திருடியதாக 6 பேருக்கு தர்மஅடி: சிகிச்சையில் இருந்த சிறுமி உயிரிழப்பு..!
கோவில்களில் திருடியதாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். இதில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சையில் இருந்த 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளனூர் பகுதியில், சாலையோர கோவில்களில் உள்ள பொருட்களை ஒரு கும்பல் திருடிவிட்டு ஆட்டோவில் தப்பிச்செல்வதாக அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் விரட்டிச்சென்றனர். புதுக்கோட்டை அருகே மச்சுவாடி பகுதியில் அந்த ஆட்டோவை வழிமறித்து அதில் இருந்தவர்களை கைகள், கட்டைகளால் சரமாரியாகத் தாக்கினர். … Read more