தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!

வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த 23-ம் தேதி நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தின் மேல் நகர்ந்து 24-ம் … Read more

திமுக அங்கம் வகித்த மத்திய அரசால் தமிழ்நாட்டில் 2 ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை: ஓபிஎஸ்

சென்னை: “தமிழ்நாட்டின் உரிமையும், பாரம்பரியமும், கலாச்சாரமும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வும் அடங்கியுள்ள ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்ந்து நடைபெறுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழ்நாட்டின் கலாச்சாரப் பெருமையினை நிலை நிறுத்திடும் வகையில், தமிழ்ச் சமூகம் உயிருக்கு உயிராக நேசிக்கக்கூடிய, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுடன் பின்னிப்பினைந்திருக்கக் கூடிய, பாரம்பரிய பெருமைமிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டினை தொடர்ந்து தமிழ்நாட்டில் நிரந்தரமாக … Read more

சென்னை-சபரிமலை சிறப்பு ரயில்; இயற்கை எழில் கொஞ்சும் வழித்தடங்கள்!

கேரளாவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நடந்து வருகிறது. இதனையொட்டி சபரிமலையில் ஐய்யப்ப பக்தர்கள் கூட்டம் நாள்தோறும் அலைமோதி வருகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு மற்றும் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தலைமையிலான குழுவினர் கோயிலில் உள்ள சன்னிதானத்தில் ஐயப்பனுக்கு விசேஷ பூஜைகளில் ஒன்றாக கருதப்படும் களப பூஜை, களபம் சார்த்தல், களப அபிஷேகம் செய்து வருகின்றனர். சன்னிதானம் அருகே 18 படி ஏறி வரும்போது, பக்தர்களுக்கு மூச்சு திணறல், நெஞ்சுவலி … Read more

அரசமைப்புச் சட்டத்தைத் தகர்க்கும் முயற்சிகளை முறியடிப்போம்! வைகோ அறிக்கை

சென்னை: அரசமைப்புச் சட்டத்தைத் தகர்க்கும் முயற்சிகளை முறியடிப்போம் என்று மதிமுக தலைவர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் பாரம்பரியம் தொடர்பாக விரிவாக குறிப்பிட்டு, அதை பாதுக்காக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளார். 1948 நவம்பர் 4 ஆம் நாள் அரசியல் நிர்ணய சபையில் அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுத் தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்களால் முன்மொழியப்பட்டு, 1949 நவம்பர் 26 ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது இந்திய அரசியலமைப்புச் சட்டம். இந்திய அரசிலமைப்புச் … Read more

நீதிமன்றம் உங்களிடம் இருந்து உண்மையை மட்டுமே எதிர்பார்க்கிறது: சுவாதிக்கு ஐகோர்ட் கிளை நீதிபதி கேள்வி

மதுரை : நீதிமன்றம் உங்களிடம் இருந்து உண்மையை மட்டுமே எதிர்பார்க்கிறது: சுவாதிக்கு ஐகோர்ட் கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையை சொல்வதால் பிரச்சனை உள்ளதா, அதையும் சொல்ல மறுப்பது ஏன் என நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

100 நாள் வேலை பணியாளர்களை கடித்த கதண்டு: 12 பேர் மயக்கம் – மருத்துவமனையில் அனுமதி

திருமயம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த 12 பேரை கதண்டு கடித்து மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ராங்கியம் கிராமத்தில் உள்ள கண்மாய் கரையில் உள்ள செடி கொடிகளை அகற்றும் பணியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் (தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட பணியாளர்கள்) 30-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த ஒரு செடியை வெட்டியபோது அதிலிருந்த கதண்டு அங்கு பணிபுரிந்த … Read more

பாக பிரிவினை வழக்கு.. பெண்ணை அவமதிக்கும் வகையில் குறுக்கு விசாரணை.. உயர் நீதிமன்றம் மன்னிப்பு

பாக பிரிவினை வழக்கு.. பெண்ணை அவமதிக்கும் வகையில் குறுக்கு விசாரணை.. உயர் நீதிமன்றம் மன்னிப்பு Source link

மளிகை பொருட்கள் விலை கிடுகிடுவன உயர்வு..!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!!

சென்னை கோயம்பேடு பகுதியில் உணவு தானிய வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆந்திரா, மகராஷ்டிரா மாநிலங்கள், ஊட்டி, தேனி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து லாரிகள் மூலம், மிளகாய், தனியா, உளுத்தம் பருப்பு, வெந்தயம் போன்ற மளிகை பொருட்கள் தினமும் வருகின்றன. இந்த நிலையில், ஜிஎஸ்டி உயர்வால், மளிகை பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மிளகாய் ரூ.350-க்கும், தனியா ரூ.250-க்கும், மிளகு ரூ.550-க்கும், ஏலக்காய் ரூ.1,200-க்கும், லவங்கம் ரூ.750-க்கும், அண்ணாச்சி … Read more

கரூர், திருப்பூர், காஞ்சியில் ஜவுளி ‘ஏற்றுமதி மையங்கள்’ அமைக்கும் பணி தீவிரம்: சர்வதேச மாநாட்டில் முதல்வர் தகவல்

சென்னை: “வெளிமாநில மற்றும் வெளிநாட்டு தொழில்முனைவோர்கள் அனைவரும் தமிழகத்தில் முதலீடு செய்து ஜவுளித் தொழில் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும்” என்று என்று சர்வதேச மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். மேலும், “தமிழகத்தில் ஜவுளி ஏற்றுமதியினை பன்மடங்கு அதிகரிக்க கரூர், திருப்பூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற நகரங்களில் ‘ஏற்றுமதி மையங்கள்’ (Export Hub) அமைக்கக்கூடிய பணிகளையும் விரைந்து செயல்படுத்தி வருகிறோம்” என்று அவர் கூறினார். தொழில்நுட்ப ஜவுளி தொடர்பான சர்வதேச மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

உயிருள்ள வரை காங்கிரஸ்… சென்டிமென்ட்டை பிழிந்த எம்எல்ஏ!

சென்னையி்ல் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் சமீபத்தில் நடைபெற்ற மோதல் விவகாரத்துக்கு, நெல்லை மாவட்டம் நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தான் காரணம் என மாநில தலைமை குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டை அடுத்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் நேற்று ஆஜராகும்படி ரூபி மனோகரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர் நேரில் ஆஜராகாத காரணத்தால், ரூபி மனோகரனை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை குழு … Read more