சிதம்பரம் கோயிலில் நந்தனார் நுழைந்த வாயிலின் பூட்டு உடைப்பு: இளைஞரிடம் போலீஸ் விசாரணை

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் நந்தனார் நுழைந்த வாயில் என கூறப்படும் கதவில் பூட்டை உடைத்த இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிதம்பரம் நடராஜர் கோயில் தெற்கு வாயில் அருகே நந்தனார் நுழைந்த வாயில் என கூறப்படும் வாயிலை தீட்சிதர்கள் அடைத்து வைத்துள்ளனர். மேலும் அடைத்து வைத்துள்ள இந்த இடத்தில் மரத்திலான பெரிய கதவு ஒன்று அமைத்துள்ளனர். நந்தனார் நுழைந்த வாயிலை திறக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பல்வேறு … Read more

கட்சி தொண்டர்கள் தாக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது: ரூபி மனோகரன் பேட்டி!

கட்சியிலிருந்து நீக்கப்படுவதற்கு சற்று நேரத்துக்கு முன்னர் ரூபி மனோகரன் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் வருகை தந்தார் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ரூபி மனோகரன். நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்புள்ள இந்திரா காந்தி மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வருவதாக தகவல் வந்ததை தொடர்ந்து காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை பூட்டிவிட்டு நிர்வாகிகள் … Read more

தமிழகத்தில் மீண்டும் மழையா? 4 நாட்களுக்கான வானிலை ரிப்போர்ட் இதோ

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது. மழை அதிகம் பெய்த மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று (23.11.2022) தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய  காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தின் மேல் நகர்ந்து இன்று காலை வலுவிழந்தது.  வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று (24.11.2022) வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு … Read more

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பஞ்சாபி தாபாவில் திடீர் தீ விபத்து..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பட்டறை மேடு பகுதியில் உள்ள கோல்டன் பஞ்சாபி தாபாவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தந்தூரி அடுப்பில் இருந்து மளமளவென பரவிய தீயால் ஓட்டலின் கட்டடங்கள் எரிந்து சேதமடைந்தன. சம்பவ இடத்துக்கு சென்ற திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

”பொருளே வாங்கல பில் மெசேஜ் மட்டும் வருது”-புகாரின் பேரில் நியாயவிலை கடைகளுக்கு எச்சரிக்கை

நியாயவிலைக் கடைகளில், பொருட்கள் வாங்காமல் வாங்கியதாக குறுஞ்செய்தி பெறப்படுவதாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலி பில் போடும் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் PO கருவிகள் நிறுவப்பெற்று Biometric முறை மூலம் கட்டுப்பாட்டுப் பொருட்களும் சிறப்புப் பொது விநியோகத் திட்ட பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படாத பொருட்கள் வழங்கப்பட்டதாக குறுஞ்செய்தி வருவதாக TN மக்கள் … Read more

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தின் மேல் நகர்ந்து இன்று காலை வலுவிழுந்தது. வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக, இன்று வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு … Read more

தென்காசியில் சோகம்.. எம்எல்ஏ வாகனம் மோதி 4 வயது சிறுவன் பலி..!

தென்காசியில், காங்கிரஸ் எம்எல்ஏ பழனிக்கு சொந்தமான டிராக்டர் மோதிய விபத்தில் வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் கீழ சுரண்டை பகுதியில் உள்ள குளங்களில் அதிகமான அளவில் சரல் மண் வெட்டி எடுத்து தென்காசி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பழனிக்கு சொந்தமான எஸ்பிஎன் சேம்பர் குவாரிக்கு அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், அவ்வாறு மணல் ஏற்றிச் சென்ற எம்எல்ஏ பழனிக்கு சொந்தமான டிராக்டர் ஒன்று கீழ சுரண்டை … Read more

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை: பொருளாதார நிபுணர்களுடன் நிதியமைச்சர் பிடிஆர் ஆலோசனை

சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதுவரை இது தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என உரையாற்றினார். … Read more

Breaking: நடிகர் விஜய்யின் வாரிசு படத்துக்கு நோட்டீஸ்..!

அனுமதி பெறாமல் 5 யானைகளை பயன்படுத்தி காட்சிகள் படமாக்கப்பட்டதாக வந்த புகாருக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவு பிரபல நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தெலுங்கு இயங்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கிய இந்த படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், வாரிசு படத்தை ஆந்திராவில் வெளியிட தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் வாரிசு படத்துக்கு அடுத்தடுத்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. வாரிசு … Read more