ததானம் மூலமாக தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம்: கோவையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஏற்பாடு

ரத்ததானம் மூலமாக தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம்: கோவையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஏற்பாடு Source link

#சென்னை : தேர்வறையிலிருந்து ஓடி மாடியிலிருந்து குதித்த இளைஞர்.. கதறும் பெற்றோர்.! 

சென்னை அருகே வண்டலூரில் கேளம்பாக்கம் சாலை மேல கோட்டையூர் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த கல்லூரியில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த புத்தாலா ஓம்கிரீஸ் எனும் இளைஞர் மூன்றாம் ஆண்டு பி டெக் படித்து வந்துள்ளார். இவர் தேர்வு எழுதிக் கொண்டிருந்த நேரத்தில் பாதியிலேயே தேர்வறையில் இருந்து வெளியேறி கல்லூரி வளாகத்தின் ஆறாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். இதன் காரணமாக புத்தாலா ஓம்கிரீஸ் பலத்த காயமடைந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட கல்லூரி நிர்வாகம் மருத்துவமனையில் … Read more

ரூ.900 கோடி டெண்டரில் முதல்வர் ரங்கசாமி ஊழல் புரிந்துள்ளார்: நாராயணசாமி

புதுச்சேரி: குப்பை அள்ளுவதற்கு ரூ.900 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்ட விவகாரத்தில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் எனும் விவகாரத்தை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை முதல்வர் ரங்கசாமி கையில் எடுக்கிறார். மூன்று மாத காலம் அவகாசம் தந்து மாநில அந்தஸ்து தராவிட்டால் கூட்டணியிலிருந்து ரங்கசாமி வெளியேறுவாரா? அது அவரால் முடியாது. அதற்கான … Read more

பெண் காவலர்களுக்கு பணிச் சுமையா? -சட்டத் துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்!

அரசு சட்டக் கல்லூரிகளுக்கு இடையிலான மாதிரி நீதிமன்ற போட்டி மற்றும் பரிசளிப்பு விழா திருச்சி காஜாமலையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் சிற்ப்பு விருந்தினராகசட்டதுறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.ரகுபதி, அவர்களிடம் கூறியது: தமிழகத்தில் இருக்கக்கூடிய 15 சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாதிரி நீதிமன்ற போட்டி நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் இதற்கான ஆணை பிறப்பித்து, மாநில … Read more