வட இந்திய தொழிலாளர்கள் படையெடுப்பு: விழித்துக் கொள்ளுமா தமிழக அரசு?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான வட இந்திய தொழிலாளர்கள் வந்திறங்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பிற்காக தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்கும் வட இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, கோவை போன்ற பெரு நகரங்கள் மட்டுமல்லாமல் குக்கிராமங்கள் வரை வட இந்திய தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் வேலை பார்த்து வருவது கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளது. வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் தமிழ்நாடு போன்ற வளர்ச்சியடைந்த மாநிலத்துக்கு … Read more

நடிகைகளிடம் பகிரங்க மன்னிப்பு கேளுங்கள் – திமுக பேச்சாளருக்கு நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் மனோதங்கராஜ் தலைமையில் அண்மையில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக நிர்வாகியான சைதை சாதிக் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு, பாஜக உறுப்பினர்கள் கௌதமி, நமிதா ஆகியோர் பற்றி ஆபாசமாக பேசினார். அவரது பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் அவரை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைதாகி விடுதலையானார்.  இந்தச் சூழலில் சைதை சாதிக் … Read more

ஆனைமலையில் ஆண்டுக்கு 2 போக நெல் சாகுபடி குறைந்த வாடகையில் நெல் அறுவடை இயந்திரம் வழங்கப்படுமா?

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை சுற்றுவட்டாரத்தில் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட பகுதியில், ஆண்டுக்கு இரண்டுபோக நெல் சாகுபடியால், மானியத்தில் கதிர் அறுக்கும் இயந்திரம்  வழங்க, வேளாண்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் தென்னைக்கு அடுத்தப்படியாக மானாவாரி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.  இதில் ஆனைமலை, கோட்டூர், கோபாலபுரம், அம்பாராம்பாளையம், மயிலாடுதுறை, ரமணமுதலிபுதூர், தென்சங்கம்பாளையம், காளியாபுரம், ஒடையகுளம், சேத்துமடை  உள்ளிட்ட கிராம பகுதிகளில் நெல் சாகுபடியில்  … Read more

நண்பர்களுடன் சென்றபோது சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து-2 பேர் பலி, இருவர் காயம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையின் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தநிலையில், இருவர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர், தனது நண்பர்கள் 4 பேருடன் திருநெல்வேலி நோக்கி காரில் சென்றுள்ளார். சாத்தூரில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள பெத்துரெட்டிபட்டி விளக்கில் கார் வந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் கார் கவிழ்த்து விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த … Read more

கோவை || திருமணத்திற்கு ஏற்பாடு.! காதலனோடு ஓடிய இளம்பெண்.!

கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் அடுத்த மாதம் 12-ந்தேதி திருமணம் நடத்துவது குறித்து இரு வீட்டு பெற்றோராலும் பேசி முடிவு செய்யப்பட்டது.  இதனால், இருவீட்டாரும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து வந்தனர். இதற்கிடையே, அந்த வாலிபர், தனது வருங்கால மனைவியுடன் பேசுவதற்காக விலை உயர்ந்த செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்து அவருடன் பேசி வந்தார்.  இந்நிலையில் அந்த இளம்பெண் திடீரென்று வீட்டில் இருந்து மாயமானார். … Read more

அய்யப்பன் குறித்து அவதூறு.. சுந்தரவள்ளிக்கு அபராதம்..!

சபரிமலை அய்யப்பன் குறித்து அவதூறாக பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சாளருக்கு எழும்பூர் நீதிமன்றம் 3500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சாளர் சுந்தரவள்ளி (48). இவர், கடந்த 2018-ம் ஆண்டு நடந்த கூட்டம் ஒன்றில் சபரிமலை அய்யப்பன் குறித்து அவதூறாக பேசினார். இதற்கான ‘வீடியோ’ பரவியது. இதையடுத்து, சுந்தரவள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்பினர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் … Read more

6 பேர் விடுதலையை எதிர்த்து மறுசீராய்வு மனு | மத்திய அரசுக்கு மனசாட்சியோ, மனிதாபிமானமோ இல்லை: வைகோ குற்றச்சாட்டு

சென்னை: “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்திருப்பது, மத்திய அரசுக்குக்கு மனசாட்சியோ, மனிதாபிமானமோ இல்லாததையே காட்டுகிறது” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மறைந்த தலைவர் பிரபாகரன் 68-வது பிறந்ததினத்தை முன்னிட்டு சென்னையில் அவரது உருவப்படத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், அரசியலமைப்புச் சட்ட நாளான இன்று ஆளுநரின் செயல்பாடுகளை எப்படிப் … Read more

மங்களூரு குண்டுவெடிப்பு: மதுரையில் சிறப்பு போலீசார் விசாரணை!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள நாகுரி பகுதியில் கடந்த 19ஆம் தேதி ஓடும் ஆட்டோவில் திடீரென மர்ம பொருள் வெடித்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் உயர் அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்றும், காஸ் அடுப்பு போல் உள்ள பொருள் ஒன்றும் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விபத்தில் சிக்கி, ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அதில் பயணம் செய்த பயணி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். … Read more

அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் முருகர் தேர் வெள்ளோட்டம்: பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு

திருவண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 15 லட்சம் மதிப்பீட்டில் புதுபிக்கப்பட்ட முருகர் தேர் வெள்ளோட்டம் சிறப்பு பூஜை செய்து நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகர் தேரை வடம் பிடித்து கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என்று பக்தி பரவசத்துடன் திருக்கோவிலில் நான்கு மாட விதிகளை சுற்றி இழுத்து வழிபட்டு வருகின்றனர். அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் 10 நாட்கள் … Read more