வனத்துறையின் 335 ஏக்கர் நிலம் தனி நபருக்கு மாற்றம்! அதிகாரிகளுக்கு அழுத்தம் தந்த அரசியல்வாதி யார்?

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் ரூ70.61 கோடி மதிப்புள்ள 182 ஏக்கர் அரசு நிலம் மோசடி முறையில் தனி நபருக்கு பெயர் மாற்றம் செய்ததாக வருவாய் துறை அதிகாரிகளாக பணிபுரிந்த ஜெயப்பிரதாப், ஆனந்தி உட்பட 14 பேர் மீது கடந்த 2021 ஆம் ஆண்டு மாவட்ட குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதன் காரணமாக கைது செய்யப்பட்ட 14 பேர் மீது கடந்த ஜனவரி மாதம் சிபிசிஐடி … Read more

சாலமன் தீவு பகுதியில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!

சாலமன் தீவுகளில் உள்ள தெற்கு மலாங்கோ பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா ‘நெருப்பு வளையம்’ என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் அமைந்துள்ளது. இதனால் அங்கு நிலநடுக்கம் என்பது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. பெரும்பாலும் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும், சில நேரங்களில் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெரிய அளவில் உயிர் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சாலமன் தீவுகளில் உள்ள … Read more

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.10,000 அபராதம் -நெல்லை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

நெல்லை மாநகராட்சிக்கு உள்பட்ட சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சாலையில் பிடிபடும் கால்நடைகளின் உரிமையாளர்கள் தங்களது ஆதார் அட்டை, உறுதிமொழி கடிதத்துடன் ஒரு வாரத்திற்குள் 10,000 ரூபாய் அபராதம் செலுத்தி கால்நடைகளை திரும்பிப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கால்நடைகள் பொது ஏலத்தில் விடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். Source link

பயங்கரவாதிகளின் புகலிடமாகும் தமிழகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: பயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறி வருகிறது என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகஉளவுத் துறை ஆழ்ந்த உறக்க நிலையில் உள்ளது. இதனால், தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. மங்களூரு குண்டுவெடிப்பு குறித்த முதல்கட்ட விசாரணையில், ஷரீக், போலி அடையாள அட்டையை காட்டி, கோவையில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. கோவை கார் வெடிப்பு ஒரு பயங்கரவாத செயல் என்று பாஜக ஆரம்பத்தில் … Read more

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான 6 பேரை இன்று காணொலி மூலம் ஆஜர்படுத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு

கோவை : கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான 6 பேரை இன்று காணொலி மூலம் ஆஜர்படுத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கோவை மத்திய சிறையில் இருந்து 6 பேரையும் என்.ஐ.ஏ. நீதிபதி முன்பு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜர்படுத்த முடிவெடுத்துள்ளனர்.

விளம்பரத்திற்காக வீட்டின் முன் மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய இந்து முன்னணி நிர்வாகி கைது!

கும்பகோணத்தில் இந்து முன்னணி பிரமுகர் தன்னுடைய வீட்டில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்பட்ட நிலையில், தன் வீட்டின் முன் தானே மண்ணெண்ணெய் பாட்டில் வீசியது அம்பலமானதால் போலீசார் கைதுசெய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பஞ்சநாதன் மகன் சக்கரபாணி (38). கொத்தனார் வேலைசெய்து வரும் இவர், இந்து முன்னணியின் மாநகர செயலாளராக கடந்த ஏழு ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை சக்கரபாணி வீட்டு வாசலில் மண்ணெண்ணெய் வாசனையுடன், கண்ணாடி … Read more

அனைத்து சாதியினருக்கும் சமமான இட ஒதுக்கீடு! ஆலோசனையில் இறங்கிய ஸ்டாலின்!

தமிழகத்தில் முன்னேறிய வகுப்பினர் அல்லாத பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், அருந்ததியர், முஸ்லிம்கள் என 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு கொண்டுவந்த ஏழைகளுக்கான 10 சதவீதம் இட ஒதுக்கீடு செல்லும் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் “10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு சமூக நீதிக்கான போராட்டத்தில் ஒரு பின்னடைவு” என … Read more