டெல்லியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு செக் – எடப்பாடி பழனிசாமி மூவ்..!

அதிமுக பொதுக்குழு வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். ஒற்றைத் தலைமை அதிமுகவில் 4 ஆண்டுகளுக்கு பிறகு, ஒற்றைத் தலைமை உருவாகி உள்ளது. கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி, சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக, பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த மற்றும் அவரது ஆதரவாளர்கள், அதே நாளில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். எதிர்ப்பு அதிமுக … Read more

கண்ணமங்கலம் அடுத்த படவேடு அருகே ஆற்று வெள்ளத்தில் இறங்கி சடலத்தை சுமந்துசென்ற மக்கள்: சிறுபாலம் அமைக்க கோரிக்கை

கண்ணமங்கலம்: திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஊராட்சிக்கு உட்பட்ட ராமநாதபுரம் கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன்(40), விவசாயி. இவரது மனைவி சந்திரா(35). இவர்களுக்கு யுவராஜ்(14) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பரசுராமன் நேற்று இறந்தார்.   இதையடுத்து உறவினர்கள் பரசுராமன் சடலத்தை கமண்டல நதிக்கரையில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் கொண்டு சென்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக கமண்டல நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் செண்பகத்தோப்பு அணைக்கட்டிலிருந்து … Read more

குப்பை கொட்டும் இடத்தில் புத்தகப்பைகள்.. அரசுப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாத அவலம்

ஆம்பூர் அருகே போதிய வகுப்பறைகள் இல்லாததால் அரசு மேல் நிலைப்பள்ளி பகுதி நேர பள்ளியாக செயல்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. குப்பைகள் கொட்டும் இடத்தில் புத்தகப்பையை வைத்து மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியம் தேவலாபுரம் ஊராட்சியில் இயங்கிவந்த அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த 2013 ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண், பெண் இருபாலர் என 1300 … Read more

ஆண்களுக்கு ஒரு தினம் இருக்குனு நினைச்சாலே ஆனந்த கண்ணீர் வருது; ட்ரெண்டிங் மீம்ஸ்

ஆண்களுக்கு ஒரு தினம் இருக்குனு நினைச்சாலே ஆனந்த கண்ணீர் வருது; ட்ரெண்டிங் மீம்ஸ் Source link

சேலம் : பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம்.!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் மாரிமுத்து என்பவர் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்தப் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் சேலம் மாவட்ட … Read more

கூட்டுறவு நிறுவன ஊழியர்கள் பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி அரசு கூட்டுறவுத் துறை 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மற்றும் கண்காட்சி திறப்பு விழா கடற்கரை சாலை காந்தி திடலில் இன்று நடைபெற்றது. கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆட்சியர் வல்லவன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தையா உட்பட பலர் கலந்து கொண்ட னர். விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியது: ‘‘புதுச்சேரியில் பாண்டெக்ஸ் தயாரிப்பு பொருட்களுக்கு தனி மவுசு இருந்தது. சர்க்கரை ஆலை லாபகரமாக … Read more

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம் இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பாரம்பரிய பண்டிகையன்று வீடுகளில் தீபங்கள் ஏற்றப்படும். அந்த தீப ஒலிகள் தீய சக்திகளை விரட்டும் திறன் கொண்டவை என்பது இந்துக்களின் நம்பிக்கை. இந்த ஆண்டு கார்த்திகை தீபம் டிசம்பர் 6 ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று கொண்டாடப்படவுள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வர சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த … Read more

மஞ்சூர்- கோவை சாலையில் குட்டிகளுடன் வழிமறித்து நின்ற காட்டு யானைகள்: ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மஞ்சூர்: மஞ்சூர்- கோவை சாலையில் குட்டிகளுடன் காட்டு யானைகள் வழிமறித்து நின்றதால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் இரண்டு குட்டிகளுடன் 5 காட்டு யானைகள் கடந்த சில தினங்களாக நடமாடி வருகின்றன. கெத்தை, பெரும்பள்ளம், முள்ளி ஆகிய பகுதிகளில் உலா வரும் இந்த காட்டு யானைகள் நடுரோட்டில் நின்று கொண்டு அவ்வழியாக சென்று வரும் … Read more

கறவை மாட்டுக்கு அரசு சார்பில் ரூ.14 ஆயிரம் வரை வட்டியில்லா கடன்! அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவிப்பு!

தமிழகத்தில் கறவை மாடு வைத்திருப்போர் தங்களது மாடுகளை பராமரிப்பதற்காக ரூ.14,000 வரை வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்படுவதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக முழுவதும் அரசு சார்பில் கூட்டுறவு வார விழா நடைபெற்று வருகிறது. அதேபோன்று தர்மபுரி மாவட்டத்தில் 69 ஆவது கூட்டுறவு விழா தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் … Read more

மாணவி மரணம் – கைது செய்தால் போராட்டம் என மருத்துவர்கள் அறிவிப்பு!!

மாணவி பிரியா மரண வழக்கில் டாக்டர்களை கைது செய்தால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மரணம் தொடர்பாக சங்கம் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. முதல்வரும், தமிழக அரசும் இறந்த குடும்பத்தாருக்கு வழங்கிய ஆறுதலையும் உதவி தொகைக்கும் சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. அதே சமயம் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலில் மருத்துவ சிகிச்சையின் போது … Read more