மாணவர்கள் இருவரிடையே ஏற்பட்ட மோதல்.. கீழே தள்ளி விட்டதில் வலிப்பு ஏற்பட்டு பிளஸ் 2 மாணவர் உயிரிழந்த பரிதாபம்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, அரசு பள்ளி மாணவர்கள் இருவரிடையே ஏற்பட்ட மோதலில், ஒரு மாணவர் உயிரிழந்தார். கப்பல்வாடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் பிளஸ் 2 மாணவர்கள் இருவர் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில், கீழே விழுந்த கோபிநாத் என்ற மாணவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அவரை மருத்துவமனையில் ஆசிரியர்கள் அனுமதித்துள்ளனர். மாணவன் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். … Read more

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்களுக்கு ஊதிய உயர்வு: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் 

சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,” தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் போதிலும், அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றாதது வருத்தமளிக்கிறது. ஒருங்கிணைந்த … Read more

ரேஷன் கார்டுதாரர்களுக்கு செம குட் நியூஸ் – தமிழக அரசு சூப்பர் திட்டம்!

“சத்தான உணவுப் பொருட்களை ரேஷன் கடைகளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என, தமிழக கூட்டுறவுத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். ரேஷன் கடைகளில், 2 மற்றும் 5 கிலோ காஸ் சிலிண்டர் விற்பனை துவக்க விழா, கோவை சிந்தாமணியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் … Read more

சமையற்கூடமாகும் பழநி அடிவார சாலை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பழநி: பழநி அடிவார சாலைகளில் உணவு சமைக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி கோயிலுக்கு தற்போது ஐயப்ப பக்தர்களின் வருகை துவங்கி உள்ளது. தொடர்ந்து தைப்பூசம், பங்குனி உத்திரம், கோடை விடுமுறை  என வரும் மே மாதம் வரை பழநி அடிவார பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு வரும் பக்தர்கள் பெரும்பாலாலும் ஒரு குழுவாகவே வருகின்றனர். இவர்கள் பழநி அடிவாரத்தில் உள்ள ஐய்யம்புள்ளி சாலை, … Read more

எத்தனை காலம் தொடரும் இந்த கொடுமை! பெண் குழந்தை என்பதால் கருக்கலைத்த பெண் உயிரிழப்பு

வேப்பூர் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு மூன்றாவதும் பெண் குழந்தை என்பது தெரிய வந்ததன் பேரில், கருக்கலைப்பு செய்ததால் தொடர் ரத்தப்போக்கு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த தம்பதி கோவிந்தராஜ்-அமுதா( 28 ). இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தை இருந்த நிலையில், தற்போது கருவுற்று 4 மாத கர்ப்பிணியாக இருந்த அமுதா கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் வடிவேலன் என்பவரின் மருந்தகத்தில் சட்ட விரோதமாக … Read more

இரட்டை இலை தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும்; ஓ.பி.எஸ் இடம் கூறிய தினகரன்

இரட்டை இலை தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும்; ஓ.பி.எஸ் இடம் கூறிய தினகரன் Source link

திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய காதலியை தாக்கிய காதலன் கைது.!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருவம் எழில்நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரமன். இவரது மகள் சரண்யா. இவர் எம்.பி.ஏ., முடித்துவிட்டு சென்னையில் உள்ள சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அப்போது, இவருக்கு திருச்சி வாசன் நகர் 11-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் கிஷோர்  என்பவருடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டது.  இந்நிலையில் கிஷோரும் சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது இருவருக்குமான பழக்கம் சற்று நெருக்கமானது. நாளடைவில் இந்த பழக்கம் … Read more

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் பார்க்க பணம் கேட்பதாக குற்றசாட்டு..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தைகளை உறவினர்கள் பார்க்க வேண்டுமெனில் மருத்துவமனை ஊழியர்களுக்கு பணம் கொடுக்க வேண்டியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குழந்தைகளை பார்ப்பதற்காக உறவினர்கள் காலை முதல் மாலை வரையில் காத்திருக்க வைக்கப்படுவதாகவும், பணம் கொடுத்தால் குழந்தையை பார்க்க அனுமதிப்பதாகவும் குற்றம்சாட்டிய உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குழந்தை பெற்ற தாய்மார்களின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் , பணம் வசூலித்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் குழந்தைகளை … Read more

காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்

சென்னை: தமிழக அரசு காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, சட்டம் ஒழுங்கை பேணிக் காக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாருமாகிய எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,” அசைவ பிரியர்களுக்காக ஆடு, கோழி வெட்டப்படுவது போல், மனிதர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்படுவது விடியா திமுகவின் காட்டாட்சியில் நாள்தோறும் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. நேற்று (18-11-2022) காலை, சென்னை எழும்பூர் காவல்நிலைய வாசலிலேயே, … Read more

வெறித்தனமாக இறங்கிய விஜய்; நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் பட்டாளத்தை கையில் வைத்துள்ள நடிகர்களில் ஒருவராக விஜய் உள்ளார். பீஸ்ட் படத்துக்கு பிறகு வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார், பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் … Read more