வலுவடையும் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிறப்பித்த 17 உத்தரவுகள்

சென்னை: புயல் எச்சரிக்கை காரணமாக அனைத்து துறைகளும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக 17 உத்தரவுகளை சென்னை மாநகராட்சி ஆணையர் பிறப்பித்துள்ளார். தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (டிச.7) மாலை புயலாக வலுப்பெற கூடும் என்றும், இதன் காரணமாக 8, 9 மற்றும் 10-ம் தேதிகளில் தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 9-ம் தேதி … Read more

2,668 அடி உயர மலை மீது 2வது நாளாக மகாதீபம்; திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு: 4 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம், தொடர்ந்து 2வது நாளாக நேற்று காட்சியளித்தது. மேலும், கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில் பிரசித்திபெற்ற மகாதீப பெருவிழா நேற்று முன்தினம் நடந்தது. அதையொட்டி, அன்று மாலை 6 மணியளவில், 2,668 அடி உயர அண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது, 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்து தரிசனம் செய்தனர். வரும் 16ம் தேதி வரை … Read more

ஒற்றை ஆளாக இந்திய அணிக்கு ‘தண்ணி’ காட்டும் அதிரடி வீரர்; யார் இந்த மெஹிதி?

ஒற்றை ஆளாக இந்திய அணிக்கு ‘தண்ணி’ காட்டும் அதிரடி வீரர்; யார் இந்த மெஹிதி? Source link

ஈரோடு: வனத்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பல்.! ஒருவர் கைது.!

ஈரோடு மாவட்டத்தில் வனவிலங்குகளை வேட்டையாடிய கும்பலை பிடிக்கச் சென்ற வனத்துறையினரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வனவிலங்குகளை மர்ம கும்பல் ஒன்று வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது வனப்பகுதிக்குள் இருந்த கும்பல் வனத்துறையினரை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளனர். மேலும் அவர்களைப் பிடிக்கச் சென்ற வனத்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு … Read more

ஓட்டேரியில் பரபரப்பு..!! சினிமா ஸ்டண்ட் கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை!!

சென்னை ஓட்டேரி ஏகாந்திபுரம் 4வது தெரு பகுதியில் வசித்து வந்தவர் அரவிந்தன் (28). சினிமா ஸ்டண்ட் கலைஞரான இவர், கடந்த ஆண்டு ரீனா (28) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களாக அரவிந்தன் மதுபோதைக்கு அடிமையாகி அதிகமாக குடித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களாக மதுபோதையில் தனக்கு வாழ பிடிக்கவில்லை எனவும், தான் தற்கொலை செய்துகொள்ள போவதாகவும் தனது குடும்பத்தாரிடம் கூறிவந்தாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று காலை மதுபோதையில் வீட்டிற்கு … Read more

திருச்செந்தூரில் தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான நிலங்களை மீட்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை: திருச்செந்தூரில் ஆக்கிரமிப்பில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலத்தை 12 வாரத்தில் மீட்க வேண்டும் என அறநிலையத் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த மார்கண்டன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஆதீன நிலத்தை மீட்கவும், அந்த சொத்தை பாதுகாக்கவும் … Read more

கவர்னர் மாளிகை முன் 29ம் தேதி முற்றுகை: முத்தரசன் பேட்டி

தர்மபுரி: தர்மபுரியில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு வந்த, மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், முன்னாள் ஜனாதிபதி வெங்கையா நாயுடு, எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. இதனை நான் ஏற்கமாட்டேன் என தெரிவித்துள்ளார். ஆனால், அமித்ஷா போன்றோர் இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். காசியில் நடக்கும் தமிழ் சங்க விழாவில், தமிழுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தமிழை புகழ்ந்து பேசிய மோடியை வரவேற்கிறேன். ஆனால் கடந்த பாஜ … Read more

18 வயதிற்குள்.. பாலுறவு.? டிஜிபி முக்கிய அறிவுறுத்தல்.! 

18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு எதிரான சட்டம் தான் போக்ஸோ. இந்த சட்டமானது 18 வயதிற்கு கீழ் இருப்பவர்களை திருமணம் செய்பவர்களை கைது செய்யவும் பயன்படுத்தப்பட்டது.  அத்துடன் டீன் வயதில் காதலித்து விருப்பத்துடன் பாலியல் உறவில் ஈடுபட்டிருந்தாலும் கூட ஆணுக்கு எதிராக இந்த போக்சோ சட்டம் பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில், 18 வயதிற்கு கீழ் இருப்பவர்கள் சம்மதத்துடன் உறவில் ஈடுபட்டால் அவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு கூடாது என … Read more

“மதுரையின் ஓர் அடையாளமாகவே மாறியவர் ஓவியர் மனோகர் தேவதாஸ்” – முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை: பிரபல ஓவியரும், எழுத்தாளருமான ‘பத்மஸ்ரீ’ மனோகர் தேவதாஸ் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பிரபல ஓவியரும் எழுத்தாளருமான ‘பத்மஸ்ரீ’ மனோகர் தேவதாஸ் (86) விழித்திரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இயற்கை எய்தினார் என்று அறிந்து மிகவும் துயருற்றேன். மரபுக் கட்டடங்களை ஓவியமாக வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர் மனோகர் தேவதாஸ். தமது முப்பது வயதிலேயே ரெட்டினிஸ் பிக்மென்டோசா நோயால் பாதிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வைத் … Read more