கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு | விசாரணைக்கு பள்ளிக் கட்டிடம் தேவையா? – சிபிசிஐடி விளக்கம் அளிக்க உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில், பள்ளி கட்டிடம் புலன் விசாரணைக்கு தேவைப்படுகிறதா என்பது குறித்து சிபிசிஐடி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள இசிஆர் சர்வதேச பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஒருவர் மரணம் அடைந்தார். இதையடுத்து கடந்த ஜூலை 17-ம் தேதி அந்த பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை சூறையாடி, தீயிட்டு எரித்தனர். இந்தக் கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. இந்நிலையில், பள்ளி வளாகம் … Read more

தொழில் நிறுவனங்களில் தமிழ்நாட்டவருக்கே முன்னுரிமை – அமைச்சர் தங்கம் தென்னரசு!

“தமிழ்நாட்டில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் தமிழ்நாட்டவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும்,” என, தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: திருவாளர்கள் டாடா எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மின்னணு பொருட்களை உற்பத்தி செய்வதற்காக தனது தொழிற்சாலையை கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள GMR தொழிற்பூங்காவில், சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்து வருகிறது. 4,684 … Read more

ஜெயலலிதாவின் அந்த நிலைக்கு டிடிவிதான் காரணம் – சி.வி. சண்முகம்

விழுப்புரத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி சி.வி.சண்முகம்  கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ அதிமுகவை கட்டுப்படுத்தவும் ஆலோசனை கூறவும் பொதுக்குழு உள்ளது. அதிமுகவின் பொதுக்குழுதான் உச்சபட்ச தலைமை. அந்த பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ள இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ன சொல்கிறாரோ அதைத்தான் அதிமுக தொடர்கள் ஏற்றுக் கொள்வார்கள். டிடிவி தினகரன் வைத்திருப்பது கட்சி அல்ல கூட்டம். எடப்பாடியை நம்பி போகிறவர்கள் அனாதையாக போவார்கள் … Read more

கைகளை அடிக்கடி சுத்தம் செய்யவும் ‘மெட்ராஸ் ஐ’ வந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்; கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள்

நாகர்கோவில்: பருவநிலை மாற்றம் காரணமாக, குமரி மாவட்டத்திலும் தற்போது மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் வேகமாக பரவி வருகிறது.கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள கண் மருத்துவமனை பிரிவில் கடந்த 7ம் தேதி முதல் நேற்று 24ம் தேதி வரை 106 பேர் மெட்ராஸ் ஐ பாதிப்பிற்கு சிகிச்சை பெற வந்துள்ளனர். பத்மனாபபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த 20ம் தேதி முதல் நேற்று வரை 14 பேர் மெட்ராஸ் ஐ சிகிச்சைக்காக வந்துள்ளனர். பள்ளிகளில் … Read more

குழந்தை இல்லாததால் கள்ளக்காதல்.. 2-வது திருமணம்.! அதிர்ச்சியில் மனைவி தற்கொலை.!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகே காலேஜ் ரோடு விசாலாட்சி நகரில் புவனேஸ்வரி என்ற 56 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயராஜ் என்ற கணவரும், சிவசங்கரி என்ற மகளும் இருந்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன் மகள் சிவசங்கரிக்கு திருமணம் நடந்துள்ளது.  ஆனால் இதுவரை சிவசங்கரிக்கு குழந்தை பிறக்கவில்லை. நான்கு மாதங்களாக குரு மகாராஜா வேறொரு பெண்ணுடன் ஓடிப்போய் தலைமறைவாகி இருக்கிறார். அவரை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று சிவசங்கரிய பல்வேறு இடங்களில் தேடி அலைந்து … Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கு | ‘சாதி, மதம் அல்ல… சத்தியம், தர்மம்தான் முக்கியம்’ – சுவாதிக்கு நீதிபதிகள் அறிவுரை

மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான முக்கிய சாட்சியான சுவாதி, நீதித்துறை நடுவரிடம் அளித்த வாக்குமூலத்துக்கு நேர் எதிராக கூறியதால், ‘சாதி, மதம் முக்கியமல்ல, சத்தியம்தான் முக்கியம். இதனால் உண்மையைக் கூறுங்கள்’ என நீதிபதிகள் கூறினர். கோகுல்ராஜ் ஆணவக் கொலை: சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். பட்டியலினத்தை சேர்ந்தவர். இவர் தன்னுடன் படித்த நாமக்கலை சேர்ந்து வேறு சமூக பெண்ணுடன் பழகியுள்ளார். இருவரும் 23.6.2015-ல் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சந்தித்துள்ளனர். … Read more

பீமா கோரேகான் வழக்கு..அனைவரையும் விடுதலை செய்க..திருமாவளவன் கோரிக்கை.!

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பீமா ஆற்றாங்கரையில் அமைந்த கோரேகான் பீமா எனும் இடத்தில் கிழக்கிந்திய படையினருக்கும், மராத்திய படைகளுக்கும் கடந்த 1818ம் ஆண்டு போர் நடைபெற்றது. கிழக்கிந்திய கம்பெனி படையில் பெரும்பாலும் தலித்களும், மராத்திய பேஷ்வா படைகளில் ஆதிக்க சாதிகளும் இருந்தன. இந்த போரில் தலித்களின் உதவியால் ஆங்கிலேய படை வென்றது. இதையடுத்து அங்கு நிணைவுத் தூண் எழுப்பப்பட்டது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதி தலித்கள் கூடுவது வழக்கம். அப்படி கடந்த … Read more

ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும் பரவாயில்லை – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனையடுத்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதாரை இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும், 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு சிக்கல் ஏற்படும் என கூறப்படுகின்றன. இதனால் மக்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மின் வாரியத்தை அடுத்த … Read more

திருச்சியில் அடுத்தாண்டு அரசு பல் மருத்துவமனை ஆயுர்வேத கல்லூரி; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

திருச்சி: திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.12லட்சம் மதிப்பீட்டில் உணர்வு ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.  இதனை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.  32 படுக்கைகளுடன் கூடிய இ.சி.ஆர்.பி. தீவிர சிகிச்சை பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதேபோல் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சலவை இயந்திரத்தை நோயாளிகளின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: … Read more