போதை பொருள் விற்பனையில் பாஜகவினர் – ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பை எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் பாளையங்கோட்டை மண்டலத் தலைவர் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமைக் கழக வழக்கறிஞர் சூரியா வெற்றிகொண்டான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினர். ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், “ திரவிட இயக்கம்தான் இனத்தையும்  மொழியையும்  காப்பாற்றும் கொள்கையுள்ள கட்சி. இந்தி எதிர்ப்பு என்பது திமுககாரனின் ரத்தத்தில் ஊறியது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அரசியலுக்கு … Read more

திண்டுக்கல் அருகே தாயுடன் கண்மாயில் துணி துவைக்க சென்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தாயுடன் கண்மாயில் துணி துவைக்க சென்ற சிறுமி அமிர்தஸ்ரீ (11) நீரில் மூழ்கி உயிரிழந்தார். கண்மாயில் இருந்து சிறுமி அமிர்தஸ்ரீயின் உடலை மீட்டு நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகளிர் பாதுகாப்பு & பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழகத்தில் விரைவில் புதிய சட்டம்!

மகளிர் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில் ஒரு தீர்மானத்தை கொண்டு வரவுள்ளதாகவும், அது நிச்சயம் ஏகமனதாக சட்டமாக நிறைவேற்றப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை பசுமை வழி சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் ஆணையத்தின் தலைவர் எஸ்.பாஸ்கரன், செயலாளர் விஜய கார்த்திகேயன், தமிழக அரசிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், … Read more

Cooking hacks: ராஜ்மா, பச்சை பயிறு, கொண்டைக்கடலை சமைக்கும் போது இது ரொம்ப முக்கியம்

Cooking hacks: ராஜ்மா, பச்சை பயிறு, கொண்டைக்கடலை சமைக்கும் போது இது ரொம்ப முக்கியம் Source link

16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.! தாயின் 2-வது கணவர் கைது.!

கோவை மாவட்டத்தில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாயின் இரண்டாவது கணவரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 40 வயதுடைய பெண் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 17 வயதில் ஒரு மகளும், 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் இவரது கணவர் வாகன விபத்தில் உயிரிழந்ததால், ஏற்கனவே திருமணம் ஆன 47 வயது உடைய மருந்து விற்பனை பிரதிநிதி ஒருவரை … Read more

பிரபல நடிகர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகர் விக்ரம் கோகலே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 77. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பழம்பெரும் நடிகர் விக்ரம் கோகலே. இவர், ‘ஹம் தில் தே சுகே சனம்’, ‘பூல் புலையா’ போன்ற ஹிந்தி படங்களில் நடித்து பிரபலமானார். அத்துடன், கமல்ஹாசனின் ‘ஹே ராம்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானார். இந்நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட விக்ரம் கோகலே, கடந்த 5-ம் தேதி … Read more

‘அன்று எதிர்ப்பு… இன்று கட்டாயம்…’ – ஆதார் + மின் இணைப்பு விவகாரத்தில் ஸ்டாலின் மீது ஓபிஎஸ் சாடல்

சென்னை: “ஆதார் எண் இணைப்பு காரணமாக மின்சார மானியம் பெற எவ்வித நிபந்தனைகளும் வருங்காலத்தில் விதிக்கப்படாது என்கிற உத்தரவாதத்தினை அளிக்கவும், ஆதார் எண் இணைப்பிற்கான கால அவகாசத்தை ஆறு மாதத்திற்கு நீட்டிக்கவும் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “எரிவாயு உருளை இணைப்பு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும் என்று 2016-ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டபோது அதற்கு கண்டனம் தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சித் … Read more

மக்களை ஊக்குவிக்கும் உதயநிதியை இளைஞர்கள் வாழ்த்த வேண்டும் – பொன்முடி

திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான பிறந்த நாள் நவம்பவர் 27 ஆம் தேதி கொண்டாடபடுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதுமுள்ள திமுகவினர் நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள விழுப்புரம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ லட்சுமணன் ஏற்பாட்டின் பேரில் 450 நரிக்குறவர்களுக்கு அரிசி, துணி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, திமுக சட்டமன்ற் உறுப்பினர்கள் லட்சுமணன், புகழேந்தி உள்ளிட்ட … Read more

உதயநிதிக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை! பின்வரிசையில் திமுக மூத்த அமைச்சர்கள்

திமுகவின் அடுத்த அரசியல் வாரிசாக கருதப்படும் உதயநிதி ஸ்டாலின், முதன்முறையாக கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக பொறுப்பேற்றதில் இருந்து தமிழக அரசியல் களத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். அமைச்சர் பதவி அவருக்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்தாலும், அதனை உடனே கொடுத்தால் அரசியல் வட்டாரத்தில் திமுக மீதான விமர்சனங்கள் அதிகரிக்க வாய்ப்பு என்பதை கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் கட்சி தலைமை பொறுமை காத்துவருகிறது. இருந்தாலும், ஒரு எம்.எல்.ஏவாகவே அமைச்சருக்கு நிகரான முக்கியத்துவம் அவருக்கு … Read more

மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறையில் பாமக தலைவர் அன்புமணி ஆய்வு..!!

மயிலாடுதுறை: மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறையில் பாமக தலைவர் அன்புமணி ஆய்வு நடத்தினார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு அன்புமணி ஆறுதல் கூறினார். தமிழகத்தில் பெய்த பெருமழையால் மயிலாடுதுறை மாவட்டம் கடுமையான பாதிப்பை சந்தித்தது.