சிறுத்தையை வேட்டையாடி தனது வீட்டின் மொட்டை மாடியில் அதன் தோலை காய வைத்த பெரும் அதிர்ச்சி சம்பவம்..!

தேனி மாவட்டம் அம்மாபட்டியில் முன்னாள் ஊராட்சி மன்ற கவுன்சிலர் துரைப்பாண்டியன் வீட்டின், மொட்டை மாடியில் வேட்டையாடப்பட்ட சிறுத்தையின் தோல் காய வைக்கப்பட்டிருந்தது குறித்து, வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவாரத்திற்கு மேலாக துரைப்பாண்டியனின் வீட்டு மாடியில் சிறுத்தையின் தோல் காயவைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் அவரது வீட்டிற்கு சென்ற போது, துரைப்பாண்டியன் தலைமறைவானது தெரியவந்தது. இதனையடுத்து, மாடியில் மஞ்சள் பூசப்பட்ட நிலையில் இருந்த சிறுத்தையின் தோலை பறிமுதல் செய்த வனத்துறையினர், இந்த சிறுத்தை எங்கே, எப்போது, … Read more

மாணவி பிரியா மரணம் | முன்ஜாமீன் கோரி மருத்துவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு 

சென்னை: கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சையளித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மருத்துவர்கள் பால் ராம்சங்கர் மற்றும் சோமசுந்தர் ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவிக்குமார்- உஷாராணி தம்பதி மகள் பிரியா (17), சென்னை ராணி மேரி கல்லூரியில் பி.எஸ்சி. உடற்கல்வியியல் பட்டப் படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். கால்பந்து வீராங்கனையான இவருக்குப் பயிற்சியின்போது வலது கால் மூட்டு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக கொளத்தூர் … Read more

குடும்ப அட்டை தாரர்களுக்கு குஷி தகவல்… நியாய விலை கடைகளில் புது திட்டம்..

கோவையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியது; இரண்டு மற்றும் ஐந்து கிலோ கேஸ் சிலிண்டர் நியாய விலை கடைகளில் விற்பனை செய்யும் திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தோடு இணைந்து மாநில அரசு இத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதனால் தொழிலாளர்கள், சாலை மற்றும் நடைமேடைகளில் கடை அமைப்பவர்கள், மாணவர்கள், வெளியூர்களில் … Read more

சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு ₹5 ஆயிரம் அபராதம்-வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

வேலூர் : வேலூர்-ஆற்காடு சாலை, ஆரணி சாலை, தொரப்பாடி சாலை, காட்பாடி சாலை போன்ற முக்கிய போக்குவரத்து மிகுந்த சாலைகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர்.  பல்வேறு பகுதிகளில் கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிகிறது. சாலைகள் மட்டுமின்றி பொதுஇடங்களிலும் மக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் இடையூறாக கால்நடைகள் சுற்றி திரிகின்றன. இந்த முக்கிய சாலைகளில் சுற்றிதிரியும் கால்நடைகளால் வாகனங்களில் வருபவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து எழுந்து செல்கின்றனர். இந்நிலையில் முக்கிய சாலைகளில் தினமும் அடிக்கடி விபத்துகள் … Read more

சென்னை: மருத்துவர்கள் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை இறப்பு? உறவினர்கள் சாலைமறியல்

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்ததற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றஞ்சாட்டி, சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தின் சாவியை பிடிங்கிக் கொண்டு போரட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை 14ஆம் தேதி திருநீர்மலையை சேர்ந்த ஆஷா (எ) ஆனந்தி பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளார். அப்போது உடல் நிலை பலவீனமாக இருப்பதாக கூறி ரத்தம் தேவைபடுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரத்தம் ஏற்பாடு செய்யபட்டு … Read more

அரியலூர், செந்துறையில் நாளை மின் தடை.. எந்த பகுதியெல்லாம் தெரியுமா..?

அரியலூர், தேளுர் மற்றும் செந்துறை துணை மின் நிலையங்களில் நாளை (நவ.19-ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ள காரணமாக, காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின்சார விநியோகம் தடை செய்யப்படுவதாக ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். அதன்படி, அரியலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான கயர்லாபாத், ராஜீவ் நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜ நகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சி நத்தம், சிறுவூர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி … Read more

பதவி நீக்கம் செய்யப்பட்ட மல்லியம்பத்து ஊராட்சி தலைவர் விக்னேஷ்வரன்.

திருச்சி: மல்லியம்பத்து ஊராட்சியில் நிதி முறைகேடுகள் நிரூபணம் ஆன நிலையில் மல்லியம்பத்து ஊராட்சி தலைவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். திருச்சி மாநகர் அருகிலுள்ள ஊராட்சிகளில் குடியிருப்புகள் அதிகமாக உள்ளன வரிவசூல், பிளான் அப்ரூவலுக்கு ஆன்லைன் ரசீது இல்லாததால் தலைவர்கள், கிளார்க்குகள் தனித்தனி ரசீது புத்தகம் வைத்துக் கொண்டு வரி வசூல் செய்தும், பிளான் அப்ரூவலும் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அந்தநல்லூர் ஒன்றியம், மல்லியம்பத்து ஊராட்சி தலைவர் விக்னேஷ்வரன் வீட்டு வரி, … Read more

தொழில் வளர்ச்சியை முன்னெடுத்து செல்வதும் திராவிட மாடல் தான்: ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (18.11.2022) சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “1920-ஆம் ஆண்டு தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு எனப்படும் தொழிலதிபர்கள் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. 1920 என்பது மிகமிக முக்கியமான ஆண்டு! திராவிட இயக்கத்தின் தாய் அமைப்பான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் நீதிக்கட்சியானது முதன்முதலாக ஆட்சி அமைத்த ஆண்டு 1920-ஆம் ஆண்டு. அப்போதுதான் பல்வேறு தொழில் அமைப்புகள் இங்கு உருவானது. இத்தகைய … Read more

நவம்பர் 20,21-ல் கனமழை பெய்யக்கூடும் என்ற தகவலையடுத்து தஞ்சசையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பேட்டி

கும்பகோணம்: நவம்பர் 20,21-ல் கனமழை பெய்யக்கூடும் என்ற தகவலையடுத்து தஞ்சசையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கும்பகோணத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேட்டியளித்துள்ளார்.