பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகளை பட்டாசு வெடித்து காட்டுக்குள் விரட்டிய வனத்துறையினர்..!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே விளைநிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகளை, வனத்துறையினர் பட்டாசு வெடித்து காட்டுக்குள் விரட்டினர். ஈச்சம்பள்ளம் கிராமத்தில் முருகேசன் என்பவரது விளைநிலத்தில் புகுந்த ஒரு குட்டி யானை உட்பட 4 காட்டு யானைகள், பயிர்களை மிதித்து சேதப்படுத்தின. யானைகளின் பிளறல் சத்தம் கேட்டு அச்சமடைந்த கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில், வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானைகளை அருகிலுள்ள மொரப்பூர் காப்புக்காட்டிற்கு விரட்டினர். Source link

மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளைப் பெற வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டையில் பொது சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொசுவலை மற்றும் போர்வைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னை மாநகராட்சியில் 3 லட்சம் கொசுவலைகள் நீர்நிலைகளில் ஓரங்களில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் சைதாப்பேட்டையில் 23 ஆயிரம் பேருக்கு கொசு … Read more

கனமழைக்கு பதில் ஜில் கிளைமேட்: வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரிக்கான அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தனர். ஆனால் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழுந்த நிலையில் கனமழைக்கான அறிவிப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. கனமழை பெய்யாத நிலையில் கடந்த இரு நாள்களாக சென்னையின் வெப்பநிலை மிகவும் குறைந்து ஊட்டி, கொடைக்காணல் போல் காட்சியளிக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மையம்! சென்னை வானிலை … Read more

திருப்பத்தூரில் கடந்த 3 மாதங்களில் காணாமல் போன ரூ.37.49 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் கடந்த 3 மாதங்களில் காணாமல் போன ரூ.37 லட்சத்து 49 ஆயிரத்து 800 மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டது. காணாமல் போன 163 செல்போன்களையும் உரியவர்களுக்கு மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் ஒப்படைத்தார்.

கோவை: கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் 6 பேரை காணொளி மூலம் ஆஜர்படுத்த முடிவு!

கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரை இன்று கானொளி காட்சி மூலம் ஆஜர் படுத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த மாதம் அதிகாலையில் கார் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இதில் உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த ஜமேஷா முபின் (28) என்ற பொறியியல் பட்டதாரி பலியானார். இதையடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க தொடங்கியது. விசாரணையில் ஜமேஷா … Read more

பா.ஜ.க பொறுப்புகளில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நீக்கம்: அண்ணாமலை அறிவிப்பு

பா.ஜ.க பொறுப்புகளில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நீக்கம்: அண்ணாமலை அறிவிப்பு Source link

#பெரம்பலூர் : வளர்த்தவரை காக்க பாம்புடன் போராடி வென்ற பூனை.! 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயி சிவகுமார் தன்னுடைய குடும்பத்துடன் அறநாரை தெருவில் வசித்து வந்துள்ளார். அவரது வீட்டில் செல்லமாக ஒரு பூனை வளர்த்து வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் தனது குடும்பத்துடன் அவர் தொலைக்காட்சி பார்த்து பொழுது போக்கிக் கொண்டிருந்தார்.  அப்போது காலை நேரத்தில் ஒரு பாம்பு வீட்டுக்குள் நுழைய முயன்றது. இந்த பாம்பை பார்த்த வளர்ப்பு பூனை அந்த பாம்புடன் சேர்ந்து கடுமையாக சண்டை போட்டது. அப்போது பூனையின் சீறல் சத்தத்தை கேட்டு … Read more

இனி சாலைகளில் மாடுகள் சுற்றினால் ரூ.3,000 வரை அபராதம் விதிக்கப்படும்..!!

வீடுகளில் மாடுகளை வளர்க்காமல், அவற்றை காலையில் அவிழ்த்து விட்டு விடுகின்றனர். இவை கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிவதால், போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி சிறு விபத்துகள் ஏற்படுகின்றன. இது குறித்து, மாநகராட்சி நிா்வாகத்துக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன. ஏற்கனவே, நகராட்சி நிர்வாகம், பல முறை மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளரை எச்சரித்தும் மாடுகளை தெருவில் விடுவது நிற்கவில்லை. இந்நிலையில் சாலையில் மாடுகள் சுற்றித்திருந்தால் பறிமுதல் செய்யப்படும் என ஓசூர் மாநகராட்சி அறிவித்துள்ளது. மாடுகள் பறிமுதல் செய்து ரூ.1,000 முதல் … Read more

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கடும் பனிமூட்டம்..!

தமிழகத்தில், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கொடைக்கானலில் இன்று அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. திருப்பூரில் இன்று அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் ஏற்பட்டதால் எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டது. இந்த பனிப்பொழிவு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நிலவியது.   கோயம்புத்தூரில் புறநகர் பகுதிகளான நஞ்சுண்டாபுரம், போத்தனூர் உள்ளிட்ட இடங்களில் பனிமூட்டத்தினால் சாலைகள் மறைக்கப்பட்ட நிலையில் வாகன ஓட்டிகள் முகப்புவிளக்கை எரியவிட்டபடி வாகனங்களை மெதுவாக ஓட்டிச்சென்றனர்.   மலைப்பிரதேசமான … Read more

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது: தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: நேற்று (நவ.21) தென் மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ.22) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு … Read more